மளமளவென சரிந்த சியோமி 43 இன்ச் டிவியின் விலை.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி OS.. எந்த மாடல்?
சியோமி (Xiaomi) நிறுவனத்தின் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி ஒன்று தற்போது விலை குறைப்பில் வாங்க கிடைக்கிறது. அதுவும் இந்த ஸ்மார்ட் டிவி கூகுள் டிவி ஓஎஸ், டால்பி ஆடியோ, எச்டிஆர் 10 உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் தற்போது சியோமி எம்ஐ ஏ சீரிஸ் 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 (Xiaomi Mi A Series 43 inch Smart Google TV 2025) மாடலுக்கு விலைகுறைக்கபபட்டு ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த டிவியை ரூ.17999 விலையில் வாங்கிவிட முடியும்.

சியோமி எம்ஐ ஏ சீரிஸ் ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 அம்சங்கள் (Xiaomi Mi A Series 43 inch Smart Google TV 2025 Specifications): இந்த 43 இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1920 x 1080 பிக்சல்ஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle), 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
அதேபோல் ப்ரீமியம் மெட்டல் பெசல் லெஸ் டிசைன் (Premium Metal Bezel-less Design) உடன் இந்த சியோமி எம்ஐ ஏ சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 வெளிவந்தது. அதுவும் இந்த டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
குறிப்பாக ஏ53 குவாட் கோர் (A53 Quad Core) பிராசஸர் உடன் இந்த சியோமி ஸ்மார்ட் டிவி வெளிவந்தது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதி இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுவும் இந்த டிவி கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இயங்குகிறது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும். மேலும் யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த 43 இன்ச் டிவியில் பயன்படுத்த முடியும்.

தரமான டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ் எக்ஸ் (DTS X), டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் சவுண்ட்(DTS Virtual X Sound) ஆதரவு கொண்ட 20W ஸ்பீக்கர்கள் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளது. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு குரோம் காஸ்ட் (Chromecast) ஆதரவும் இந்த 43 இன்ச் டிவியில் உள்ளது.
யுஎஸ்பி போர்ட் (USB Port), எச்டிஎம்ஐ போர்ட் (HDMI), ஈதெர்நெட் போர்ட் (Ethernet Port), ஆடியோ ஜாக், ப்ளூடூத் (Bluetooth), வை-பை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சியோமி ஸ்மார்ட் டிவியில் உள்ளன. மேலும் வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்களை கொண்ட ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் இந்த டிவி உடன் கிடைக்கிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








