பிளிப்கார்ட்டில் அள்ளுங்க.. 150 இன்ச்.. 3200mAh பேட்டரி.. ஆட்டோ கீஸ்டோன்.. ஆஃபரில் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர்..
பிளிப்கார்ட் தளத்தில் தரமான எக்ஸ்எலக்ட்ரான் பாக்கெட்பீம் போர்ட்டபிள் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் (XElectron PocketBeam smart projector) மாடல் தற்போது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் இந்த ப்ரொஜெக்டர் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த மாடலின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் எக்ஸ்எலக்ட்ரான் பாக்கெட்பீம் போர்ட்டபிள் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடலுக்கு 60 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.7999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி இந்த ப்ரொஜெக்டர் மாடலை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் உள்ளன. ஆகவே இந்த மாடலை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

எக்ஸ்எலக்ட்ரான் பாக்கெட்பீம் ப்ரொஜெக்டர் அம்சங்கள் (XElectron PocketBeam projector Specifications): எக்ஸ்எலக்ட்ரான் பாக்கெட்பீம் ப்ரொஜெக்டர் மாடல் 720P HD நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் 1080P டிகோடிங் சப்போர்ட் (1080P decoding support) வழங்குகிறது. 6000 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness)வசதி இதில் உள்ளது. இந்த எக்ஸ்எலக்ட்ரான் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் சிறிய வடிவமைப்புடன் வெளியாகி உள்ளது. எனவே இதைப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்
40,000 மணி நேர எல்இடி லேம்ப் லைஃப் (LED Lamp Life) இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் மூலம் தெளிவான மற்றும் துல்லியமான வீடியோக்களை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஒரு தியேட்டர் அனுபவத்தைத் தரும் இந்த எக்ஸ்எலக்ட்ரான் பாக்கெட்பீம் ப்ரொஜெக்டர் மாடல்.
எக்ஸ்எலக்ட்ரான் பாக்கெட்பீம் ப்ரொஜெக்டர் மூலம் 150 இன்ச் வரையில் புரொஜெக்சன் செய்து கொள்ளலாம். ஆகவே 75-இன்ச், 100-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. இதுவே பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும். அதுவும் ஓடிடி-இல் வெளியாகும் படங்களை இதன் மூலம் தெளிவாகப் பார்க்க முடியும்.
அதேபோல் ரிமோட் ஃபோகஸ் (Remote Focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த எக்ஸ்எலக்ட்ரான் பாக்கெட்பீம் போர்ட்டபிள் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன.
குறிப்பாக 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி ஆதரவு கொண்டுள்ளது இந்த எக்ஸ்எலக்ட்ரான் பாக்கெட்பீம் ப்ரொஜெக்டர் மாடல். மேலும் ஸ்கிரீன் மிரரிங்கை (Screen Mirroring) ஆதரிக்கிறது இந்த எக்ஸ்எலக்ட்ரான் ப்ரொஜெக்டர். அதுவும் இதில் ஏர்பிளே (Airplay) மற்றும் மிராகாஸ்ட் (Miracast) ஆதரவுகள் உள்ளன.

அதுவும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மூலம் இந்த எக்ஸ்எலக்ட்ரான் பாக்கெட்பீம் போர்ட்டபிள் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல் இயங்குகிறது. பின்பு நெட்பிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ, யூட்யூப் போன்ற பில்ட்-இன் ஓடிடி ஆப்கள் (built-in OTT apps) இந்த புதிய ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன.
புளூடூத் 5.0, டூயல் பேண்ட் வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், AUX, இயர்போன் அவுட் உள்ளிட்ட இயர்போன் அவுட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் எக்ஸ்எலக்ட்ரான் பாக்கெட்பீம் ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. மேலும் இந்த சாதனத்தில் பில்ட்-இன் ஸ்பீக்கர்கள் உள்ளன. அதேபோல் 3200எம்ஏஎச் பேட்டரி உடன் எக்ஸ்எலக்ட்ரான் பாக்கெட்பீம் ப்ரொஜெக்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 2 மணி நேரத்திற்கு மேல் இயங்கும் .


Click it and Unblock the Notifications