Home
Gadgets

வெறும் ரூ.8000 செலவில் உங்க வீட்டில் மினி தியேட்டர்.. இன்னுமா Smart TV யூஸ் பண்றீங்க? காலம் மாறிடுச்சு பாஸ்..

இன்னுமா 32" இன்ச், 43" இன்ச் அல்லது 55" இன்ச் என்று சிறிய-சிறிய ஸ்மார்ட் டிவிகளை வாங்கி பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா? இந்த விலையிக்கு ஒரு பங்கு செலவில் 250" இன்ச் டிஸ்பிளே திரையில் உங்கள் வீட்டுக்குள்ளேயே ஒரு மினி தியேட்டர் செட்டப்பை உருவாக்கலாம் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம் மக்களே உண்மையாக தான் சொல்கிறோம். நம்புங்கள். சிறிய டிஸ்பிளேகளில் படம் பார்க்கும் ஸ்மார்ட் டிவிலாம் இனி சுத்த வேஸ்ட். உங்கள் கையில் வெறும் 8000 ரூபாய் இருந்தால் போதும் 250" இன்ச் டிஸ்பிளேவில் படம் பார்க்கலாம். அது எப்படி? என்பதை இப்போது தெரிந்துகொள்ளலாம்.

வ்சட்கோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள வ்சட்கோ யுவா பிளஸ் (WZATCO Yuva Plus) ப்ரொஜெக்டர் மூலம் இது சாத்தியமாகிறது. இந்த ப்ரொஜெக்டர் சாதனம் ஒரு குட்டி தியேட்டரையே உங்கள் வீட்டிற்குள் கொண்டுவருகிறது. 250" இன்ச் டிஸ்பிளே அளவு வரை 4K தரத்தில் வீடியோக்களை பார்க்க அனுமதிக்கிறது. இதனுடனே, இன்பில்ட் ஆக 5W ஹைபை ஸ்பீக்கர் (HiFi speaker) அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. தனியாக ஹோம் தியேட்டர் சிஸ்டம்களையும் இத்துடன் நீங்கள் இணைத்துக்கொள்ளலாம்.

வெறும் ரூ.8000 செலவில் உங்க வீட்டில் மினி தியேட்டர்.. காலம் மாறிடுச்சு

வெறும் ரூ.8000 செலவில் உங்க வீட்டில் மினி தியேட்டர்.. இன்னுமா Smart TV யூஸ் பண்றீங்க?

அதேபோல், இந்த WZATCO Yuva Plus ப்ரொஜெக்டர் சாதனம் ஃபையர்ஸ்டிக் (Firestick) ஆதரவு, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஸ்கிரீன் மிர்ரரிங் (Wireless Android and iPhone Screen Mirroring), போன்ற அம்சங்களை வழங்கும் பெஸ்ட் ப்ரொஜெக்டர் சாதனமாக திகழ்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த WZATCO Yuva Plus ப்ரொஜெக்டர் சாதனத்தின் சிறப்பம்ச விபரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த ப்ரொஜெக்டர் தரம் பற்றி பேசுகையில், இது 4500:1 கான்ட்ராஸ்ட் ரேட்ஸியோவுடன் (4500 : 1 Contrast Ratio) வருகிறது. இது 420 ANSI ஆன் ஸ்கிரீன் பிரைட்னஸ், LTPS டிஸ்பிளே டெக்னாலஜி ( LTPS Display Technology) அம்சத்தை கொண்டுள்ளது. இது 6600 லுமென்ஸ் (6600 Lumens), 50000 மணி நேர லேம்ப் லைஃப் (50000 Hours Lamp Life) போன்ற அம்சங்களுடன் வருகிறது.

இந்த ப்ரொஜெக்டர் சாதனம் 2 HDMI போர்ட்டுடன் செட் டாப் பாக்ஸ் (Set Top Box), ஃபையர் டிவி ஸ்டிக் (Fire TV Stick), கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் (PC |Laptop), டிவிடி (DVD) மற்றும் பிளேஸ்டேஷன் (Play Station) சாதனங்களை கனெக்ட் செய்ய அனுமதிக்கிறது. இது 5W இன்பில்ட் ஹை-ஃபை கேவிட்டி ஸ்பீக்கரை ஆதரிக்கிறது. இது சவுண்ட்பார், ஹெட்ஃபோன்ஸ் போன்ற எக்ஸ்டர்னல் ஸ்பீக்கர்களுடன் இணைக்க 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் வயர்லெஸ் சவுண்ட் செட் இணைப்பிற்காக புளூடூத் டிரான்ஸ்மிட்டருடன் வருகிறது.

வ்சட்கோ யுவா பிளஸ் ப்ரொஜெக்டர் விலை (WZATCO Yuva Plus Projector Price):

உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற சவுண்ட் தரத்தை ஆதரிக்கும் ஸ்பீக்கர்களை இத்துடன் இணைத்துக்கொள்ளலாம். ஸ்மார்ட் டிவியில் கேபிள் டிவி சேனல்களை நம்மால் பார்க்க முடியுமா? இந்த ப்ரொஜெக்டரில் அப்படி நம்மால் கேபிள் டிவி சேனல்கள் மற்றும் அதில் ஒளிபரப்பாகும் சீரியல் வரை எல்லாவற்றையும் உங்களால் 250" இன்ச் டிஸ்பிளேவில் மெகா சைஸ் திரையில் பார்க்க முடியும்.

இதற்கு உங்கள் செட்டப் பாக்ஸை HDMI கேபிள் மூலம் இந்த பிரொஜெக்டருடன் இணைத்து கேபிள் டிவி உள்ளடக்கங்களையும் நீங்கள் பெரிய திரையில் பார்க்கலாம். இந்த WZATCO Yuva Plus Projector சாதனத்தின் மீது 50% தள்ளுபடி மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஒரு முறை இதே சலுகை அமேசான் மூலம் லைவ் செய்யப்பட்டுள்ளது.

இந்த ப்ரொஜெக்டரின் அசல் விலை ரூ.17,990 ஆகும். ஆனால், அமேசான் அறிவித்துள்ள தள்ளுபடிக்கு பிறகு, இது இப்போது வெறும் ரூ.8,990 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. சாதாரண 43" இன்ச் அல்லது 55" இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்க தேவைப்படும் செலவில் வெறும் ஒரு பங்கு மட்டும் உங்களிடம் இருந்தால் போதும், இந்த ப்ரொஜெக்டரை வாங்கி 250" இன்ச் வரை பெரிய திரையில் படம் பார்த்து மகிழலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
WZATCO Yuva Plus Upgraded Native 1080P Full HD Projector with 4K Support Amazon Offer Price Rs 8990
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X