Home
Gadgets

ஓல்டு TV கதை காலி.. 30 சதவீத ஆஃபரில் 43 இன்ச் 4K LED டிவி.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?

பழைய டிவியை வைத்திருக்கும் கஸ்டமர்கள் இந்த டிஸ்கவுண்ட்டை பார்த்தால் அதை அப்படியே ஓரமாக வைத்துவிட்டு புதிய டிவிக்கு மாறிவிடுவார்கள் என்று சொல்லும்படி சியோமி 43 இன்ச் எக்ஸ் 4கே கூகுள் எல்இடி டிவி (Xiaomi 43 inch X 4K Google LED TV) தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. இந்த 43 இன்ச் டிவிக்கு கிடைக்கும் தள்ளுபடி விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சியோமி 43 இன்ச் எக்ஸ் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவி (Xiaomi 43 inch X Ultra HD 4K Smart Google LED TV) மாடலுக்கு 30 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.26,499 விலைக்கு கிடைக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளில் ஈஎம்ஐ வழியாக வாங்கினால், ரூ.2,900 தள்ளுபடியும் கிடைக்கிறது. ஆகவே, ரூ.23,599 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

ஓல்டு TV கதை காலி.. 30 சதவீத ஆஃபரில் 43 இன்ச் 4K LED டிவி!

சியோமி 43 இன்ச் எக்ஸ் 4கே எல்இடி டிவி அம்சங்கள் (Xiaomi 43 inch X 4K Google LED TV Specifications): ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த சியோமி 43 இன்ச் எக்ஸ் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவி கிடைக்கிறது. ஆகவே, கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) கிடைக்கும்.

மேலும், கூகுள் காஸ்ட் பில்ட்-இன் (Google cast built-in) கொடுக்கப்பட்டு உள்ளது. நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube) மற்றும் ஜீ5 (Zee5) உள்ளிட்ட ஒட்டுமொத்த ஓடிடி ஆப்களையும் கொடுத்து இருக்கிறது. கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) மற்றும் வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் (Voice Active Remote) கொடுக்கப்பட்டு உள்ளது.

2 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரியை இந்த சியோமி 43 இன்ச் எக்ஸ் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவி கொடுத்துள்ளது. பிரீமியம் மாடலுக்கு நிகரான டிஸ்பிளே பீச்சர்களை கொடுத்து இருக்கிறது. ஆகவே, 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளே கிடைக்கிறது. வழக்கமாக கிடைக்கும் 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) கிடைக்கிறது.

60 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர் 10 (HDR 10) கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், 4கே டால்பி விஷன் (4K Dolby Vision) இந்த சியோமி 43 இன்ச் எக்ஸ் 4கே எல்இடி டிவிக்கு கிடைக்கிறது. எச்எல்ஜி (HLG), ரியாலிட்டி ப்ளோவ் எம்இஎம்சி (Reality Flow MEMC) மற்றும் விவிட் பிக்சர் என்ஜின் 2 (Vivid Picture Engine 2) கொடுக்கப்பட்டு உள்ளது.

வைடு கலர் காமட் (Wide Colour Gamut) கிடைக்கிறது. ஆடியோ பக்கம் பார்க்கையில், 30W அவுட்புட் கிடைக்கிறது. இதில் டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ் - எக்ஸ் (DTS - X) மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல் : எக்ஸ் (DTS Virtual : X) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, ஆடியோ மற்றும் வீடியோ பீச்சர்கள் பிரீமியம் அவுட்புட் கொடுக்கும்படி இருக்கும்.

டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi), 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் (3 HDMI Ports) மற்றும் 2 யுஎஸ்பி போர்ட்கள் (2 USB Ports) கிடைக்கின்றன. மேலும், ஈஏஆர்சி (eARC), ப்ளூடூத் (Bluetooth), ஆப்டிகல் (Optical) மற்றும் ஈதர்நெட் (Ethernet) ஆகிய கனெக்டிவிட்டிகளையும் இந்த சியோமி 43 இன்ச் எக்ஸ் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவி கொடுக்கிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi 43 inch X Ultra HD 4K Smart Google LED TV L43MB-AIN Available At 30 Percent Discount
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X