ஹோம் தியேட்டருக்கு கும்பிடு.. 75 இன்ச் 4K டிவி.. QLED டிஸ்பிளே.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் சியோமி 75 இன்ச் எக்ஸ் ப்ரோ சீரிஸ் கியூஎல்இடி டிவி (Xiaomi 75 Inch X Pro Series QLED TV) மாடலின் விற்பனை தொடங்கிவிட்டது. டால்பி விஷன், டால்பி ஆடியோ பீச்சர்களை கொடுத்துள்ளது. கூகுள் டிவி ஓஎஸ், விவிட் பிக்சர் என்ஜின் 2 போன்ற அப்டேட்டெட் பீச்சர்களை கொண்டுள்ளது. இந்த டிவியின் விவரங்கள் இதோ.
இப்போது, அமேசான் தளத்தில் 42 சதவீத தள்ளுபடி போக ரூ.69,999 விலைக்கு இந்த சியோமி 75 இன்ச் எக்ஸ் ப்ரோ சீரிஸ் கியூஎல்இடி டிவி கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.5,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.64,999 பட்ஜெட்டில் இந்த சியோமி 75 இன்ச் எக்ஸ் ப்ரோ சீரிஸ் கியூஎல்இடி டிவியை வாங்கி கொள்ளலாம்.

சியோமி 75 இன்ச் எக்ஸ் ப்ரோ சீரிஸ் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (Xiaomi 75 Inch X Pro Series QLED TV Specifications): 75 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளேவை இந்த எக்ஸ் ப்ரோ சீரிஸ் டிவி கொண்டுள்ளது. 178 டிகிரி வியூ ஆங்கிள், டிஎல்ஜி 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கொண்டுள்ளது. மேலும், டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode) உள்ளது.
சியோமி டிவிகளில் கிடைக்கும் விவிட் பிக்சர் என்ஜின் 2 (Vivid Picture Engine 2) உள்ளது. டிசிஐ பி3 கலர் காமட் (DCI P3 Colour Gamut) கிடைக்கிறது. 1.07 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) ரெசொலூஷன், ரியாலிட்டி ப்ளோவ் எம்இஎம்சி (Reality Flow MEMC) கொடுக்கப்பட்டுள்ளது. கேமிங் பிரியர்களுக்கு ஏஎல்எல்எம் (ALLM) மற்றும் 120Hz கேம் பூஸ்டர் (Game Booster) கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொடுக்கப்பட்டுள்ளது. பில்ட்-இன் வை-பை (Built-In Wi-Fi) மற்றும் கூகுள் காஸ்ட் பில்ட்-இன் (Google Cast Built-in கொடுக்கப்பட்டுள்ளது. 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரியை இந்த சியோமி 75 இன்ச் எக்ஸ் ப்ரோ சீரிஸ் கியூஎல்இடி 4கே யுஎச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி கொண்டுள்ளது. கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், குவாட் கோர் கோர்டெக்ஸ் ஏ55 (Quad Core Cortex A55) கிடைத்துள்ளது. கூகுள் டிவி ஓஎஸ் கிடைத்துள்ளதால், கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) ஆப்கள் கிடைக்கின்றன. நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube), ஜீ5 (Zee5) உள்ளிட்ட ஆப்கள் கிடைக்கின்றன. ஹாட்கீகளுடன் வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் இந்த சியோமி 75 இன்ச் எக்ஸ் ப்ரோ சீரிஸ் கியூஎல்இடி டிவிக்கு கிடைக்கிறது.
குரோம்காஸ்ட் (Chromecast), ஆப்பிள் ஏர்பிளே 2 (Apple AirPlay 2) மற்றும் சியோமி டிவிபிளஸ் (Xiaomi TV+) கொடுக்கப்பட்டு உள்ளது. 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யுஎஸ்பி போர்ட் (USB Port), ஈதர்நெட் (Ethernet), ஆப்டிகல் ஆடியோ (Optical Audio), ஏவி இன்புட் (AV Input) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 3.5 எம்எம் ஆடியோ (Audio) உள்ளது. டூயல்-பேண்ட் வை-பை (Dual-band Wi-Fi), ப்ளூடூத் (Bluetooth) கொடுக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications