இது வேற ரகம்.. SONY கேமரா.. 32GB மெமரி.. DUAL ஸ்பீக்கர்.. 21 மணி நேர பேக்கப்.. வாய்ஸ் கன்ட்ரோல்.. எந்த மாடல்?
நாம் வழக்கமாக பயன்படுத்தும் கிளாஸ்ஸஸ் மூலம் கேமரா, ஆடியோ மட்டுமல்லாமல், ஏஐ பீச்சர்களையும் பயன்படுத்த முடிந்தால் எப்படி இருக்கும்? அப்படியான பீச்சர்களுடன் சியோமி ஏஐ கிளாஸ்ஸஸ் (Xiaomi AI Glasses) கிடைக்க இருக்கிறது. சியோமி வேலா ஓஎஸ் கொண்ட இந்த ஏஐ கிளாஸ்ஸஸ் மாடலின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
வெறும் 40 கிராம் எடை கொண்ட இந்த சியோமி ஏஐ கிளாஸ்ஸஸ் கிளாசிக் டிசைனில் டி-ஷேப்டு ஃபிரேம் கொடுக்கிறது. டிஆர்09 நைலான் (TR90 Nylon) மெட்டீரியல் மற்றும் ஏரோஸ்பேஸ் கிரேடு டைட்டானியம் அலாய் கொண்ட ஹின்ச்சஸ் கிடைக்கிறது. சீனாவில் வெளியாகி இருப்பதால், ஆசிய முகங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. IP54 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் உள்ளது.

அதேபோல ஆப்ஷனல் எலக்ட்ரோக்ரோமிக் லென்ஸ்கள் (Optional Electrochromic Lenses) லைட் அட்ஜஸ்ட் மூலம் டிம் மற்றும் டார்க் செய்து கொள்ளலாம். இதற்கு டபுள் டேப் செய்தால் போதும். ஷேட்களை மாற்றி கொள்ளலாம். இதுபோக கேமரா கிடைக்கிறது. டூயல் ஸ்பீக்கர்கள் வருகிறது. இப்படி ஒட்டுமொத்த டிசைனும் பிரீமியம் காட்டி இருக்கிறது.
சியோமி ஏஐ கிளாஸ்ஸஸ் அம்சங்கள் (Xiaomi AI Glasses Specifications): இந்த சியோமி மாடலில் சோனி ஐஎம்எக்ஸ்681 (SONY IMX681) சென்சாருடன் 12 எம்பி கேமரா கிடைக்கிறது. இந்த கேமரா மூலம் (4032 x 3024) ரெசொலூஷனில் போட்டோக்கள் மற்றும் 2K ரெசொலூஷனில் வீடியோக்களை எடுக்க முடியும். அதிகபட்சமாக 45 நிமிடங்களுக்கு வீடியோ ரெக்கார்டிங் செய்யலாம்.
வீடியோ கான்பிரன்ஸ், செமினார்கள் போன்றவற்றின் முக்கிய நேரங்களை வீடியோ பதிவு செய்து கொள்ளலாம். டூயல் ஓப்பன் ஸ்பீக்கர்களை (Dual Open Speakers) கொடுக்கிறது. இதன் மூலம் ஏஐவாய்ஸ் அசிஸ்டன்ட் பயன்படுத்தி கொள்ளலாம். இதில் டிரான்ஸ்கிரிப்ஷன், சம்மரிஸ் மற்றும் லைவ் டிரான்ஸ்லேஷன் சப்போர்ட் கிடைக்கிறது. 10 மொழிகளில் டிரான்ஸ்லேட் செய்யலாம்.

அதேபோல சியோமி ஏஐ (Xiaomi AI) மூலம் லென்ஸ்களில் லைவ் ஆப்ஜெக்ட் ரிககனைசேஷன் (Live Object Recognition) கிடைக்கிறது. சியோமி டிவைஸ்களை வாய்ஸ் கன்ட்ரோல் செய்து கொள்ளலாம். ஆகவே, சியோமி டிவி, சியோமி ஹோம் அப்ளையன்சஸ் போன்றவற்றின் கன்ட்ரோல்கள் கிடைக்கிறது. இதுபோக ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் கன்ட்ரோலுக்கு 5 மைக்ரோபோன்கள் வருகின்றன.
போட்டோக்கள், வீடியோக்கள், டிவைஸ் செட்டிங்ஸ் மற்றும் டிரான்ஸ்லேஷன் போன்றவற்றுக்கான அணுகலை சியோமி கிளாஸ்ஸஸ் ஆப் (Xiaomi Glasses App) மூலம் பயன்படுத்தி கொள்ளலாம். இதில் மீட்டிங், இன்டர்வீயூ, கிளாஸ்ரூம் போன் மோட்கள் கிடைக்கின்றன. 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி கிடைக்கிறது. டைப்-சி சார்ஜிங் கொண்ட 263mAh சிலிகான் பேட்டரி கிடைக்கிறது.
45 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்து கொள்ளலாம். 8.6 மணி நேர நார்மல் பேக்கப், 7 மணி நேரங்களுக்கு மியூசிக் பேக்கப் கிடைக்கிறது. 21 மணி நேரங்களுக்கு ஸ்டாண்ட்பை மோடில் கிடைக்கிறது. 45 நிமிடங்களுக்கு வீடியோ பிளேபேக் கிடைக்கிறது. ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4), வை-பை 6 (Wi-Fi 6) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. சியோ ஏஐ அசிஸ்டன்ட் (Xiao AI Assistant) கிடைக்கிறது.
இந்த சியோமி ஏஐ கிளாஸ்ஸஸ் மாடலில் பிளாக் (Black), பிரவுண் (Brown), கிரீன் (Green) கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ஸ்டான்டர்ட் எடிஷனின் விலை ரூ.23,854ஆகவும், சிங்கிள் கலர் எலக்ட்ரோக்ரோமிக் எடிஷனின் விலை ரூ.32,205ஆகவும் இருக்கிறது. மல்டி கலர் எலக்ட்ரோக்ரோமிக் எடிஷனின் விலை ரூ.35,784ஆக இருக்கிறது. இப்போதைக்கு சீனாவில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications