வீடு தியேட்டர் மாதிரி அதிரும்.. ரூ.8,991-க்கு 150 இன்ச் ப்ரொஜெக்டர்.. ஆட்டோ கீஸ்டோன், போகஸ்.. எந்த மாடல்?
பட்ஜெட் விலையில் வீட்டை தியேட்டர் போல மாற்ற விரும்பினால், ரூ.8,991 கையில் இருந்தால் போதும், WZATCO யுவா ஸ்பெக்ட்ரா (WZATCO Yuva Spectra) மாடல் வழியாக அதை செய்யலாம். இப்போது, பாதிக்கும் மேல் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. இந்த WZATCO யுவா ஸ்பெக்ட்ரா ஸ்மார்ட் புரொஜெக்டர் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 63 சதவீத டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட்டு ரூ.9,990 விலைக்கு WZATCO யுவா ஸ்பெக்ட்ரா ஸ்மார்ட் புரொஜெக்டர் கிடைக்கிறது. மேலும், ரூ.999 தள்ளுபடியை தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ..8,991 விலைக்கு வாங்கி கொள்ளலாம். இப்போது, பீச்சர்களை பார்க்கலாம்.

WZATCO யுவா ஸ்பெக்ட்ரா அம்சங்கள் (WZATCO Yuva Spectra Specifications): ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த வ்சட்கோ யுவா ஸ்பெக்ட்ரா ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் இயங்குகிறது. இதனால் கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) உள்ள 8000-க்கும் மேற்பட்ட ஆப்களை இதில் நேரடியாகப் பயன்படுத்த முடியும்.
குறிப்பாக நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), ஜீ5 (Zee5) மற்றும் யூடியூப் (YouTube) போன்ற முன்னணி ஓடிடி தளங்களை எளிதாக இயக்கலாம். திரைப்படங்கள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கேமிங் பிரியர்களுக்கு இது ஒரு தியேட்டர் போன்ற பிரம்மாண்ட திரை அனுபவத்தை வழங்கும்.
இந்த ப்ரொஜெக்டரை டேபிள் மவுண்ட் (Tabletop Mount) செய்து கொள்ளும் வசதி உள்ளது. அத்துடன் 270 டிகிரி கோணத்தில் சுழலும் வகையிலான ரோட்டேட்டிங் ஸ்டாண்ட் (Rotating Stand) இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முன்பக்க சுவர் மட்டுமின்றி, சீலிங்கிலும் (Ceiling) காட்சிகளைத் திரையிட்டுப் பார்க்க முடியும்.
மேலும் ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), ஸ்கிரீன் அடாப்சன் (Screen Adaptation) மற்றும் ஆட்டோ அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Auto Obstacle Avoidance) போன்ற நவீன தொழில்நுட்பங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. வ்சட்கோ யுவா ஸ்பெக்ட்ரா மாடலானது அட்வான்ஸ் ஆப்டிகல் என்ஜின் (Advanced Optical Engine) உள்ளது.
எல்இடி டிஸ்பிளே (LED Display) தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. இது 1080p (1920 x 1080 பிக்சல்கள்) நேட்டிவ் ரெசொலூஷனுடன் ஃபுல் எச்டி (Full HD) தரத்தில் வீடியோ அவுட்புட்டைக் கொடுக்கிறது. கூடுதலாக 4கே சப்போர்ட் (4K Support) வசதியும் இதில் உள்ளது. 120 இன்ச் வரையிலான பிரம்மாண்ட ப்ரொஜெக்சன் கிடைக்கும்.
13000 லுமென்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) மற்றும் 1.35:1 த்ரோவ் ரேசியோ (Throw Ratio) ஆகியவை துல்லியமான காட்சி அமைப்பை உறுதி செய்கின்றன. வழக்கமாக இந்த பட்ஜெட் விலையில் வரும் மாடல்களில் சிங்கிள் ஸ்பீக்கர் மட்டுமே இருக்கும். ஆனால், இந்த ப்ரொஜெக்டரில் 5W ஆடியோ அவுட்புட் வழங்கும் டூயல் ஹை-பை ஸ்பீக்கர்கள் (Dual Hi-Fi Speakers) பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், இதன் லைட் சோர்ஸ் லைப் (Light Source Life) 50,000 மணி நேரங்கள் வரை நீடித்து உழைக்கும் திறன் கொண்டது. கனெக்டிவிட்டியைப் பொறுத்தவரை, தடையற்ற ஸ்கிரீன் மிரரிங் (Screen Sharing) வசதிக்காக வை-பை 6 (Wi-Fi 6) மற்றும் டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) உள்ளன.


Click it and Unblock the Notifications
