இனி 100 இன்ச் டிவிக்கு குட்பை.. 300 இன்ச்.. ஆட்டோ கீஸ்டோன்.. ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?
இந்தியாவில் பெரிய ஸ்மார்ட் டிவிகளை வாங்குவதை விட பெரிய திரை அனுபவத்தை வழங்கும் ப்ரொஜெக்டர் மாடல்களை வாங்க தான் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறனர். இந்நிலையில் 300 இன்ச் மெகா ஸ்க்ரீன் சைஸ் தரும் 4கே ப்ரொஜெக்டர் ஒன்று தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது அமேசான் தளத்தில் தற்போது நடைபெறும் electronic premier league sale எனும் சிறப்பு விற்பனையில் எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர்1 பிளஸ் (XElectron iProjector 1 Plus) மாடலுக்கு 59 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ப்ரொஜெக்டர் மாடலை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ப்ரொஜெக்டர் மாடலை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர்1 பிளஸ் அம்சங்கள் (XElectron iProjector 1 Plus Specifications): 1080P பிக்சல்ஸ் மற்றும் 4K UHD (4கே அல்ட்ரா எச்டி) ஆதரவுடன் எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர்1 பிளஸ் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இதில் 300 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே இது உங்கள் வீட்டில் மினி தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும். பெரிய ஸ்மார்ட் டிவிகளை வாங்க அவசியம் இருக்கவே இருக்காது.
எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர்1 பிளஸ் ஆனது 1500 ANSI மற்றும் 20000 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) வசதியை வழங்குகிறது. மேலும் இதில் உள்ள உள்ள எல்இடி லாம்ப் மூலம் 50,000 ஹவர்ஸ் லைப்-லாங் அவுட்புட் பெற்றுக் கொள்ளலாம். அதுவும் ஸ்மார்ட் டிவிகளை போன்று கிரிஸ்டல் கிளியர் விஷூவல் சப்போர்ட் வழங்குகிறது இந்த ப்ரொஜெக்டர். எனவே இதன் மூலம் துல்லியமான வீடியோக்களை பார்க்கலாம்.
A53 குவாட் கோர் (A53 Quad Core) பிராசஸர் உடன் இந்த எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர்1 பிளஸ் வெளிவந்துள்ளது. இந்த பிராசஸர் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர்1 பிளஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
எல்க்ட்ரானிக் போகஸ் (Electronic Focus), ஆட்டோ அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Auto Obstacle Avoidance), ஆட்டோ டில்ட் கரெக்ட் (Auto Tilt Correct), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone) ஆதரவுகளும் இந்த எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர்1 பிளஸ் மாடலில் உள்ளன. நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), போன்ற பல ஓடிடி (OTT) ஆப்ஸ்களை இந்த ப்ரொஜெக்டரில் பயன்படுத்த முடியும்.

அதேபோல் வயர்லெஸ் ஸ்கிரீன் மிரர்ரிங் (Wireless Screen Mirroring) ஆதரவும் இதில் உள்ளது. இதுதவிர எக்ஸ்எலக்ட்ரான் ஐப்ரொஜெக்டர்1 பிளஸ் உடன் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டிரைவ், செட்-டாப் பாக்ஸ், மல்டிபிள் போர்ட் போன்றவற்றை கனெக்ட் செய்து கொள்ளலாம். 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதி இதில் உள்ளது.
கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் பல மேம்பட்ட அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன. புளூடூத் 5.4, டூயல் பேண்ட் வைஃபை, I/O போர்ட்கள், ஏயூஎக்ஸ்(AUX), எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட் பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த அசத்தலான எக்ஸ்எலக்ட்ரான் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன.


Click it and Unblock the Notifications








