இனி 100 இன்ச் டிவி எதுக்கு? 250 இன்ச், ஆண்ட்ராய்டு ஓஎஸ், ஆட்டோ கீஸ்டோன்.. ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட எக்ஸ்எலக்ட்ரான் லுமினெக்ஸ் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் (XElectron Luminex Certified OS Smart Home Projector 4K) மாடல் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இது ஒரு 4கே ப்ரொஜெக்டர் ஆகும். இப்போது இந்த மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
அமேசான் தளத்தில் எக்ஸ்எலக்ட்ரான் லுமினெக்ஸ் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடலுக்கு 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ப்ரொஜெக்டர் மாடலை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் உள்ளன. ஆகவே இந்த மாடலை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

எக்ஸ்எலக்ட்ரான் லுமினெக்ஸ் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் அம்சங்கள் (XElectron Luminex smart projector Specifications): 1080p Full HD நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் 4K அல்ட்ரா எச்டி ரெசல்யூஷன் கொண்டுள்ளது எக்ஸ்எலக்ட்ரான் லுமினெக்ஸ் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல். குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் சிறந்த திரை அனுபவத்தை தரும்.
அதேபோல் 16000 லுமன்ஸ் (16000 lumens) பிரைட்னஸ் உடன் எக்ஸ்எலக்ட்ரான் லுமினெக்ஸ் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் வெளியாகி உள்ளது. மேலும் 20,000:1 கான்ட்ராஸ்ட் ஆதரவும் இந்த சாதனத்தில் உள்ளது. எனவே இந்த ப்ரொஜெக்டர் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்க முடியும்.
எக்ஸ்எலக்ட்ரான் லுமினெக்ஸ் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மூலம் 250 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே இது உங்கள் வீட்டில் மினி தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும். பெரிய ஸ்மார்ட் டிவிகளை வாங்க அவசியம் இருக்கவே இருக்காது. மேலும் 270° சுழலும் ஸ்டாண்ட் உடன் இந்த சாதனம் வெளியாகி உள்ளது.
ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த எக்ஸ்எலக்ட்ரான் லுமினெக்ஸ் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல் வெளியாகி உள்ளது. எனவே இந்த சாதனத்தில் பல்வேறு புதிய அம்சங்களைப் பயன்படுத்த முடியும்.
யூடியூப், நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), போன்ற பல ஓடிடி (OTT) ஆப்ஸ்களை இந்த ப்ரொஜெக்டரில் பயன்படுத்த முடியும். அதுவும் இந்த ப்ரொஜெக்டர் மாடலின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எக்ஸ்எலக்ட்ரான் நிறுவனம்.
ஏர்பிளே, மிராக்காஸ்ட், ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உடன் எக்ஸ்எலக்ட்ரான் லுமினெக்ஸ் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல் வெளியாகி உள்ளது.

வைஃபை, ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போரட், 3.5எம்எம் ஆடியோ அவுட், ஈதர்நெட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உடன் எக்ஸ்எலக்ட்ரான் லுமினெக்ஸ் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் உடன் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டிரைவ், செட்-டாப் பாக்ஸ், மல்டிபிள் போர்ட் போன்றவற்றை கனெக்ட் செய்து கொள்ளலாம்.
20W பில்ட் இன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இந்த எக்ஸ்எலக்ட்ரான் லுமினெக்ஸ் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் வெளியாகி உள்ளது. ஆட்டோ ஸ்கிரீன் அலைன்மெண்ட், ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Auto Obstacle Avoidance), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone) ஆதரவுகளும் இந்த அசத்தலான எக்ஸ்எலக்ட்ரான் லுமினெக்ஸ் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன.


Click it and Unblock the Notifications