Home
Gadgets

55 இன்ச் TV கதை முடிந்தது.. 42 சதவீத டிஸ்கவுண்ட்டில் 75 இன்ச் டிவி.. டால்பி விஷன்.. கூகுள் TV OS.. எந்த மாடல்?

55 இன்ச் டிவி வைத்திருக்கும் கஸ்டமர்களை அப்படியே 75 இன்ச் டிவிக்கு மாறும்படியான டிஸ்கவுண்ட் விலைக்கு சியோமி 75 இன்ச் எக்ஸ் ப்ரோ சீரிஸ் கியூஎல்இடி டிவி (Xiaomi 75 Inch X Pro Series QLED TV) மாடலானது கிடைக்கிறது. இந்த 75 இன்ச் டிவியின் விலை, டிஸ்கவுண்ட் மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

அமேசான் தளத்தில் மார்கெட் விலையில் இருந்து 42 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு இந்த சியோமி 75 இன்ச் எக்ஸ் ப்ரோ சீரிஸ் கியூஎல்இடி டிவி விற்பனை செய்யப்படுகிறது. இந்த டிஸ்கவுண்ட் போக ரூ.65,999 விலைக்கு வாங்கலாம். மேலும், ரூ.4,000 கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, ரூ.65,998 விலைக்கு வாங்க முடியும்.

55 இன்ச் TV கதை முடிந்தது.. 42 சதவீத டிஸ்கவுண்ட்டில் 75 இன்ச் டிவி!

இதுபோக ரூ.1,979 கேஷ்பேக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கும் கஸ்டமர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளில் ரூ.5,250 டிஸ்கவுண்ட் மற்றும் 9 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, இதுவரையில் கிடைத்த விலையைவிட மலிவாக இந்த சியோமி 75 இன்ச் எக்ஸ் ப்ரோ சீரிஸ் கியூஎல்இடி டிவியை வாங்கி கொள்ளலாம்.

சியோமி 75 இன்ச் எக்ஸ் ப்ரோ சீரிஸ் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (Xiaomi 75 Inch X Pro Series QLED TV Specifications): 75 இன்ச் (840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.

4கே எச்டிஆர் (4K HDR), எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் டால்வி விஷன் (Dolby Vision) கொடுக்கப்பட்டு உள்ளது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொண்டுள்ளது. மேலும், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) இன்டிகிரேஷன் கிடைக்கிறது. இந்த சியோமி 75 இன்ச் எக்ஸ் ப்ரோ சீரிஸ் கியூஎல்இடி டிவியில் 2 ஜிபி ரேம் + 32 ஜிபி மெமரி கிடைக்கிறது.

கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant), பிளே ஸ்டோர் (Play Store) உள்ளது. ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube), ஜீ5 (Zee5) உள்ளிட்ட பில்ட் இன் ஓடிடி ஆப்கள் உள்ளது. அதேபோல பில்ட்-இன் வை-பை (Built-In Wi-Fi) மற்றும் கூகுள் காஸ்ட் (Google Cast) கொண்ட மாடலாக சியோமி 75 இன்ச் எக்ஸ் ப்ரோ சீரிஸ் கியூஎல்இடி டிவி உள்ளது.

எம்இஎம்சி என்ஜின் (MEMC Engine), ரியாலிட்டி ப்ளோவ் எம்இஎம்சி (Reality Flow MEMC), விவிட் பிக்சல் என்ஜின் 2 (Vivid Picture Engine 2) மற்றும் ஃபிலிம் மேக்கர் மோட் (Filmmaker Mode) கிடைக்கிறது. மேலும், வைடு கலர் காமட் (Wide Colour Gamut) கொடுக்கப்பட்டு உள்ளது. 34W ஆடியோ அவுட்புட் கொண்ட மாடலாக சியோமி 75 இன்ச் எக்ஸ் ப்ரோ சீரிஸ் கியூஎல்இடி டிவி உள்ளது.

டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ் - எக்ஸ் (DTS - X) மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் (DTS Virtual X) கொடுக்கப்பட்டு உள்ளது. கூடுதலாக சியோமி சவுண்ட் (Xiaomi Sound) கிடைக்கிறது. 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் மற்றும் 2 யுஎஸ்பி போர்ட்கள் உள்ளன. ப்ளூடூத் (Bluetooth), ஆப்டிகல் (Optical), ஈதர்நெட் (Ethernet), ஆடியோ ஜாக் உள்ளிட்ட கனெக்டிவிட்டிகளும் உள்ளன.

Best Mobiles in India

English summary
Xiaomi 75 inch X Pro 4K QLED Google TV With Dolby Vision Gets Discount on Amazon Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X