எல்ஜி, சாம்சங் ஓரம்போ: ரூ.10,600/- விலையில் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!

சியோமி மி டிவி 4எஸ் 42-இன்ச் ஸ்மார்ட் டிவி 4கே எச்டிஆர் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,அதன்பின்பு 1ஜிபி ரேம் மற்றும்8ஜிபி மெமரி அமைப்புடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

|

இந்தியாவில் சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது, அதன்படி தற்சமயம் அந்நிறுவனம் சினாவில் நவீன ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இப்போது அறிமுகம் செய்யப்பட்ட டிவி மாடல்களின் பெயரி மி டிவி 4சி, மி டிவி 4எக்ஸ், மி டிவி 4எஸ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு தொழில்நுட்ப ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள்.

 ரூ.10,600/- விலையில் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!

இப்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என சியோமி நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் வெளிவந்துள்ளதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

சியோமி மி டிவி 4எஸ் (55-இன்ச்):

சியோமி மி டிவி 4எஸ் (55-இன்ச்):

சியோமி மி டிவி 4எஸ் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி பொறுத்தவரை வளைந்த 4கே டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 64-பிட் குவாட்-கோர் செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவு கொண்டுள்ளது இந்த
ஸ்மார்ட் டிவி மாடல். H.264 / 265 டிகோடிங் ஆதரவுடன் டால்பி ஆடியோ / டிடிஎஸ்-எச்டி ஆடியோ டிகோடிங் மற்றும் ப்ளூடூத் ஆடியோ ரிமோட் கண்ட்ரோல் ஆகியவற்றை ஆதரிக்கிறது சியோமி மி டிவி 4எஸ் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் இந்திய விலை
மதிப்பு ரூ.35,000-ஆக உள்ளது.

 சியோமி மி டிவி 4எஸ் (42-இன்ச்):

சியோமி மி டிவி 4எஸ் (42-இன்ச்):

சியோமி மி டிவி 4எஸ் 42-இன்ச் ஸ்மார்ட் டிவி 4கே எச்டிஆர் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,அதன்பின்பு 1ஜிபி ரேம் மற்றும்
8ஜிபி மெமரி அமைப்புடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. 6வாட் ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி/டிடிஎஸ் போன்ற ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள்.

சியோமி மி டிவி 4சி:

சியோமி மி டிவி 4சி:

சியோமி மி டிவி 4சி பொதுவாக 32-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு1366 x 768 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி கொண்டுள்ளது மி டிவி 4சி மாடல். எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் இந்திய விலை மதிப்பு ரூ.10,600-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Advances Mi TV Lineup by Launching Mi TV 4C 4X and Two Mi TV 4S Models

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X