பட்ஜெட் விலையில் அசத்தலான நானோ-எக்ஸ் ஸ்பீக்கர் அறிமுகம்.!

By Prakash

    அமேசான் நிறுவனம் மற்றும் கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி விற்பனை செய்துவருகிறது, மேலும் இந்நிறுவனங்களின் ஸ்பீக்கர் மாடல்கள் உலகம் முழுவதும் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது, ஆனால் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்களின் விலை சற்று உயர்வாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    பட்ஜெட் விலையில் அசத்தலான நானோ-எக்ஸ் ஸ்பீக்கர் அறிமுகம்.!

    தற்சமயம் எக்ஸ்-மினி என்ற நிறுவனம் மிகவும் சிறிய ரக நானோ- எக்ஸ் அல்ட்ரா போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர் மாடலை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஸ்பீக்கர் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்பகளை உருவாக்கியுள்ளது.

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    நானோ- எக்ஸ் அல்ட்ரா போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர்:

    நானோ- எக்ஸ் அல்ட்ரா போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர் மாடல் பொறுத்தவரை மெக்னடிக் ஷீல்டு வடிவமைப்பைக் கொண்டு வெளவந்துள்ளது,அதன்பின்பு சிறந்த ஆடியோ வழங்கும் வகையில் 2வாட் அவுட்புட் ஆற்றல் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    வயர்லெஸ்

    நானோ- எக்ஸ் அல்ட்ரா சாதனம் பொதுவாக வயர்லெஸ் வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக நானோ- எக்ஸ் ஸ்பீக்கரின் வயர்லெஸ் வரம்பு: 10 மீட்டர் வரை இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இதன் இயக்க அதிர்வெண் வரம்பு 2.4ஜிகாஹெர்ட்ஸ்-2.48ஜிகாஹெர்ட்ஸ் என்று
    தெரிவிக்கப்பட்டுள்ளது.

    300எம்ஏஎச்:

    நானோ-எக்ஸ் ஸ்பீக்கர் பொதுவாக 300எம்ஏஎச் பேட்டரி அமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு ஒருமுறை சார்ஜ் செய்தால் 6மணி நேரம்
    வரை பயன்படுத்த முடியும். குறிப்பாக பயனங்களின் போது கூட இந்த சாதனத்தை மிக அருமையாக பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    நிறங்கள்:

    மிஸ்டிக் கிரே, மிட்நைட் ப்ளூ மற்றும் கிரிம்சன் ரெட் போன்ற நிறங்களில் இந்த ப்ளூடூத் ஸ்பீக்கர் கிடைக்கும் என்று எக்ஸ்-மினி நிறுவனம்
    தகவல் தெரிவித்துள்ளது, அதன்பின்பு இந்த சாதனத்தின் எடை வெறும் 47.5 கிராம் தான். குறிப்பாக மிக எளிமையாக இந்த சாதனத்தை
    இயக்க முடியும்.

    விலை:

    இந்த நானோ-எக்ஸ் ஸ்பீக்கில்1 x Micro-USB Cable and 1 x Fastening Cord போன்ற இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் விலை மதிப்பு ரூ.1790-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நானோ-எக்ஸ் சாதனத்தின் பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    English summary
    X-Mini Introduces Nano-X Ultra Portable Bluetooth Speaker; Read more about this in Tamil GizBot
    X

    இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more