செப்டம்பர் 17: இந்தியா: சியோமி நிறுவனத்தின் 4கே 65-இன்ச் மி டிவி அறிமுகம்.!

|

இந்தியாவில் வரும் செப்டம்பர் 17-ம் தேதி சியோமி நிறுவனத்தின் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 4கே 65-இன்ச் மி டிவி அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் அன்மையில் 'Smart Living 2020'எனும் டீசர் வெளியிட்ப்பட்டது, இந்த ஸ்மார்ட் டிவி தான்.

சியோமி டிவி

குறிப்பாக சியோமி நிறுவனம் இதுவரை 55-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்களை தான் அறிமுகம் செய்துவந்தது, அதிலும் 55-இன் மி எல்இடி டிவி 4எகஸ் ப்ரோ மாடல் உலகம் முழுவதும் அதிக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்களை உலகம் முழுவதும் அதிகளவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே சியோமி நிறுவனம் 65-இன்ச் டிவி மாடலை சீனாவில் மட்டும் விற்பனை செய்து வருகிறது.

சியோமி

அதேசமயம் சியோமி நிறுவனத்தின துணை நிறுவனமான ரெட்மி தனது முதல் ஸ்மார்ட் டிவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ரெட்மி அறிமுகம் செய்யும் 75-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அசத்தலான ஸ்கிரீன்

ரெட்மி 70-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 4கே மற்றும் எச்டிஆர் ஸ்கிரீன் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு 6-வது தலைமுறை அம்லோஜிக் 64-பிட் சிப்செட்இ ஒரு கார்டெக்ஸ்-ஏ 53 குவாட்-கோர் சிபியு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

புதிய 3 ஆப்பிள் ஐபோன் 11, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 & 7ம்-ஜென் ஐபாட் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

இணைப்பு ஆதரவுகள்

ரெட்மி 70-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவியில் டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 4.2., மூன்று எச்.டி.எம்.ஐ போர்ட்கள், இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள், ஈதர்நெட் போர்ட், எஸ் ஃ பி.டி.ஐ.எஃப் மற்றும் ஏ.வி போர்ட்கள் உள்ளன. குறிப்பாக சியோமி டிவியில் இருக்கும் பேட்ச்வால் யுஐ வசதி இந்த ஸ்மார்ட் டிவி சாதனத்திலும் இடம்பெற்றுள்ளது.

ஒருவாய் சோற்றுக்கே கஷ்டப்பட்ட சிவன் குடும்பம்- இஸ்ரோ வரை எப்படி சாதித்தார்?

சேமிப்பு வசதி:

இந்த ரெட்மி 70-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி 1.5ஜிகிஹெர்ட் மாலி-450 எம்பி3 ஜிபியு வசதியுடனும் வெளிவந்துள்ளது, பின்பு 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 அட்டகாசமான விலை

ரெட்மி 70-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவியில் மேம்பட்ட ஆடியோவிற்கு டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ்-எச்டி ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் இந்திய விலை மதிப்பு ரூ.38,600-ஆக உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Xiaomi 4K 65-Inch Mi TV India Launch Pegged For September 17 and more details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X