வெளுத்துக் கட்டும் அமேசான்.. ஆட்டோ கீஸ்டோன்.. 250 இன்ச்.. ஆஃபரில் 4K ஸ்மார்ட் ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் Wzatco யுவா வைப் ப்ரோ ப்ரொஜெக்டர் மாடல் ஆனது தற்போது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதுவும் இந்த ப்ரொஜெக்டர் 250 இன்ச், 4கே அல்ட்ரா எச்டி சப்போர்ட், ஆட்டோ போகஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளியானது. இப்போது Wzatco யுவா வைப் ப்ரோ ப்ரொஜெக்டர் மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
அமேசானில் Wzatco யுவா வைப் ப்ரோ ப்ரொஜெக்டர் மாடலுக்கு 55 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த மாடலை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த Wzatco யுவா வைப் ப்ரோ ப்ரொஜெக்டர் மாடலை ரூ.16490 விலையில் வாங்கிவிட முடியும்.

Wzatco யுவா வைப் ப்ரோ அம்சங்கள் (WZATCO Yuva Vibe Pro Specifications): Wzatco யுவா வைப் ப்ரோ ப்ரொஜெக்டர் 1080p நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் 4K அல்ட்ரா எச்டி (4k Ultra HD) ரெசல்யூஷன் கொண்டுள்ளது. ஆகவே இந்த ப்ரொஜெக்டர் மாடலில் தெளிவான வீடியோக்களை பார்க்க முடியும். குறிப்பாக தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் Wzatco யுவா வைப் ப்ரோ மாடல்.
அதேபோல் 1000 ANSI லுமன்ஸ் பிரைட்னஸ் வசதி இதில் உள்ளது. மேலும் எச்டிஆர் (HDR), எச்எல்ஜி (HLG) ஆதரவுகளும் உள்ளன. எனவே கேமிங், ஓடிடி திரைப்படங்கள் மற்றும் கால்பந்து, கிரிக்கெட் மற்றும் பல விளையாட்டுகளைப் பார்க்க இந்த ப்ரொஜெக்டர் மிகவும் அருமையாகப் பயன்படும். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
270 டிகிரி ரோட்டேட்டிங் ஸ்டாண்டுடன் Wzatco யுவா வைப் ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக Wzatco யுவா வைப் ப்ரோ ப்ரொஜெக்டர் மூலம் 250 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே 100 இன்ச் மற்றும் 85 இன்ச் டிவிகளை வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. அதாவது Wzatco யுவா வைப் ப்ரோ மாடல் பெரிய திரை அனுபவத்தை வழங்கும்.
ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ ஸ்கிரீன் ஃபிட் (Auto Screen Fit), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), உள்ளிட்டபல வசதிகள் Wzatco யுவா வைப் ப்ரோ ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன.
மிகவும் முக்கியமாக சாட்ஜிபிடி (ChatGPT)ஆதரவும் இந்த Wzatco யுவா வைப் ப்ரோ மாடலில் உள்ளது. அதேபோல் இந்த மாடலில் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ,ஹாட்ஸ்டார் உள்ளிட்ட அனைத்து ஓடிடி தளங்களையும் பயன்படுத்த முடியும். பின்பு மேம்பட்ட கேமிங் அம்சங்களும் இந்த Wzatco யுவா வைப் ப்ரோ மாடலில் உள்ளன.

சீல் செய்யப்பட்ட இன்ஜின் கொண்டுள்ளது இந்த சாதனம். அதுவும் பவர்ஃபுல் 12W ஸ்பீக்கர்கள் இந்த மாடலில் உள்ளன. எனவே இந்த ப்ரொஜெக்டர் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். ஸ்மார்ட் ரிமோட் ஒன்று இந்த Wzatco யுவா வைப் ப்ரோ மாடல் உடன் கிடைக்கும்.
எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், புளூடூத், வைஃபை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த Wzatco யுவா வைப் ப்ரோ ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. ஸ்கிரீன் மிரர்ரிங் ( Screen Mirroring) ஆதரவும் இதில் உள்ளது. அனைத்து சிறப்பான வசதிகள் உடன் இந்த Wzatco யுவா வைப் மாடல் கம்மி பட்ஜெட்டில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications