120 இன்ச் TV கதை முடிந்தது.. 300 இன்ச் 4K ப்ரொஜெக்டர்.. ஆட்டோ கீஸ்டோன், போகஸ்.. Google TV ஓஎஸ்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 3 பிளஸ் கூகுள் டிவி ப்ரொஜெக்டர் (XElectron iProjector 3 Plus Google TV Projector) மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 120 இன்ச் டிவிகள் கிடைக்கும் விலையில் இருந்து பாதிக்கு பாதியைவிட மலிவான விலைக்கு கிடைக்கிறது. இந்த 300 இன்ச் 4கே ப்ரொஜெக்டரின் விலை மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
கூகுள் டிவி ஓஎஸ், பெரிய ஸ்கிரீன், 4K சப்போர்ட் மற்றும் இன்-பில்ட் ஸ்பீக்கர்களை கொண்ட மாடலாக இந்த எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 3 பிளஸ் வெளியாகி இருக்கிறது. ஆட்டோ கீஸ்டோன், ஆட்டோ போகஸ் மற்றும் ஆட்டோ ஸ்கிரீன் அலைன்மெண்ட் போன்ற பீச்சர்களையும் கொடுத்து நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. விலைக்கு முன்பாக பீச்சர்களை பார்த்துவிடலாம்.

எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 3 பிளஸ் அம்சங்கள் (XElectron iProjector 3 Plus Specifications): 55 இன்ச் முதல் 300 இன்ச் வரையில் இந்த எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 3 பிளஸ் மாடலில் ப்ரொஜெக்சன் செய்து கொள்ளலாம். இதில் எச்டிஆர்10 (HDR10) மற்றும் 1080p நேட்டிவ் ரெசொலூஷன் (Native Resolution) கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், 2000 ஏஎன்எஸ்ஐ லுமென்ஸ் (ANSI Lumens) உள்ளது.
4K கன்டென்ட் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. ஸ்மார்ட் டிவியை போலவே கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொண்டுள்ளது. ஆகவே, நெட்பிளிஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஜீ5 (Zee5), சோனிலிவ் (SonyLIV), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) ஓடிடி ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) கொடுக்கப்பட்டு உள்ளது.
கூகுள் டிவி ஓஎஸ் கிடைப்பதால், ஓடிடி ஆப்கள் மட்டுமல்லாமல், 10,000+ ஆப்களையும் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) கிடைக்கும். மேலும், கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assitant) கொடுக்கப்பட்டு உள்ளது. ரிமோட்டிலும் வாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கிறது. கூகுள் போட்டோஸ் (Google Photos) போன்ற ஆப்களையும் பயன்படுத்தலாம்
ஓடிடி ஆப்களுக்கான குயிக் அக்சஸ் கீகள் கொடுக்கப்பட்டு உள்ளன. ஆகவே, ஸ்மார்ட் டிவிகளுக்கு நிகரான அவுட்புட் பெற்று கொள்ளலாம். 4டி மற்றும் 4பி கரெக்சன் கிடைத்துள்ளது. ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் கரெக்சன் (Auto Keystone Correction), ஆட்டோ ஸ்கிரீன் ஃபிட் (Auto Screen Fit), அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Obstacle Avoidance) கொடுக்கப்பட்டு உள்ளது.
20W பில்ட்-இன்ஸ் பேஸ் ஸ்பீக்கர்கள் (Built-in Bass Speakers) கொண்டுள்ளது. ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.4), வை-பை 6 (Wi-Fi 6) மற்றும் டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi) கொடுக்கப்பட்டு உள்ளது. ஏர்பிளே (Airplay) மற்றும் மிராகாஸ்ட் (Miracast) ஆகிய வயர்லெஸ் ஸ்கிரீன் மிரரிங் (Wireless Screen Mirroring) சப்போர்ட்டை இந்த எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 3 பிளஸ் மாடல் கொண்டுள்ளது.
மேலும், எல்ஏஎன் (LAN), எச்டிஎம்ஐ (HDMI) மற்றும் யுஎஸ்பி (USB) ஆகிய போர்ட்களை கொண்டுள்ளது. ஏவி இன் (AV IN) மற்றும் இயர்போன் ஜாக் (Earphone Jack) கிடைக்கிறது. ரூ.27,990 ஆக இந்த எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 3 பிளஸ் கூகுள் டிவி ப்ரொஜெக்டரின் விலை இருக்கிறது. தள்ளுபடி போக அமேசான் (Amazon ), பிளிப்கார்ட் (Flipkart) போன்ற தளங்களில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








