ஏப்ரல் 23: இந்தியாவில் அறிமுகமாகும் அசத்தலான 75-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி.!

|

சியோமி நிறுவனம் தனது புதிய Mi QLED TV மாடலை வரும் ஏப்ரல் 23-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல் தனித்துவமான சிப்செட் மற்றும் அசத்தலான அம்சங்களுடன் உடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

 75-இன்ச் Mi QLED TV

75-இன்ச் Mi QLED TV

சியோமி அறிமுகம் செய்யும் 75-இன்ச் Mi QLED TV ஆனது 4கே டிஸ்பிளே பேனல் மற்றும் 100% NTSC வண்ண வரம்பை ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே இது சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம்.

டால்பி விஷன் ஆதரவு

டால்பி விஷன் ஆதரவு

வரவிருக்கும் 75-இன்ச் Mi QLED TV மாடல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எம்இஎம்சி, எச்டிஆர் 10 + சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் டால்பி விஷன் ஆதரவு கொண்டு இந்த புதிய ஸ்மார்ட் டிவி வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவர்க்கியுள்ளது.

புதிய விவோ வி 21 5 ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்கிறதா விவோ?புதிய விவோ வி 21 5 ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்கிறதா விவோ?

360 டிகிரி புளூடூத் ரிமோட்

360 டிகிரி புளூடூத் ரிமோட்

HDMI 2.1 போர்ட், ALLM, 360 டிகிரி புளூடூத் ரிமோட், டால்பி ஆடியோவுடன் 30W ஸ்பீக்கர்கள் என பல்வேறு சிறப்பம்சங்களை
கொண்டுள்ளது இந்த 75-இன்ச் Mi QLED TV மாடல். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த புத்தம் புதிய சாதனம். எனவே இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

75-இன்ச் Mi QLED டிவியில்

கூகிள் அசிஸ்டென்ட் / அலெக்சா குரல் போன்ற உதவி ஆதரவுடன் வரும் இந்த புதிய சியோமி ஸ்மார்ட் டிவி. மேலும் 75-இன்ச் Mi QLED டிவியில் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் யூடியூப் உள்ளிட்ட முன்பே நிறுவப்பட்ட பிரபலமான ஆப் பயன்பாடுகளும் இருக்கும். மேலும் இந்நிறுவனம் இதற்குமுன்பு இந்தியாவில் அறிமுகம் செய்த 55-இன்ச் Mi QLED 4K டிவியின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்

 55-இன்ச் Mi QLED 4K டிவி

55-இன்ச் Mi QLED 4K டிவி

சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 55-இன்ச் Mi QLED 4K டிவி ஆனது Ultra-HD QLED டிஸ்பிளே மற்றும் 3840 x 2160 பிக்சல் தீர்மானம் மறறும் எச்டிஆர்10, எச்டிஆர்10+, HLG, Dolby Vision உள்ளிட்ட ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவி ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு சியோமி நிறுவனத்திற்கு சொந்தமான பேட்வால் 3.5 வசதி இந்த ஸ்மார்ட் டிவியில் இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 மீடியாடெக் எம்டி9611 குவாட்-கோர் பிராசஸர்

மீடியாடெக் எம்டி9611 குவாட்-கோர் பிராசஸர்

சியோமி 55-இன்ச் Mi QLED 4K டிவி மாடலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் எம்டி9611 குவாட்-கோர் பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல். இந்த புதிய சியோமி டிவியின் ரிமோட்டில் அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃபிக்ஸ் உள்ளிட்ட சில ஹாட்ஸ்கிகள் உள்ளன. பின்பு கூகிள் அசிஸ்டென்ட் பொத்தானை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவியின் ரிமோட். குறிப்பாக இதன் ரிமோட் வடிவமைப்பிற்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

4K டிவியில் 30W ஆறு-ஸ்பீ

சியோமி 55-இன்ச் Mi QLED 4K டிவியில் 30W ஆறு-ஸ்பீக்கர்கள் ஆதரவு இடம்பெற்றுள்ளது. அதில்4 full range drivers மற்றும் 2 tweeters அமைப்பு உள்ளது. எனவே இது சிறந்த ஆடியோ வசதியை வழங்கும். 3 எச்டிஎம்ஐ 2.1 போர்ட், 2 யுஎஸ்பி போர்ட், 60Hz of refresh rate, புளூடூத் 5.0 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

Best Mobiles in India

English summary
Xiaomi 75-inch Mi QLED TV with 4K display panel Launching in India on April 23: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X