Home
Gadgets

அமேசான் அதிர போகுது.. 300 இன்ச்.. ஆட்டோ கீஸ்டோன்.. ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

இந்தியாவில் 100-இன்ச், 75-இன்ச் போன்ற பெரிய ஸ்மார்ட் டிவிகளை வாங்குவதை விட 200-இன்ச் அல்லது 300 இன்ச் ஸ்கிரீன் அளவு வழங்கும் 4கே ப்ரொஜெக்டர் மாடல்களை வாங்க தான் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதாவது இந்த ப்ரொஜெக்டர் மாடல்கள் ஒரு தியேட்டர் அனுபவத்தை வழங்கும்.

இந்நிலையில் 4கே சப்போர்ட் கொண்ட Wzatco யுவா வைப் ப்ரொஜெக்டர் மாடல் சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் மாடல் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த ப்ரொஜெக்டர் மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

அமேசான் அதிர போகுது.. ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் Wzatco யுவா வைப் ப்ரொஜெக்டர் மாடலுக்கு 48 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.15,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.799 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த ப்ரொஜெக்டர் மாடலை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

Wzatco யுவா வைப் அம்சங்கள் (Wzatco Yuva Vibe Specifications): Wzatco யுவா வைப் ப்ரொஜெக்டர் 1080p HD நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் 4K எச்டிஆர் (4K HDR) ரெசல்யூஷன் கொண்டுள்ளது. ஆகவே இந்த ப்ரொஜெக்டர் மாடலில் தெளிவான வீடியோக்களை பார்க்க முடியும். குறிப்பாக தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் Wzatco யுவா வைப் மாடல்.

இந்த மாடலில் 14000 லுமன்ஸ் பிரைட்னஸ் வசதி உள்ளது. எனவே கேமிங், ஓடிடி திரைப்படங்கள் மற்றும் கால்பந்து, கிரிக்கெட் மற்றும் பல விளையாட்டுகளைப் பார்க்க இந்த ப்ரொஜெக்டர் மிகவும் அருமையாகப் பயன்படும். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

270 டிகிரி ரோட்டேட்டிங் ஸ்டாண்டுடன் Wzatco யுவா வைப் மாடல் வெளிவந்துள்ளது. Wzatco யுவா வைப் ப்ரொஜெக்டர் மூலம் 300 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே 100 இன்ச் மற்றும் 85 இன்ச் டிவிகளை வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. அதாவது Wzatco யுவா வைப் மாடல் பெரிய திரை அனுபவத்தை வழங்கும்.

ஆட்டோ ஸ்கிரீன் ஃபிட் (Auto Screen Fit), ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), ஆட்டோ அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Auto Obstacle Avoidance), 4 பாயிண்ட் கரெக்சன் உள்ளிட்ட பல வசதிகள் Wzatco யுவா வைப் ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன.

அமேசான் அதிர போகுது.. ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

சாட்ஜிபிடி (ChatGPT) ஆதரவும் இந்த Wzatco யுவா வைப் மாடலில் உள்ளது. அதேபோல் Wzatco யுவா வைப் மாடலில் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் உள்ளிட்ட அனைத்து ஓடிடி தளங்களையும் பயன்படுத்த முடியும். பின்பு மேம்பட்ட கேமிங் அம்சங்களும் இந்த Wzatco யுவா வைப் மாடலில் உள்ளன.

எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், புளூடூத், வைஃபை 6 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த Wzatco யுவா வைப் ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. ஸ்கிரீன் மிரர்ரிங் ( Screen Mirroring) ஆதரவும் இதில் உள்ளது. அனைத்து சிறப்பான வசதிகள் உடன் இந்த Wzatco யுவா வைப் மாடல் கம்மி பட்ஜெட்டில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
WZATCO Yuva Vibe model available at a discounted price on Amazon: Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X