Home
Gadgets

Xiaomi 55 இன்ச் டிவியை குறைந்த விலையில் வாங்க சரியான நேரம்.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் கிரேட் சம்மர் சேல் எனும் சிறப்பு விற்பனை தற்போது நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் சியோமி 55 இன்ச் எக்ஸ் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி (Xiaomi 55 inch X Ultra HD 4K Google TV) மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த டிவி தரமான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

அமேசான் சிறப்பு விற்பனையில் சியோமி 55 இன்ச் எக்ஸ் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி மாடலுக்கு 27 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.35,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1750 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

Xiaomi 55 இன்ச் டிவியை குறைந்த விலையில் வாங்க சரியான நேரம்..

சியோமி 55 இன்ச் எக்ஸ் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி அம்சங்கள் Xiaomi 55 inch X Ultra HD 4K Google TV Specifications): அல்ட்ரா எச்டி 4K டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது சியோமி எக்ஸ் 55 இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி மாடல். மேலும் 3840 × 2160 பிக்சல்ஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle), 1.07 பில்லியன் கலர்ஸ், டால்பி விஷன், எச்டிஆர் 10,உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்களும் இதில் உள்ளன. இந்த டிவி பிரீமியம் மெட்டல் பெசல்-லெஸ் டிசைன் உடன் வெளிவந்துள்ளது.

குவாட் கோர் பிராசஸர் (ஏ55) உடன் சியோமி 55 இன்ச் எக்ஸ் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த டிவியில் மேம்பட்ட கேமிங் அம்சங்களும் உள்ளன. அதேபோல் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் உடன் சியோமி டிவி வெளிவந்துள்ளது.

எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology), விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine), டால்பி விஷன் டைம் (Dolby Vision Time) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த சியோமி டிவியில் உள்ளன.

டால்பி ஆடியோ (Dolby audio), டிடிஎஸ்-எக்ஸ் (DTS-X), டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் (DTS Virtual X) உள்ளிட்ட ஆடியோ அம்சங்களைக் கொண்ட 34W ஸ்பீகர்கள் உடன் சியோமி 55 இன்ச் எக்ஸ் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.

பேட்ச்வால் (PatchWall) மற்றும் கூகுள் டிவி ஒஎஸ் (Google TV OS) மூலம் இந்த சியோமி டிவி இயங்குகிறது. குறிப்பாக கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது.

Xiaomi 55 இன்ச் டிவியை குறைந்த விலையில் வாங்க சரியான நேரம்..

யூட்யூப் (YouTube), நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), பிரைம் வீடியோ (Prime Video) உள்ளிட்ட பல்வேறு ஓடிடி ஆப்ஸ்களை கொண்டுள்ளது இந்த சியோமி 55 இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி மாடல்.

வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.0,எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், இயர்போன், ஈதர்நெட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த டிவி. ஸ்மார்ட் ரிமோட் உடன் இந்த சியோமி 55 இன்ச் எக்ஸ் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi 55 inch X Ultra HD 4K Google TV available at 27 percent discount in Amazon Great Summer Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X