இப்படி ஒரு ஆஃபர் கிடைக்காது.. 300 இன்ச்.. ஆட்டோ கீஸ்டோன்.. 4K ப்ரொஜெக்டர் வாங்க சரியான நேரம்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் 4கே சப்போர்ட் கொண்ட Wzatco யுவா வைப் ப்ரொஜெக்டர் (Wzatco Yuva Vibe Projector) மாடல் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் ஆனது அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த சாதனத்தின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
அமேசான் தளத்தில் Wzatco யுவா வைப் ப்ரொஜெக்டர் மாடலுக்கு 48 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.15.999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. ஆகவே இந்த ப்ரொஜெக்டர் மாடலை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

Wzatco யுவா வைப் அம்சங்கள் (Wzatco Yuva Vibe Specifications): Wzatco யுவா வைப் ப்ரொஜெக்டர் 1080p HD நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் 4K எச்டிஆர் (4K HDR) ரெசல்யூஷன் கொண்டுள்ளது. ஆகவே இந்த ப்ரொஜெக்டர் மாடல் தெளிவான வீடியோக்களை பார்க்க முடியும். குறிப்பாக தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் Wzatco யுவா வைப் மாடல்.
அதேபோல் 14000 லுமன்ஸ் பிரைட்னஸ் வசதி உள்ளது. எனவே கேமிங், ஓடிடி திரைப்படங்கள் மற்றும் கால்பந்து, கிரிக்கெட் மற்றும் பல விளையாட்டுகளைப் பார்க்க இந்த ப்ரொஜெக்டர் மிகவும் அருமையாகப் பயன்படும். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுவும் 270 டிகிரி ரோட்டேட்டிங் ஸ்டாண்டுடன் Wzatco யுவா வைப் மாடல் வெளிவந்துள்ளது. Wzatco யுவா வைப் ப்ரொஜெக்டர் மூலம் 300 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே 100 இன்ச் மற்றும் 85 இன்ச் டிவிகளை வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. அதாவது Wzatco யுவா வைப் மாடல் பெரிய திரை அனுபவத்தை வழங்கும்.
ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ ஸ்கிரீன் ஃபிட் (Auto Screen Fit), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), ஆட்டோ அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Auto Obstacle Avoidance), 4 பாயிண்ட் கரெக்சன் உள்ளிட்ட பல வசதிகள் Wzatco யுவா வைப் ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன.

மிகவும் முக்கியமான சாட்ஜிபிடி (ChatGPT) ஆதரவும் இந்த Wzatco யுவா வைப் மாடலில் உள்ளது. அதேபோல் Wzatco யுவா வைப் மாடலில் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் உள்ளிட்ட அனைத்து ஓடிடி தளங்களையும் பயன்படுத்த முடியும். பின்பு மேம்பட்ட கேமிங் அம்சங்களும் இந்த Wzatco யுவா வைப் மாடலில் உள்ளன.
மேலும் எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், புளூடூத், வைஃபை 6 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த Wzatco யுவா வைப் ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. ஸ்கிரீன் மிரர்ரிங் ( Screen Mirroring) ஆதரவும் இதில் உள்ளது. அனைத்து சிறப்பான வசதிகள் உடன் இந்த Wzatco யுவா வைப் மாடல் கம்மி பட்ஜெட்டில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








