1 இல்ல.. 2 ஆர்டர்.. மட்ட ரேட் ரூ.9,225-க்கு 32 இன்ச் LED டிவி.. ரூ.17,249-க்கு 43 இன்ச் 4K டிவி.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் டால்பி ஆடியோ கொண்ட சியோமி 32 இன்ச் எப் சீரிஸ் டிவி (Xiaomi 32 inch F Series TV) மற்றும் சியோமி 43 இன்ச் எப்எக்ஸ் 4கே டிவி (Xiaomi 43 inch FX 4K TV) ஆகிய மாடல்களுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. இதில் 43 இன்ச் டிவி மாடலானது, ஜிஎஸ்டி குறைப்பின் கீழ் அடிமட்ட பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த மாடல்களின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
சியோமி 32 இன்ச் எப் சீரிஸ் டிவியின் விலை ரூ.10,499ஆக இருக்கிறது. இப்போது, ரூ.1,500 உடனடி டிஸ்கவுண்ட் போக வாங்க கிடைக்கிறது. ஆகவே, ரூ.9,255 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு இந்த உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதுபோக அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு சலுகை, எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் கிடைக்கின்றன.

சியோமி 43 இன்ச் எப்எக்ஸ் 4கே டிவியின் விலை ரூ.19,499ஆக இருக்கிறது. இந்த விலை ஜிஎஸ்டி வரி குறைப்பின் கீழ் இருக்கிறது. இதுபோக எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் ஆர்டர் செய்தால், ரூ.2,225 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.17,249 பட்ஜெட்டில் ஆர்டர் செய்யலாம். இதற்கும் எக்ஸ்சேஞ்ச் சலுகை மற்ற பேங்க் கார்டுகளின் சலுகை கிடைக்கிறது.
சியோமி 32 இன்ச் எப் சீரிஸ் டிவி அம்சங்கள் (Xiaomi 32 inch F Series TV Specifications): இந்த சியோமி டிவிக்கு 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) எச்டி ரெடி (HD Ready) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர், எச்எல்ஜி மற்றும் விட்டர் பிக்சர் என்ஜின் கிடைக்கிறது. 20W ஆடியோ அவுட் மற்றும் டால்பி ஆடியோ சப்போர்ட் கிடைக்கிறது.
இதுபோக டிடிஎஸ்-எச்டி (DTS-HD) மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல்:எக்ஸ் கிடைக்கிறது. ஃபயர் டிவி ஓஎஸ் கிடைக்கிறது. ஒட்டுமொத்த ஓடிடி ஆப்களையும் பயன்படுத்தலாம். ஆப்பிள் ஏர்பிளே கிடைக்கிறது. அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த 32 இன்ச் சியோமி டிவியில் 1.5 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி கிடைக்கிறது.

சியோமி 43 இன்ச் எப்எக்ஸ் 4கே டிவி அம்சங்கள் (Xiaomi 43 inch FX 4K TV Specifications): இந்த டிவியில் 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 4K அல்ட்ரா எச்டி ரெசொலூஷன், 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 4K எச்டிஆர் (4K HDR), எச்டிஆர்10 (HDR10) மற்றும் விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine) கிடைக்கும்.
மேலும், கேமிங் பிரியர்களுக்கான எச்எல்ஜி (HLG), ரியாலிட்டி ப்ளோவ் எம்இஎம்சி (Reality Flow MEMC) மற்றும் டிசிஐ பி3 (DCI P3) கலர் காமட் கிடைக்கிறது. இந்த சியோமி 43 இன்ச் எப்எக்ஸ் 4கே டிவியின் ஆடியோவை பார்க்கையில், 24W சவுண்ட் அவுட் கிடைக்கிறது. இதற்கு டால்பி ஆடியோ (Dolby Audio) மற்றும் டிடிஎஸ்-எக்ஸ் (DTS-X) சப்போர்ட் உள்ளது.
மேலும், டிடிஎஸ் விர்ச்சுவல்:எக்ஸ் (DTS Virtual : X) கிடைக்கிறது. 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி கொடுக்கிறது. ஃபயர் டிவி ஓஎஸ் (Fire TV OS) கிடைக்கிறது. பிளே ஸ்டோர் ஆப்கள் கிடைக்கின்றன. அலெக்சா வாய்ஸ் கன்ட்ரோல் மற்றும் வாய்ஸ் ரிமோட் கிடைக்கிறது. ஈதர்நெட் (Ethernet), எச்டிஎம்ஐ (HDMI), யுஎஸ்பி (USB) மற்றும் வை-பை (Wi-Fi) கனெக்டிவிட்டி உள்ளது.


Click it and Unblock the Notifications








