XElectron அறிமுகம் செய்த 4கே ப்ரொஜெக்டர்.. ஆண்ட்ராய்டு OS.. 250 இன்ச்.. எந்த மாடல்? என்ன விலை?
எக்ஸ்எலக்ட்ரான் நிறுவனம் இந்தியாவில் எக்ஸ்எலக்ட்ரான் லுமினெக்ஸ் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் (XElectron Luminex smart projector) மாடலை அறிமுகம் செய்துள்ளது. 4கே சப்போர்ட், ஆண்ட்ராய்டு ஓஎஸ், 8ஜிபி மெமரி மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ப்ரொஜெக்டர் வெளிவந்துள்ளது. இப்போது இந்த எக்ஸ்எலக்ட்ரான் லுமினெக்ஸ் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடலின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
எக்ஸ்எலக்ட்ரான் லுமினெக்ஸ் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் அம்சங்கள் (XElectron Luminex smart projector Specifications): 1080p Full HD நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் 4K அல்ட்ரா எச்டி ரெசல்யூஷன் கொண்டுள்ளது எக்ஸ்எலக்ட்ரான் லுமினெக்ஸ் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல். குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் சிறந்த திரை அனுபவத்தை தரும்.

அதேபோல் 160,000 லுமன்ஸ் (16,000 lumens) பிரைட்னஸ் உடன் எக்ஸ்எலக்ட்ரான் லுமினெக்ஸ் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் வெளியாகி உள்ளது. மேலும் 10,000:1 டைனமிக் கான்ட்ராஸ்ட் ஆதரவும் இந்த சாதனத்தில் உள்ளது. எனவே இந்த ப்ரொஜெக்டர் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்க முடியும்.
எக்ஸ்எலக்ட்ரான் லுமினெக்ஸ் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மூலம் 250 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே இது உங்கள் வீட்டில் மினி தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும். பெரிய ஸ்மார்ட் டிவிகளை வாங்க அவசியம் இருக்கவே இருக்காது. 180° சுழலும் ஸ்டாண்ட் உடன் இந்த சாதனம் வெளியாகி உள்ளது.
50,000 மணி நேர எல்இடி லேம்ப் லைஃப் (LED Lamp Life) இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 (Android 12) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த எக்ஸ்எலக்ட்ரான் லுமினெக்ஸ் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல் வெளியாகி உள்ளது. எனவே இந்த சாதனத்தில் பல்வேறு புதிய அம்சங்களைப் பயன்படுத்த முடியும்.
யூடியூப், நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), போன்ற பல ஓடிடி (OTT) ஆப்ஸ்களை இந்த ப்ரொஜெக்டரில் பயன்படுத்த முடியும். அதுவும் இந்த ப்ரொஜெக்டர் மாடலின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எக்ஸ்எலக்ட்ரான் நிறுவனம்.
1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி உடன் எக்ஸ்எலக்ட்ரான் லுமினெக்ஸ் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல் வெளியாகி உள்ளது. அதேபோல் ஏர்பிளே, மிராக்காஸ்ட், ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உடன் எக்ஸ்எலக்ட்ரான் லுமினெக்ஸ் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல் வெளியாகி உள்ளது.
வைஃபை, ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போரட், 3.5எம்எம் ஆடியோ அவுட், ஈதர்நெட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உடன் எக்ஸ்எலக்ட்ரான் லுமினெக்ஸ் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் உடன் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டிரைவ், செட்-டாப் பாக்ஸ், மல்டிபிள் போர்ட் போன்றவற்றை கனெக்ட் செய்து கொள்ளலாம்.

10W பில்ட் இன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இந்த எக்ஸ்எலக்ட்ரான் லுமினெக்ஸ் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் வெளியாகி உள்ளது. ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone) ஆதரவுகளும் இந்த அசத்தலான எக்ஸ்எலக்ட்ரான் லுமினெக்ஸ் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன.
எக்ஸ்எலக்ட்ரான் லுமினெக்ஸ் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் ரூ.14,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அமேசான், பிளிப்கார்ட், எக்ஸ்எலக்ட்ரான் தளங்களில் இந்த ப்ரொஜெக்டர் மாடலை வாங்க முடியும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ப்ரொஜெக்டர் வெளியாகி உள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும்.


Click it and Unblock the Notifications








