கெத்தா களமிறங்கிய சியோமி மி சன்கிளாஸ்கள்.! 100% பாதுகாப்புடன்.!
சியோமி நிறுவனம் தனது பிராண்டின் கீழ் இரண்டு புதிய மி சன்கிளாஸ்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு புதிய சன்கிளாஸ்கள் தற்பொழுது சியோமியின் அதிகாரப்பூர்வ தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
சியோமி நிறுவனம் தனது பிராண்டின் கீழ் இரண்டு புதிய மி சன்கிளாஸ்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு புதிய சன்கிளாஸ்கள் தற்பொழுது சியோமியின் அதிகாரப்பூர்வ தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

TAC போலரைஸ்ட் லென்ஸ்
சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த சன்கிளாஸ்களில் என்ன சிறப்பு உள்ளது என்று பார்க்கலாம். இரண்டு புதிய சன்கிளாஸ்களும் TAC போலரைஸ்ட் லென்ஸ்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. கண்ணைக் கூசும் ஒளி, போலரைஸ்ட் ஒளி மற்றும் யூவி கதிர்களைத் தடுக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது.

100 சதவிகிதம் UV பாதுகாப்பு
சியோமி மி சன்கிளாஸ்கள் UV400 பாதுகாப்பைக் கொண்டுள்ளது, எனவே இது UVA, UVB மற்றும் UVC கதிர்களைத் தடுத்து 100 சதவிகிதம் வரை பாதுகாப்பு வழங்குகிறது. ஆண் மற்றும் பெண் என இருபாலருக்கும் ஏற்ற வகையில் ஸ்கிராட்ச் ரெசிஸ்டன்ஸ் உடன் உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்கொயர் சன்கிளாஸ் & பைலட் சன்கிளாஸ்
குழந்தைகளுக்கான சியோமி மி சன்கிளாஸ் இன்னும் விற்பனைக்கு வரவில்லை, விரைவில் விற்பனைக்குக் களமிறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மி போலரைஸ்ட் ஸ்கொயர் சன்கிளாஸ் மாடல் ப்ளூ மற்றும் சாம்பல் நிறத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது. அதேபோல் மி போலரைஸ்ட் பைலட் சன்கிளாஸ் மாடல் ப்ளூ மற்றும் பச்சை நிறத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

விலை
சியோமி மி போலரைஸ்ட் ஸ்கொயர் சன்கிளாஸ் மாடல் ரூ.899 என்ற விலையிலும், சியோமி மி போலரைஸ்ட் பைலட் சன்கிளாஸ் மாடல் ரூ.1099 என்ற விலையில் தற்பொழுது சலுகையுடன் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் அசல் விலைகள் ரூ.999 மற்றும் ரூ.1199 என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications