Home
Gadgets

Xiaomi 4கே ஸ்மார்ட் டிவியை கம்மி விலையில் சரியான நேரம் இதுதான்.. டால்பி ஆடியோ.. HDR 10.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் சியோமி 43 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி ஒன்று தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக எச்டிஆர் 10, டால்பி ஆடியோ, 8ஜிபி மெமரி மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த 43 இன்ச் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. இப்போது இந்த சியோமி டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் L43M4-4AIN என்ற மாடல் நம்பர் கொண்ட சியோமி 4எக்ஸ் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (XIAOMI 4X 43 inch Ultra HD 4K Smart Android TV) மாடலுக்கு 45 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த டிவியை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் கிடைக்கும். எனவே இந்த டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

Xiaomi 4கே ஸ்மார்ட் டிவியை கம்மி விலையில் சரியான நேரம் இதுதான்..

சியோமி 4எக்ஸ் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (Xiaomi 4X 43 inch 4K Smart Android TV Specifications): அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே வசதியுடன் சியோமி 4எக்ஸ் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 (HDR 10), 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஆம்லாஜிக் 64-பிட் குவாட் கோர் பிராசஸர் உடன் சியோமி 4எக்ஸ் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதி இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளது. எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

ஆண்ட்ராய்டு (Android) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அசத்தலான சியோமி 4எக்ஸ் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியில் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant), குரோம்காஸ்ட் (Chromecast)உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ்-எச்டி (DTS-HD) ஆதரவு கொண்ட 20W ஸ்பீக்கர்கள் உடன் சியோமி 4எக்ஸ் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி வெளிவந்துள்ளது. எனுவே இந்த டிவியில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். மேலும் 5 சவுண்ட் மோட்கள் இந்த டிவியில் உள்ளது. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த டிவியில் உள்ளன. இதுதவிர பல்வேறு ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். பேட்ச்வால் 3.0 மூலம் இந்த இந்த சியோமி ஸ்மார்ட் டிவி இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்மார்ட் ரிமோட் உடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. அதுவும் வாயஸ் கண்ட்ரோல் மற்றும் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் இந்த ரிமோட்டில் உள்ளன.

வை-பை (Wi-Fi), ப்ளூடூத் (Bluetooth), 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யுஎஸ்பி போர்ட்கள் (USB Ports), 1 டிஜிட்டல் அவுட், ஆடியோ ஜாக் (Audio Jack) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சியோமி ஸ்மார்ட் டிவியில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவி கம்மி விலையில் விற்பனை செய்யப்படுவதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 4X 43 inch 4K Smart Android TV available at discounted price: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X