Home
Gadgets

100 இன்ச் TV கதை முடிந்தது.. கம்மி பட்ஜெட்.. ஆட்டோ கீஸ்டோன்.. 200 இன்ச்.. புதிய 4K ப்ரொஜெக்டர் அறிமுகம்..

சமீபத்தில் எக்ஸ்எலக்ட்ரான் டெக்னோ (XElectron Techno) ப்ரொஜெக்டர் மாடல் ஆனது ரூ.6,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ப்ரொஜெக்டர் மாடலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் எக்ஸ்எலக்ட்ரான் நிறுவனம் எக்ஸ்எலக்ட்ரான் டெக்னோ பிளஸ் (XElectron Techno Plus) எனும் புதிய ப்ரொஜெக்டர் மாடலை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

க்ஸ்எலக்ட்ரான் டெக்னோ பிளஸ் ப்ரொஜெக்டர் அம்சங்கள் (XElectron Techno Plus Specifications): இது எல்இடி ப்ரொஜெக்டர் மாடல் ஆகும். அதுவும் 1920×1080 ஃபுல் எச்டி நேட்டிங் ரெசல்யூஷன் மற்றும் 4கே சப்போர்ட் கொண்டுள்ளது இந்த எக்ஸ்எலக்ட்ரான் டெக்னோ பிளஸ் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல்.

100 இன்ச் TV கதை முடிந்தது.. புதிய 4K ப்ரொஜெக்டர் அறிமுகம்..

அதேபோல் 9000 ANSI லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness), 5000:1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ (Contrast Ratio) ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புதிய எக்ஸ்எலக்ட்ரான் டெக்னோ பிளஸ் ப்ரொஜெக்டர் மாடல். மேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இதில் பல்வேறு புதிய அம்சங்களைப் பயன்படுத்த முடியும்.

குறிப்பாக எக்ஸ்எலக்ட்ரான் டெக்னோ பிளஸ் ப்ரொஜெக்டர் மூலம் 200 இன்ச் வரையில் புரொஜெக்சன் செய்து கொள்ளலாம். ஆகவே 150-இன்ச், 100-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. இதுவே பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும். அதுவும் ஓடிடி-இல் வெளியாகும் படங்களை இதன் மூலம் தெளிவாகப் பார்க்க முடியும்.

அதேபோல் இந்த ப்ரொஜெக்டர், சுவர் மற்றும் கூரையில் ப்ரொஜெக்ஷன் செய்வதற்காக 180 டிகிரி சுழற்றக்கூடிய டேபிள்டாப் வடிவமைப்பு மற்றும் இன்பில்ட் பேஸ் ஸ்பீக்கர் (built-in bass speaker) ஆகியவற்றுடன் வருகிறது. குறிப்பாக இதில் 20W ஸ்பீக்கர்கள் உள்ளன. எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

ஆட்டோ மற்றும் 4D கீஸ்டோன் கரெக்சன் (Auto & 4D Keystone correction), ரிமோட் போகஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த புதிய சாதனத்தில் உள்ளன. குறிப்பாக இந்த எக்ஸ்எலக்ட்ரான் டெக்னோ பிளஸ் மாடலின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

அதுவும் நெட்பிளிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ, ஜியோஹாட்ஸ்டார், ஜீ5 போன்ற பல ஓடிடி தளங்களை இந்த எக்ஸ்எலக்ட்ரான் டெக்னோ பிளஸ் ப்ரொஜெக்டர் மாடலில் பயன்படுத்த முடியும். வைஃபை 6, ப்ளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய சாதனத்தில் உள்ளன.

100 இன்ச் TV கதை முடிந்தது.. புதிய 4K ப்ரொஜெக்டர் அறிமுகம்..

1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய எக்ஸ்எலக்ட்ரான் டெக்னோ பிளஸ் ப்ரொஜெக்டர் மாடல். 3.5எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் ஸ்கிரீன் மிரரிங் ஆதரவுகளையும் கொண்டுள்ளது இந்த ப்ரொஜெக்டர் மாடல். இதுதவிர 50000 மணி நேர லேம்ப் லைஃப் (50000 Hours Lamp Life) ஆதரவும் கொண்டுள்ளது இந்த சாதனம். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் அனைத்து சிறப்பான அம்சங்களும் இந்த புதிய எக்ஸ்எலக்ட்ரான் ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன.

எக்ஸ்எலக்ட்ரான் டெக்னோ பிளஸ் ப்ரொஜெக்டர் மாடலின் விலை ரூ.8499-ஆக உள்ளது. அமேசான் மற்றும் எக்ஸ்எலக்ட்ரான் இணையதளம் மூலம் இந்த புதிய எக்ஸ்எலக்ட்ரான் டெக்னோ பிளஸ் ப்ரொஜெக்டர் மாடலை வாங்க முடியும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த சாதனம் வெளியாகி உள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும்.

Best Mobiles in India

English summary
XElectron Techno Plus projector launched in india: check specification price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X