அமேசான் சரவெடி ஆபர்.. டால்பி ஆடியோ.. 8ஜிபி மெமரி.. மலிவு விலையில் Xiaomi டிவி.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் நடைபெறும் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் (Great Indian Festival Sale) சியோமி 32 இன்ச் ஏ எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவிக்கு (Xiaomi 32 inch A HD Ready Google TV) தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஆனது மேம்பட்ட பல அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
தற்போது அமேசான் சிறப்பு விற்பனையில் சியோமி 32 இன்ச் ஏ எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவிக்கு 54 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.11,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.3000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

சியோமி 32 இன்ச் ஏ எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவி அம்சங்கள் (Xiaomi 32 inch A HD Ready Google TV Specifications): எச்டி எல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த 32 இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1366 x 768 பிக்சல்ஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle), 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
அதேபோல் ப்ரீமியம் மெட்டல் பெசல் லெஸ் டிசைன்(Premium Metal Bezel-less Design) உடன் இந்தசியோமி 32 இன்ச் ஏ எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவி வெளிவந்தது. அதுவும் இந்த டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine) ஆதரவும் இந்த டிவியில் உள்ளது.
ஏ53 குவாட் கோர் (A53 Quad Core) பிராசஸர் உடன் இந்த சியோமி ஸ்மார்ட் டிவி வெளிவந்தது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதி இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மற்றும் கூகுள் டிவி (Google TV OS) மூலம் இந்த டிவி இயங்குகிறது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும். மேலும் யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த 32 இன்ச் டிவியில் பயன்படுத்த முடியும்
டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ் எக்ஸ் (DTS X), டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் சவுண்ட்(DTS Virtual X Sound) ஆதரவு கொண்ட 20W ஸ்பீக்கர்கள் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளது. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு குரோம் காஸ்ட் (Chromecast) ஆதரவும் இந்த 32 இன்ச் டிவியில் உள்ளது.
யுஎஸ்பி போர்ட் (USB Port), எச்டிஎம்ஐ போர்ட் (HDMI), ஈதெர்நெட் போர்ட் (Ethernet Port), ஆடியோ ஜாக், ப்ளூடூத் (Bluetooth), வை-பை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சியோமி ஸ்மார்ட் டிவியில் உள்ளன. மேலும் வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்களை கொண்ட ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் இந்த டிவி உடன் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications