TV-க்கு பெரிய கும்பிடு.. ரூ.17,990-க்கு 300 இன்ச் 4K HDR ப்ரொஜெக்டர்.. 32GB மெமரி.. DTS ஆடியோ.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 2 பிளஸ் (XElectron iProjector 2 Plus) மாடல் களமிறங்கி இருக்கிறது. கிட்டத்தட்ட 43 இன்ச் டிவி வாங்கும் பட்ஜெட்டில் 300 இன்ச் ப்ரொஜெக்சன் கொடுக்கிறது. 4K எச்டிஆர், 32 ஜிபி மெமரி, டிடிஎஸ் ஆடியோ டியூனிங், 2 ஜிபி ரேம், ஆட்டோ போகஸ், ஆட்டோ கீஸ்டோன் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 2 பிளஸ் மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
100 இன்ச் டிவிகளை தூக்கி சாப்பிடும்படியான ஸ்கிரீன் அவுட்புட்களுடன் எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 2 பிளஸ் மற்றும் எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 1 பிளஸ் (XElectron iProjector 1 Plus) ஆகிய மாடல்கள் வெளியாகி இருக்கிறது. அமேசான் தளத்தில் தள்ளுபடி போக விற்பனைக்கு கிடைக்கிறது. ஒவ்வொரு மாடல்களிலும் கிடைக்கும் பீச்சர்களை முதலில் பார்க்கலாம்.

எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 2 பிளஸ் அம்சங்கள் (XElectron iProjector 2 Plus Specifications): இந்த ப்ரொஜெக்டரில் நேட்டிவ் 1080p ரெசொலூஷன் மற்றும் 4K எச்டிஆர் சப்போர்ட் கிடைக்கிறது. இதுபோக 1500 ஏஎன்எஸ்ஐ (ANSI) மற்றும் 20000 லூமென்ஸ் கிடைக்கிறது. மொத்தமாக 50,000 மணி நேரங்களுக்கு லாம்ப்-லைப் கிடைக்கும். ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (Android 12 OS) கிடைக்கிறது.
குவாட் கோர் ஏ53 (Quad Core A53) ப்ராசஸர் கிடைக்கிறது. நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ மற்றும் ஜியோஹாட்ஸ்டார் போன்ற இன்-பில்ட் ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. 2 ஜிபி ரேம் + 32 ஜிபி மெமரி கிடைக்கிறது. இந்த ஐப்ரொஜெக்டர் 2 பிளஸ் மாடலில் 300 இன்ச் வரையில் ப்ரொஜெக்சன் செய்து கொள்ளலாம், இதில் ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone) கிடைக்கிறது.
மேலும், டில்ட் கரெக்சன் (Tilt Correction) மற்றும் ஆட்டோ ஸ்கிரீன் ஃபிட் (Auto Screen Fit) சப்போர்ட் கிடைக்கிறது. இதுபோக அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Obstacle Avoidance) கிடைக்கிறது. ஆகவே, கிட்டத்தட்ட ஹோம் தியேட்டருக்கும் மேல் ஸ்கிரீன் அவுட்புட் எதிர்பார்க்கலாம். இதற்கு ஏற்ப ஆடியோ கிடைக்கிறது. ஆகவே, 10W சவுண்ட் அவுட் கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன.
இதில் டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் டீகோடிங் கிடைக்கிறது. ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கனெக்டிவிட்டி மூலம் டூ-வே ஆடியோ சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், வை-பை 6 (Wi-Fi 6), ஏர்பிளே (AirPlay) மற்றும் மிராகாஸ்ட் (Miracast) போன்ற வயர்லெஸ் கனெக்டிவிட்டிகள் கிடைக்கின்றன. மேலும், எச்டிஎம்ஐ, யுஎஸ்பி, ஏவி இன் மற்றும் ஆடியோ அவுட் கனெக்டிவிட்டி உள்ளது.

எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 1 பிளஸ் அம்சங்கள் (XElectron iProjector 1 Plus Specifications): 300 இன்ச் ப்ரொஜெக்சன், 1080p நேட்டிவ் ரெசொலூஷன் மற்றும் 4K எச்டிஆர் சப்போர்ட் உள்ளது. 1500 ஏஎன்சி, 20000 லூமென்ஸ் மற்றும் 50,000 மணி நேரங்களுக்கு லாம்ப் லைப் உள்ளது. ஆண்ட்ராய்டு ஓஎஸ் மற்றும் குவாட் கோர் ஏ53 ப்ராசஸர் உள்ளது. 2 ஜிபி ரேம் + 32 எம்பி மெமரி கிடைக்கிறது.
ரிமோட் போகஸ் (Remote Focus) உள்ளது. மற்றபடி ஆட்டோ கிஸ்டோன், ஆட்டோ டில்ட் கரெக்சன் உள்ளது. டூயல் ஸ்பீக்கர்கள் (10W) கிடைக்கிறது. டால்பி மற்றும் டிடிஎஸ் டீகோடிங் கிடைக்கிறது. ப்ளூடூத் 5.4, வை-பை 6 போன்ற கனெக்டிவிட்டி பீச்சர்கள் முந்தைய மாடலை போலவே இருக்கின்றன. ஐப்ரொஜெக்டர் 2 பிளஸ் மாடலின் விலை ரூ.17,990ஆக இருக்கிறது.
எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 1 பிளஸ் மாடலின் விலை ரூ.15,990ஆக இருக்கிறது. அமேசான், பிளிப்கார்ட் மற்றும் எக்ஸ்எலக்ட்ரான் ஆகிய தளங்களில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இந்த மாடல்களுக்கு 1 வருட வாரண்டி கிடைக்கிறது. மலிவான விலையில் 300 இன்ச் வரையில் ப்ரொஜெக்சன் கிடைக்க வேண்டுமானால், இந்த மாடல்களை வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








