Home
Gadgets

இந்தியா: ரூ.899/- முதல் மூன்று சியோமி பேக்பாக்ஸ் அறிமுகம்.!

ரூ.1,999/- மதிப்புள்ள இந்த பேக்பாக் ஆனது நவீன மெஷ் ஸ்டைலிங் மற்றும் வாட்டர் ப்ரூப் திறனும் கொண்டுள்ளது.

By Muthuraj

சீன நிறுவனமான சியோமி, இந்திய சந்தையை கைப்பற்றும் அதன் முயற்சிகளை இரட்டிப்பாக்கியுள்ளது என்பது போல் தெரிகிறது. அதன் ஒரு பகுதியாக, சியோமி இன்று அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் சில புதிய அக்செசெரீஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியா: ரூ.899/- முதல் மூன்று சியோமி பேக்பாக்ஸ் அறிமுகம்.!

அறிவிக்கப்பட்டுள்ள அக்செசெரீஸ்களின் பட்டியலில், சியோமி நிறுவனத்தின் மூன்று பேக்பாக்ஸ்களும் இடம்பெற்றுள்ளது. அவைகள் மொத்தம் மூன்று மாதிரிகளில் வெளியாகியுள்ளது. இதில் சுவாரஸ்யமான விடயம் என்னவெனில், சியோமி நிறுவனம் எப்படியெல்லாம் இந்திய சந்தைக்குள் நுழைய முயற்சிக்கிறது, ஆதிக்கம் செலுத்த விரும்புகிறது என்பதை மறைதிரையின்றி காண முடிகிறது. இதுவொன்றும் முதல்முறையல்ல என்பதும் கடந்த ஆண்டு, சியோமி ஒரு பிஸ்னஸ் பேக்பாக்கை அறிமுகம் செய்ததும் அது நுகர்வோர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

மி டிராவல் பேக்பாக்

இதன் பெயர் குறிப்பிடுவதுபோல், இதுவொரு டிராவல் பேக்பாக் ஆகும். இது உங்களின் பயணத் தேவைகளை பூர்த்தி செய்யும் வடிவமைப்பை பெற்றுள்ளது. ரூ.1,999/- மதிப்புள்ள இந்த பேக்பாக் ஆனது நவீன மெஷ் ஸ்டைலிங் மற்றும் வாட்டர் ப்ரூப் திறனும் கொண்டுள்ளது. மழையில் இருந்து உங்கள் உடமைகளை பாதுகாப்பது மட்டுமின்றி இந்தபாக்பேக் ஆனது கூடுதல் இடவசதியையும் வழங்குகிறது. அதாவது ஒரு 14 அங்குல மடிக்கணினியை கூட எளிமையாக வைத்துக்கொள்ள முடியும். குடை அல்லது தண்ணீர் பாட்டில் வைப்பதற்கான பாக்கெட் கொண்டுள்ள இந்த பேக்பாக் ஆனது இரண்டு நிலையான - ப்ளூ அண்ட் கிரே - வண்ணங்களில் வாங்க கிடைக்கிறது.

மி சிட்டி பேக்பாக்

இது டிராவல் பேக் உடன் ஒப்பிடும் போது நிறையை வேறுபடுகிறது. மொத்தம் நான்கு பெட்டிகளை கொண்டுள்ள இந்த பேக் ஆனது ஒரு நேர்த்தியான வடிவமைப்பை பெற்றுள்ளது. இதன் பின்புறத்தில், இரண்டு டாப்ளெட்கள் மற்றும் ஒரு 14 அங்குல மடிக்கணினியை வைக்கும் அளவிற்கு இடம் இருக்கிறது. தோள்களில் உணரப்படும் சுமை உணர்வை குறைப்பதற்கான இபிஎஸ் பில்லிங் வடிவமைப்பு கொண்டுள்ள இந்த பேக்பாக் ஆனது சிறிய மற்றும் மெல்லிய மாடல்களில் இருண்ட சாம்பல் மற்றும் லைட் கிரே ஆகிய வண்ணங்களில் ரூ.1,599/-க்கு வாங்க கிடைக்கிறது

மி கேஸூவல் பேக்பாக்

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)

அறிவிக்கப்பட்டுள்ள மூன்று பேக்பாக்குகளில் மிக மலிவானது இதுதான். வெறும் ரூ.899/-க்கு வாங்க கிடைக்கும் இந்த பேக்பாக் ஆனது மூன்று வண்ணங்களில் - பிளாக், சாம்பல் மற்றும் ப்ளூ - வெளியாகியுள்ளது. குறைவான விலை நிர்ணயத்தின் கீழ் வெளியானாலும் கூட பெரிய அளவிலான இடவசதியை வழங்குகிறது. இதனுள் 15.6 அங்குல மடிக்கணினிகளை வைக்க முடிகிறது. மிகவும் நீடித்த தன்மை வழங்குமென உறுதி அளிக்கப்பட்டுள்ள இந்த பேக்பாக்கில், தரமான ஸிப்பர்ஸ் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் குடை அல்லது தண்ணீர் பாட்டில் வைப்பதற்கான பாக்கெட் ஒன்றையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Announces Three Backpacks in India, Prices Start at Rs 899. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X