Home
Gadgets

அதிருது அமேசான்.. வெறும் ரூ.8,991 க்கு 120 இன்ச் 4K ப்ரொஜெக்டர்.. ஆட்டோ கீஸ்டோன், போகஸ்.. எந்த மாடல்?

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2026 (Amazon Great Indian Festival 2026) எனும் சிறப்பு விற்பனையில் Wzatco நிறுவனத்தின் ப்ரொஜெக்டர் மாடல்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. இதில் Wzatco யுவா ஸ்பெக்ட்ரா (WZATCO Yuva Spectra) மாடலானது நம்ப முடியாத தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. இந்த மாடலின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, அமேசான் தளத்தில் Wzatco யுவா ஸ்பெக்ட்ரா மாடலுக்கு 63 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.9,990 விலைக்கு கிடைக்கிறது. மேலும், ரூ.999 கிரெடிட் கார்டு தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.8,991 விலைக்கு இந்த Wzatco யுவா ஸ்பெக்ட்ரா மாடலை வாங்கி கொள்ளலாம். 3 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் கொடுக்கப்பட்டு உள்ளது.

அதிருது அமேசான்.. வெறும் ரூ.8,991 க்கு 120 இன்ச் 4K ப்ரொஜெக்டர்!

Wzatco யுவா ஸ்பெக்ட்ரா அம்சங்கள் (WZATCO Yuva Spectra Specifications): எல்இடி டிஸ்பிளே டெக்னாலஜி கொண்டுள்ளது. 13000 லுமென்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) கொடுக்கிறது. 120 இன்ச் வரையில் ப்ரொஜெக்சன் கிடைக்கிறது. 1.35:1 த்ரோவ் ரேசியோ வருகிறது. அட்வான்ஸ் ஆப்டிகல் என்ஜின் (Advanced Optical Engine) கொண்ட மாடலாக இந்த வ்சட்கோ யுவா ஸ்பெக்ட்ரா இருக்கிறது.

டேபிள் மவுண்ட் (Tabletop Mount) செய்து கொள்ளலாம். 270 டிகிரியில் பயன்படுத்தும்படி ரோட்டேட்டிங் ஸ்டாண்ட் (Rotating Stand) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, முன்பக்கம், சுவர் அல்லது சீலிங்கிலும் இந்த வ்சட்கோ யுவா ஸ்பெக்ட்ரா ப்ரொஜெக்டரை பயன்படுத்தி கொள்ளலாம். 1080p (1920 x 1080 பிக்சல்கள்) நேட்டிவ் ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆகவே, ஃபுல் எச்டி (Full HD) தரத்தில் வீடியோ அவுட்புட் கிடைக்கும். மேலும், 4கே சப்போர்ட் (4K Support) கொடுக்கும் மாடலாகவும் இந்த வ்சட்கோ யுவா ஸ்பெக்ட்ரா இருக்கிறது. ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), ஆட்டோ அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Auto Obstacle Avoidance) மற்றும் ஸ்கிரீன் அடாப்சன் (Screen Adaptation) கொடுக்கப்பட்டு உள்ளது.

வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) கனெக்டிவிட்டியை இந்த வ்சட்கோ யுவா ஸ்பெக்ட்ரா ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் கொடுக்கிறது. ஆகவே, ஸ்கிரீன் மிரரிங் (Screen Sharing) கிடைக்கும். மேலும், எச்டிஎம்ஐ ( HDMI) கனெக்டிவிட்டி கொடுக்கிறது. டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi) கனெக்டிவிட்டி மற்றும் ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கனெக்டிவிட்டி கிடைக்கும்.

இந்த பட்ஜெட்டில் சிங்கிள் ஸ்பீக்கர் மட்டுமே கிடைக்கும். ஆனால், இதில் டூயல் ஹை-பை ஸ்பீக்கர்கள் (Dual Hi-Fi Speakers) கிடைக்கிறது. இதில் 5W ஆடியோ அவுட்புட் கொடுக்கப்படும். 50,000 மணி நேரங்களுக்கு லைட் சோர்ஸ் லைப் (Light Source Life) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆகவே, கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) கிடைக்கும் 8000+ ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), ஜீ5 (Zee5) மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். மூவிஸ், ஸ்போர்ட்ஸ் மற்றும் கேமிங் பிரியர்களுக்கு பக்காவான ஸ்கிரீன் அனுபவம் கொடுக்கும்.

இந்த WZATCO யுவா ஸ்பெக்ட்ரா ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் 1 வருட வாரண்டியுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் எம்ஆர்பி விலை ரூ.26,990 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஃபுல் எச்டி ப்ரொஜெக்சன், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், டூயல் ஹை-ஃபை ஸ்பீக்கர்கள் மற்றும் பல்வேறு ஸ்மார்ட் அம்சங்களை எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு இந்த ப்ரொஜெக்டர் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
WZATCO Yuva Spectra With Available At 63 Percent Discount in Amazon Great Indian Festival Sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X