வீட்டுக்கு 2 ஆர்டர்.. ரூ.6,990 போதும்.. 200 இன்ச் புரொஜெக்டர்.. 4K வீடியோ.. ஆண்ட்ராய்டு 13 OS.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் நம்ப முடியாத பட்ஜெட் விலையில் எக்ஸ்எலக்ட்ரான் டெக்னோ ஸ்மார்ட் புரொஜெக்டர் (XElectron Techno Smart Projector) களமிறங்கி இருக்கிறது. 200 இன்ச் புரொஜெக்சன் மட்டுமல்லாமல், 4K ரெசொலூஷன், ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ், ஆடிடோ கீஸ்டோன் போன்ற பீச்சர்களை கொடுத்து இருக்கிறது. இந்த மாடலுடன் எக்ஸ்எலக்ட்ரான் டெக்னோ பிளஸ் ஸ்மார்ட் புரொஜெக்டரும் (XElectron Techno Plus Smart Projector) களமிறங்கி இருக்கிறது. இந்த பட்ஜெட் மாடல்களின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
100 இன்ச் ஸ்மார்ட் டிவியில் கிடைக்கும் பிரீமியம் பீச்சர்கள் வேண்டாம், மினிமம் பீச்சர்களுடன் பெரிய ஸ்கிரீன் கிடைத்தால் போதும், அப்படி ஏதாவது புரொஜெக்டர்கள் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு 100 இல்லை, 200 இன்ச் ஸ்கிரீன் புரொஜெக்சன் கொடுக்கும்படி இந்த எக்ஸ்எலக்ட்ரான் டெக்னோ மற்றும் எக்ஸ்எலக்ட்ரான் டெக்னோ பிளஸ் மாடல்கள் களமிறங்கி இருக்கின்றன.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ், டூயல் பேண்ட் வை-பை, ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டிகள் மட்டுமல்லாமல், ரோடேட்டபிள் டிசைன் கொடுக்கிறது. காம்பாக்ட் பாடி கிடைப்பதால், எளிதாக பயன்படுத்தலாம். 50,000 மணி நேரங்களுக்கு லாம்ப் லைப்-பான் கிடைக்கும் என்று அந்த நிறுவனம் சொல்கிறது. இப்போது, ஒவ்வொகு மாடல்களின் பீச்சர்களை பார்த்துவிட்டு, இறுதியாக விலை விவரங்களுக்கு செல்வோம்.
எக்ஸ்எலக்ட்ரான் டெக்னோ ஸ்மார்ட் புரொஜெக்டர் அம்சங்கள் (XElectron Techno Smart Projector Specifications): இந்த புரொஜெக்டரில் 720P நேட்டிவ் ரெசொலூஷன் கிடைக்கிறது. 4K சப்போர்ட் கிடைக்கிறது. 3X பிரைட்னஸ் மற்றும் ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone) கிடைக்கிறது. அதிகபட்சம் 200 இன்ச் வரையில் புரொஜெக்சன் செய்யலாம். ஆனால், 120 இன்ச் வரையில் கிளாரிட்டி கிடைக்கும்.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கிடைப்பதால், ஸ்மார்ட்போன் மற்றும் புரொஜெக்டர் கனெக்டிவிட்டி பக்காவாக இருக்கும். அதேபோல யூசர் எக்ஸ்பீரியன்ஸ் நன்றாக இருக்கும். ஏனென்றால், ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் சப்போர்ட் கொண்ட ஓடிடி ஆப்களும் இதில் பயன்படுத்த கிடைக்கின்றன. இந்த எக்ஸ்எலக்ட்ரான் டெக்னோ புரொஜெக்டர் லேம்புக்கு 50,000 மணி நேரங்கள் லைப்-பேன் கிடைக்கிறது.
கனெக்டிவிட்டியை பார்க்கையில், வை-பை 6 (Wi-Fi 6) கிடைக்கிறது. அதேபோல ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) வருகிறது. ஸ்மார்ட்போனில் இருந்து ஸ்கிரீன் ஷேரிங் செய்து கொள்ளலாம். மேலும், 4டி கீஸ்டோன் கரெக்சன் (4D Keystone Correction) கிடைக்கிறது. 9000 லூமென்ஸ் பிரைட்னஸ் பெற்று கொள்ளலாம். 1 ஜிபிக்கான ரேம் மற்றும் 8 ஜிபி ஸ்டோரேஜ் சப்போர்ட் கிடைக்கிறது.
20W ஆடியோ அவுட்புட் கொண்ட பில்ட்-இன் ஸ்பீக்கர்கள் வருகின்றன. 210 டிகிரியில் ரோடேட்டபிள் கிடைக்கிறது. நெட்பிளிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ போன்ற ஆப்களும் இதில் பயன்படுத்த கிடைக்கிறது. இந்த எக்ஸ்எலக்ட்ரான் டெக்னோ ஸ்மார்ட் புரொஜெக்டர் மாடலுக்கு ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கிறது. ஆகவே, ரிமோட் போகஸ் (Remote Focus) வருகிறது.
எச்டிஎம்ஐ, யுஎஸ்பி மற்றும் ஆடியோ அவுட் போர்ட்கள் கிடைக்கின்றன. இதே பீச்சர்கள் எக்ஸ்எலக்ட்ரான் டெக்னோ பிளஸ் ஸ்மார்ட் புரொஜெக்டர் (XElectron Techno Plus Smart Projector) மாடலிலும் கிடைக்கின்றன. ஆனால், இதில் 1080p நேட்டிவ் ரெசொலூஷன் கூடுதலாக கிடைக்கிறது. அதேபோல புல்எச்டி (Full HD) கிளாரிட்டி கிடைக்கிறது. இப்போது விலை விவரங்களை பார்ப்போம்.
எக்ஸ்எலக்ட்ரான் டெக்னோ ஸ்மார்ட் புரொஜெக்டரின் விலை ரூ. 6,990ஆக இருக்கிறது. எக்ஸ்எலக்ட்ரான் டெக்னோ பிளஸ் ஸ்மார்ட் புரொஜெக்டரின் விலை ரூ.8,990ஆக இருக்கிறது. டெக்னோ புரொடெக்டரானது சி7 மாடலாகவும், டெக்னோ பிளஸ் புரொஜெக்டரானது எம்2 மாடலாகவும் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications