இதுவரை இல்லாத அதிரடி ஆஃபர்.. 300 இன்ச்.. ஆட்டோ கீஸ்டோன்.. 4K ப்ரொஜெக்டர் வாங்க சரியான நேரம்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் தற்போது பிளிப்கார்ட் ப்ரீடம் சேல் 2026 (Flipkart Freedom Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் 4கே சப்போர்ட் கொண்ட எக்ஸ்எலெக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 2 (XElectron iProjector 2) மாடல் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் இப்போது நடைபெறும் சிறப்பு விற்பனையில் எக்ஸ்எலெக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 2 மாடலுக்கு 59 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.16,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் கிடைக்கும். ஆகவே இந்த மாடலை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

எக்ஸ்எலெக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 2 அம்சங்கள் (XElectron iProjector 2 Specifications): 1080p நேட்டிவ் ரெசல்யூஷன் (Native Resolution) மற்றும் 4K எச்டிஆர் சப்போர்ட் கொண்டுள்ளது எக்ஸ்எலெக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 2 மாடல். 16.7 மில்லியன் கலர்ஸ் சப்போர்ட் இதில் உள்ளது. ஆகவே இந்த மாடல் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
20000 லுமன்ஸ் (20000 lumens) பிரைட்னஸ் உடன் எக்ஸ்எலெக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 2 மாடல் வெளியாகி உள்ளது. மேலும் 10000:1 கான்ட்ராஸ்ட் ஆதரவும் இந்த சாதனத்தில் உள்ளது. எனவே இந்த ப்ரொஜெக்டர் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்க முடியும்.
எக்ஸ்எலெக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 2 மாடல் மூலம் 300 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே இது உங்கள் வீட்டில் மினி தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும். தரமான ஏ53 குவாட் கோர் சிபியு கொண்டுள்ளது இந்த மாடல். அதேபோல் இந்த மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி உடன் எக்ஸ்எலெக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 2 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சாதனம் வெளியாகி உள்ளது. யூடியூப், நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), போன்ற பல ஓடிடி (OTT) ஆப்ஸ்களை இந்த ப்ரொஜெக்டரில் பயன்படுத்த முடியும்.
ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), ஆட்டோ அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Auto Obstacle Avoidance), ஆட்டோ டில்ட் கரெக்ட் (Auto Tilt Correct), ஆட்டோ ஸ்கிரீன் ஃபிட் (Auto Screen Fit) போன்ற அனைத்து சிறப்பான வசதிகளும் இந்த எக்ஸ்எலெக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 2 மாடலில் உள்ளன.

டூயல் 10W ஸ்பீக்கர்கள் எக்ஸ்எலெக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 2 மாடலில் உள்ளன. எனவே இந்த சாதனம் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். வைஃபை 6, டூயல் பேண்ட் வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாதனத்தில் உள்ளன. ஏர்பிளே, மிராக்காஸ்ட், ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உடன் எக்ஸ்எலெக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 2 மாடல் வெளியாகி உள்ளது.
அனைத்து சிறப்பான அம்சங்களுடன் எக்ஸ்எலெக்ட்ரான் ஐப்ரொஜெக்டர் 2 மாடல் கம்மி பட்ஜெட்டில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். விரைவில் எக்ஸ்எலெக்ட்ரான் நிறுவனம் பல்வேறு புதிய ப்ரொஜெக்டர் மாடல்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications