Home
Gadgets

அள்ளிக்கோங்க.. பட்ஜெட் விலையில் சியோமி ஸ்மார்ட் டிவிகள்.. எந்த மாடல்? என்னென்ன அம்சங்கள்?

சியோமி நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு டிவிகளுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்தியாவில் பட்ஜெட் விலையில் கடைக்கும் இரண்டு அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகளை இங்கே பார்க்கலாம்.

சியோமி எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி (Xiaomi X Series 50 inch 4K Smart Google TV) ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.29,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.28,999 விலையில் வாங்கிவிட முடியும்.

அள்ளிக்கோங்க.. பட்ஜெட் விலையில் சியோமி ஸ்மார்ட் டிவிகள்.. எந்த மாடல்?

சியோமி எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (Xiaomi X Series 50 inch 4K Smart Google TV Specifications): அல்ட்ரா எச்டி 4K டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த சியோமி டிவி . மேலும் 3840 × 2160 பிக்சல்ஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle), எச்டிஆர் 10 உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்களும் இந்த சியோமி எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவியில் உள்ளன.

குவாட் கோர் பிராசஸர் (ஏ55) உடன் சியோமி எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. அதேபோல் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் மாலி ஜி52 எம்சி1 ஜிபியு (Mali G52 MC1 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த டிவி. மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு இந்த டிவியில் உள்ளது.

எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology), 94 சதவீதம் டிசிபிஐ-3 கலர் காமட் (94% DCPI-3 color gamut), ஏஎல்எல்எம் (ALLM) உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களுடன் இந்த சியோமி 50 இன்ச் டிவி வெளிவந்துள்ளது.

குறிப்பாக விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine), டால்பி விஷன் டைம் (Dolby Vision Time), 6.5எம்எஸ் ரெஸ்பான்சஸ் டைம் (6.5ms Response Time) உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது சியோமி 50 இன்ச்ஸ்மார்ட் டிவி மாடல். பின்பு வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.0,எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், இயர்போன், ஈதர்நெட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த டிவி.

பேட்ச்வால் (PatchWall) மற்றும் கூகுள் டிவி ஒஎஸ் (Google TV OS) மூலம் இந்த டிவி இயங்குகிறது. எனவே கூகுளின் அனைத்து சிறப்பான வசதிகளையும் இந்த டிவியில் பயன்படுத்தலாம். மேலும் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், யூடியூப், சோனி லிவ் உள்ளிட்ட பல்வேறு ஒடிடி ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். MI வாய்ஸ் கண்ட்ரோல் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சியோமி டிவி.

டால்பி ஆடியோ (Dolby audio), டிடிஎஸ்-எக்ஸ் (DTS-X), டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் (DTS Virtual X) உள்ளிட்ட ஆடியோ அம்சங்களைக் கொண்ட 30W ஸ்பீகர்கள் உடன் சியோமி 50 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது.எனவே இந்த டிவியில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.

சியோமி ஏ சீரிஸ் 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2024 எடிஷன் (Xiaomi A Series Full HD LED Smart Google TV 2024 Edition) மாடல் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.24,989 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.23,989 விலையில் வாங்கிவிட முடியும்.

43 இன்ச் சியோமி ஏ சீரிஸ் ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (Xiaomi A Series Smart TV Specifications): குவாட் கோர் ஏ35 சிபியு ( Quad Core A35 CPU) வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான 43 இன்ச் சியோமி ஏ சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இந்த சிபியு மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் கூகுள் டிவி ஓஎஸ் மூலம் இந்த டிவி இயங்குகிறது.

குறிப்பாக 8ஜிபி மெமரி மற்றும் 1.5ஜிபி ரேம் உடன் இந்த 43 இன்ச் சியோமி ஏ சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2024 எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். மேலும் சியோமி டிவி பிளஸ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி மாடல்.

ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியுடன் இந்த 43 இன்ச் சியோமி டிவி வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1920 x 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், விவிட் பிக்சர் இன்ஜின் (Vivid Picture Engine), 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன. மேலும் பெசல்லெஸ் டிசைன் உடன் இந்த டிவி அறிமுகம் செய்யப்பட்டது.

அதேபோல் டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ் விர்ச்சுவல்:எக்ஸ் (DTS Virtual: X) உள்ளிட்ட ஆடியோ அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த 43 இன்ச் சியோமி ஏ சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் 20W ஸ்பீக்கர்கள் இந்த டிவியில் உள்ளன. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் குரோம்காஸ்ட் ஆதரவுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது.

டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Ports), யுஎஸ்பி போர்ட் (USB Ports), ஆப்டிகல் (Optical) மற்றும் ஈதர்நெட் (Ethernet) கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த 43 இன்ச் சியோமி ஏ சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாடல்.

நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar) போன்ற இன்-பில்ட் ஓடிடி ஆப்கள் இந்த டிவியில் உள்ளன. ஸ்மார்ட் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சியோமி 43 இன்ச் ஸ்மார்ட் டிவி. வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் ஓடிடிதளங்களில் ஷார்ட்கட் பட்டன்கள் இந்த ரிமோட்டில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi 43-inch and 50-inch TVs available in India at budget prices: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X