Home
Gadgets

அமேசானில் எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. 200 இன்ச்.. 4K சப்போர்ட்.. ஆஃபரில் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட டெக்னோ ஸ்மார்ட் ஹோம் தியேட்டர் மூவி எச்டி ப்ரொஜெக்டர் (XElectron Techno Smart Home Theatre Movie HD Projector மாடல் ஆனது தற்போது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இப்போது இந்த சாதனத்தின் புதிய விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

தற்போது அமேசான் தளத்தில் எக்ஸ்எலக்ட்ரான் டெக்னோ ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடலுக்கு 64 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.6490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ப்ரொஜெக்டர் மாடலை வாங்கினால் ரூ.1200 வரை தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த ப்ரொஜெக்டர் மாடலை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

அமேசானில் எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. ஆஃபரில் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர்!

எக்ஸ்எலக்ட்ரான் டெக்னோ ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் அம்சங்கள் (XElectron Techno smart projector Specifications): 720P ரெசல்யூஷன் மற்றும் 1080பிக்ச்லஸ் மற்றும் 4கே சப்போர்ட் கொண்டுள்ளது இந்த எக்ஸ்எலக்ட்ரான் டெக்னோ ஸ்மார்ட் ஹோம் தியேட்டர் மூவி எச்டி ப்ரொஜெக்டர் மாடல். மேலும் இது எல்இடி ப்ரொஜெக்டர் மாடல் ஆகும்.

அதேபோல் 9000 ANSI லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness), 5000:1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ (Contrast Ratio) ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புதிய எக்ஸ்எலக்ட்ரான் ப்ரொஜெக்டர் மாடல். மேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த இதில் பல்வேறு புதிய அம்சங்களைப் பயன்படுத்த முடியும்.

குறிப்பாக எக்ஸ்எலக்ட்ரான் டெக்னோ ஸ்மார்ட் ஹோம் தியேட்டர் மூவி எச்டி ப்ரொஜெக்டர் மாடல் ஆனது 40 முதல் 200 இன்ச் வரையில் புரொஜெக்சன் செய்து கொள்ளலாம். ஆகவே 75-இன்ச், 100-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. இதுவே பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும். அதுவும் ஓடிடி-இல் வெளியாகும் படங்களை இதன் மூலம் தெளிவாகப் பார்க்க முடியும்.

அதுவும் ஆட்டோ மற்றும் 4D கீஸ்டோன் கரெக்சன் (Auto & 4D Keystone correction) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான எக்ஸ்எலக்ட்ரான் டெக்னோ ஸ்மார்ட் ஹோம் தியேட்டர் மூவி எச்டி ப்ரொஜெக்டர் மாடல். அதுவும் இதில் ஆட்டோ ஸ்க்ரீன் அலைன்மெண்ட் (Auto screen alignment) வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ப்ரொஜெக்டர், சுவர் மற்றும் கூரையில் ப்ரொஜெக்ஷன் செய்வதற்காக 180 டிகிரி சுழற்றக்கூடிய டேபிள்டாப் வடிவமைப்பு மற்றும் இன்பில்ட் பேஸ் ஸ்பீக்கர் (built-in bass speaker) ஆகியவற்றுடன் வருகிறது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எக்ஸ்எலக்ட்ரான் நிறுவனம்.

அமேசானில் எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. ஆஃபரில் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர்!

ஜியோஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ, ஜீ5 போன்ற பல ஓடிடி தளங்களை இந்த எக்ஸ்எலக்ட்ரான் ஸ்மார்ட் ஹோம் தியேட்டர் மூவி எச்டி ப்ரொஜெக்டர் மாடலில் பயன்படுத்த முடியும். வைஃபை 6, ப்ளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய சாதனத்தில் உள்ளன.

மேலும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் ஸ்கிரீன் மிரரிங் ஆதரவுகளையும் கொண்டுள்ளது எக்ஸ்எலக்ட்ரான் டெக்னோ ஸ்மார்ட் ஹோம் தியேட்டர் மூவி எச்டி ப்ரொஜெக்டர் மாடல். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் அனைத்து சிறப்பான அம்சங்களும் இந்த புதிய எக்ஸ்எலக்ட்ரான் ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன.

Best Mobiles in India

English summary
XElectron Techno smart projector with 4K Support available at 64 percent discount on Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X