Home
Gadgets

பழைய TV கதை முடிந்தது.. ரூ.13,990 க்கு 120 இன்ச் 4K ப்ரொஜெக்டர்.. ஆட்டோ கீஸ்டோன், ஆட்டோ போகஸ்.. எந்த மாடல்?

வீட்டில் இருக்கும் பழைய டிவிக்கு பதிலாக ப்ரொஜெக்டர் வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு பாதிக்குப்பாதி கம்மியான விலைக்கு களமிறங்கி இருக்கும் வ்சட்கோ யுவா ஸ்பெக்ட்ரா ப்ரொஜெக்டர் (WZATCO Yuva Spectra Projector) மாடல் தவிர்க்க முடியாத ஆப்ஷனாக இருக்கும். இதுகுறித்த விவரங்கள் இதோ.

120 இன்ச் ப்ரொஜெக்சனை கொடுக்கும் வ்சட்கோ யுவா ஸ்பெக்ட்ரா ப்ரொஜெக்டர் ரூ.15,000 பட்ஜெட்டைவிட மலிவாக கிடைக்கிறது. மார்கெட் விலை ரூ.25,000 மேல் இருந்தாலும், புதிதாக களமிறங்கி இருப்பதால், ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் கிடைக்கிறது. ஆட்டோ கீஸ்டோன், ஆட்டோ போகஸ் உள்ளிட்ட பீச்சர்களையும் கொடுத்து இருக்கிறது.

பழைய TV கதை முடிந்தது.. ரூ.13,990 க்கு 120 இன்ச் 4K ப்ரொஜெக்டர்!

வ்சட்கோ யுவா ஸ்பெக்ட்ரா அம்சங்கள் (WZATCO Yuva Spectra Specifications): எல்இடி டிஸ்பிளே டெக்னாலஜி கொண்டுள்ளது. 13000 லுமென்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) கொடுக்கிறது. 120 இன்ச் வரையில் ப்ரொஜெக்சன் கிடைக்கிறது. 1.35:1 த்ரோவ் ரேசியோ வருகிறது. அட்வான்ஸ் ஆப்டிகல் என்ஜின் (Advanced Optical Engine) கொண்ட மாடலாக இந்த வ்சட்கோ யுவா ஸ்பெக்ட்ரா இருக்கிறது.

டேபிள் மவுண்ட் (Tabletop Mount) செய்து கொள்ளலாம். 270 டிகிரியில் பயன்படுத்தும்படி ரோட்டேட்டிங் ஸ்டாண்ட் (Rotating Stand) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, முன்பக்கம், சுவர் அல்லது சீலிங்கிலும் இந்த வ்சட்கோ யுவா ஸ்பெக்ட்ரா ப்ரொஜெக்டரை பயன்படுத்தி கொள்ளலாம். 1080p (1920 x 1080 பிக்சல்கள்) நேட்டிவ் ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆகவே, ஃபுல் எச்டி (Full HD) தரத்தில் வீடியோ அவுட்புட் கிடைக்கும். மேலும், 4கே சப்போர்ட் (4K Support) கொடுக்கும் மாடலாகவும் இந்த வ்சட்கோ யுவா ஸ்பெக்ட்ரா இருக்கிறது. ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), ஆட்டோ அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Auto Obstacle Avoidance) மற்றும் ஸ்கிரீன் அடாப்சன் (Screen Adaptation) கொடுக்கப்பட்டு உள்ளது.

வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) கனெக்டிவிட்டியை இந்த வ்சட்கோ யுவா ஸ்பெக்ட்ரா ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் கொடுக்கிறது. ஆகவே, ஸ்கிரீன் மிரரிங் (Screen Sharing) கிடைக்கும். மேலும், எச்டிஎம்ஐ ( HDMI) கனெக்டிவிட்டி கொடுக்கிறது. டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi) கனெக்டிவிட்டி மற்றும் ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கனெக்டிவிட்டி கிடைக்கும்.

இந்த பட்ஜெட்டில் சிங்கிள் ஸ்பீக்கர் மட்டுமே கிடைக்கும். ஆனால், இதில் டூயல் ஹை-பை ஸ்பீக்கர்கள் (Dual Hi-Fi Speakers) கிடைக்கிறது. இதில் 5W ஆடியோ அவுட்புட் கொடுக்கப்படும். 50,000 மணி நேரங்களுக்கு லைட் சோர்ஸ் லைப் (Light Source Life) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆகவே, கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) கிடைக்கும் 8000+ ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), ஜீ5 (Zee5) மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். மூவிஸ், ஸ்போர்ட்ஸ் மற்றும் கேமிங் பிரியர்களுக்கு பக்காவான ஸ்கிரீன் அனுபவம் கொடுக்கும்.

1 வருட வாரண்டியுடன் இந்த இந்த வ்சட்கோ யுவா ஸ்பெக்ட்ரா ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ப்ரொஜெக்டரின் எம்ஆர்பி விலை ரூ.26,990 ஆக இருக்கிறது. அமேசான் தளத்தில் அறிமுக சலுகையுடன் ரூ.13,990 விலைக்கு கிடைக்கிறது. இதனால், ப்ரொஜெக்டர் பிரியர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு ஆர்டர் செய்து வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
WZATCO Yuva Spectra Projector With 120 inch Projection Available At Rs 13990 Instead of Rs 26990
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X