Home
Gadgets

ஜிஎஸ்டி வரி குறைப்பால் கம்மி விலைக்கு வந்த Xiaomi 50 இன்ச் டிவி.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி OS.. எந்த மாடல்?

இந்தியாவில் ஜிஎஸ்டி (GST) குறைப்பின் விளைவாகப் பல ஸ்மார்ட் டிவிகளின் விலை குறைந்துள்ளது. குறிப்பாக சோனி, எல்சி, பானாசோனிக், சியோமி உள்ளிட்ட பல நிறுவனங்களின் டிவிகள் விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் மற்றும் ஜிஎஸ்டி வரி குறைப்பின் மூலம் சியோமி நிறுவனத்தின் 50-இன்ச் டிவி ஒன்று கம்மி விலையில் கிடைக்கிறது.

அதாவது சியோமி எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி (Xiaomi 50 inch X Series 4K LED Smart Google TV) மாடலுக்கு அமேசான் சலுகைகள் மற்றும் ஜிஎஸ்டி சேவிங்ஸ் (GST Savings) மூலம் 46 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.24,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.4000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.20499 விலையில் வாங்கிவிட முடியும்.

ஜிஎஸ்டி வரி குறைப்பால் கம்மி விலைக்கு வந்த Xiaomi 50 இன்ச் டிவி..

சியோமி எம்ஐ எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் டிவி அம்சங்கள்: இந்த டிவி பிரீமியம் மெட்டல் பெசல்-லெஸ் டிசைன் உடன் வெளிவந்துள்ளது. அதேபோல் அல்ட்ரா எச்டி 4K டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது சியோமி எம்ஐ எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் டிவி மாடல். மேலும் 3840 × 2160 பிக்சல்ஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle), எச்டிஆர் 10 உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்களும் இதில் உள்ளன.

குறிப்பாக எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology), விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine), டால்பி விஷன் டைம் (Dolby Vision Time) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த சியோமி டிவியில் உள்ளன.

தரமான குவாட் கோர் பிராசஸர் (ஏ55) உடன் சியோமி எம்ஐ எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த டிவியில் மேம்பட்ட கேமிங் அம்சங்களும் உள்ளன. அதேபோல் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் உடன் சியோமி டிவி வெளிவந்துள்ளது.

பேட்ச்வால் (PatchWall) மற்றும் கூகுள் டிவி ஒஎஸ் (Google TV OS) மூலம் இந்த சியோமி எம்ஐ எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் டிவி இயங்குகிறது. குறிப்பாக கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது.

அதேபோல் யூட்யூப் (YouTube), நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), பிரைம் வீடியோ (Prime Video) உள்ளிட்ட பல்வேறு ஓடிடி ஆப்ஸ்களை கொண்டுள்ளது இந்த சியோமி எம்ஐ எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் டிவி மாடல்.

ஜிஎஸ்டி வரி குறைப்பால் கம்மி விலைக்கு வந்த Xiaomi 50 இன்ச் டிவி..

மேலும் வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.0,எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், இயர்போன், ஈதர்நெட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த டிவி. ஸ்மார்ட் ரிமோட் உடன் இந்த சியோமி எம்ஐ எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தனித்துவமான டால்பி ஆடியோ (Dolby audio), டிடிஎஸ்-எக்ஸ் (DTS-X), டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் (DTS Virtual X) உள்ளிட்ட ஆடியோ அம்சங்களைக் கொண்ட 30W ஸ்பீகர்கள் உடன் சியோமி எம்ஐ எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் டிவி மாடல் வெளிவந்துள்ளது.எனவே இந்த டிவியில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Best Mobiles in India

English summary
Xiaomi 50 inch X Series 4K Smart Google TV available at discounted price with GST Savings on Amazon: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X