அமேசானில் ஆர்டர் அள்ளுமே.. 200 இன்ச்.. ஆட்டோ கீஸ்டோன்.. ஆபரில் 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் 4கே சப்போர்ட் கொண்ட எக்ஸ்எலக்ட்ரான் டெக்னோ பிளஸ் (XElectron Techno Plus) ப்ரொஜெக்டர் மாடல் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் மாடல் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த எக்ஸ்எலக்ட்ரான் டெக்னோ பிளஸ் மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
அமேசானில் எக்ஸ்எலக்ட்ரான் டெக்னோ பிளஸ் மாடலுக்கு 55 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.8499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த மாடலை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த எக்ஸ்எலக்ட்ரான் டெக்னோ பிளஸ் மாடலை ரூ.6499 வாங்கிவிட முடியும்.

எக்ஸ்எலக்ட்ரான் டெக்னோ பிளஸ் ப்ரொஜெக்டர் அம்சங்கள் (XElectron Techno Plus Specifications): இது ஒரு எல்இடி ப்ரொஜெக்டர் மாடல் ஆகும். 1920×1080 ஃபுல் எச்டி நேட்டிங் ரெசல்யூஷன் மற்றும் 4K சப்போர்ட் கொண்டுள்ளது இந்த எக்ஸ்எலக்ட்ரான் டெக்னோ பிளஸ் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல்.
9000 ANSI லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness), 5000:1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ (Contrast Ratio) ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த எக்ஸ்எலக்ட்ரான் டெக்னோ பிளஸ் ப்ரொஜெக்டர் மாடல். மேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இதில் பல்வேறு புதிய அம்சங்களைப் பயன்படுத்த முடியும்.
எக்ஸ்எலக்ட்ரான் டெக்னோ பிளஸ் ப்ரொஜெக்டர் மூலம் 200 இன்ச் வரையில் புரொஜெக்சன் செய்து கொள்ளலாம். ஆகவே 150-இன்ச், 100-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. இதுவே பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும். அதுவும் ஓடிடி-இல் வெளியாகும் படங்களை இதன் மூலம் தெளிவாகப் பார்க்க முடியும்.
இந்த ப்ரொஜெக்டர், சுவர் மற்றும் கூரையில் ப்ரொஜெக்ஷன் செய்வதற்காக 180 டிகிரி சுழற்றக்கூடிய டேபிள்டாப் வடிவமைப்பு மற்றும் இன்பில்ட் பேஸ் ஸ்பீக்கர் (built-in bass speaker) ஆகியவற்றுடன் வருகிறது. குறிப்பாக இதில் 20W ஸ்பீக்கர்கள் உள்ளன. எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
குறிப்பாக ஆட்டோ மற்றும் 4D கீஸ்டோன் கரெக்சன் (Auto & 4D Keystone correction), ரிமோட் போகஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த சாதனத்தில் உள்ளன. குறிப்பாக இந்த எக்ஸ்எலக்ட்ரான் டெக்னோ பிளஸ் மாடலின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

நெட்பிளிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ, ஜியோஹாட்ஸ்டார், ஜீ5 போன்ற பல ஓடிடி தளங்களை இந்த எக்ஸ்எலக்ட்ரான் டெக்னோ பிளஸ் ப்ரொஜெக்டர் மாடலில் பயன்படுத்த முடியும். வைஃபை 6, ப்ளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாதனத்தில் உள்ளன.
மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த எக்ஸ்எலக்ட்ரான் டெக்னோ பிளஸ் ப்ரொஜெக்டர் மாடல். 3.5எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் ஸ்கிரீன் மிரரிங் ஆதரவுகளையும் கொண்டுள்ளது இந்த ப்ரொஜெக்டர் மாடல். இதுதவிர 50000 மணி நேர லேம்ப் லைஃப் (50000 Hours Lamp Life) ஆதரவும் கொண்டுள்ளது இந்த சாதனம். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் அனைத்து சிறப்பான அம்சங்களும் இந்த எக்ஸ்எலக்ட்ரான் ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன.


Click it and Unblock the Notifications
