அமேசானில் ஆர்டர் அள்ளுமே.. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்.. 120 இன்ச்.. ஆஃபரில் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட Wzatco யுவா லூனார் (WZATCO Yuva Lunar) ப்ரொஜெக்டர் மாடல் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் இந்த ப்ரொஜெக்டர் 1080p HD சப்போர்ட், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், ஆட்டோ கீஸ்டோன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த ப்ரொஜெக்டர் மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் அம்சங்களைப் பார்க்கலாம்.
தற்போது அமேசானில் Wzatco யுவா லூனார் மாடலுக்கு 52 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ப்ரொஜெக்டர் மாடலை வாங்கினால் ரூ.2,998 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த மாடலை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

Wzatco யுவா லூனார் அம்சங்கள் (WZATCO Yuva Lunar projector Specifications): 1080p HD நேட்டிவ் ரெசல்யூஷன் கொண்டுள்ளது இந்த Wzatco யுவா லூனார் ப்ரொஜெக்டர் மாடல். அதேபோல் இதில் எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவும் உள்ளது. குறிப்பாக இந்த மாடல் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
10000: 1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ மற்றும் 750 ANSI பிரைட்னஸ் ( ANSI brightness) வசதி இதில் உள்ளது. ஆகவே இதன் மூலம் கேமிங், ஓடிடி திரைப்படங்கள் மற்றும் கால்பந்து, கிரிக்கெட் மற்றும் பல விளையாட்டுகளைப் பார்க்க இந்த ப்ரொஜெக்டர் மிகவும் அருமையாகப் பயன்படும். இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
270 டிகிரி ரோட்டேட்டிங் ஸ்டாண்டுடன் Wzatco Wzatco யுவா லூனார் ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. பின்பு இந்த ப்ரொஜெக்டர் முழுமையாக சீல் செய்யப்பட்ட ஆப்டிகல் எஞ்சினைப் பயன்படுத்துகிறது. இது தூசி படிவதைத் தடுக்கவும், வழக்கமான பராமரிப்பின் தேவையைக் குறைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Wzatco யுவா லூனார் ப்ரொஜெக்டர் மூலம் 120 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection)செய்து கொள்ள முடியும். எனவே 100 இன்ச் மற்றும் 90 இன்ச் டிவிகளை வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. அதாவது இந்த ப்ரொஜெக்டர் மாடலே பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Obstacle Avoidance), ஸ்கிரீன் அடாப்சன் (Screen Adaptation) உள்ளிட்டபல வசதிகள் Wzatco யுவா லூனார் மாடலில் உள்ளன. மிராகாஸ்ட் (Miracast), ஸ்க்ரீன் மிரரிங் (Screen Mirroring) ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளியாகி உள்ளது.

ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு Wzatco யுவா லூனார் ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதில் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் உள்ளிட்ட அனைத்து ஓடிடி தளங்களையும் பயன்படுத்த முடியும். பில்ட் இன் டூயல் 5W ஸ்பீக்கர்கள் இந்த சாதனத்தில் உள்ளன.
எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், புளூடூத் 5, வைஃபை 6 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த Wzatco யுவா லூனார் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் ப்ரொஜெக்டர் மாடலில் 50,000 மணி நேர லேம்ப் லைஃப் (Lamp Life) கொடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
