Home
Gadgets

அமேசான் சுதந்திர தின விற்பனை 2026.. கூகுள் டிவி ஓஎஸ்.. ஆட்டோ கீஸ்டோன்.. ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் தற்போது அமேசான் கிரேட் ஃபிரீடம் சேல் 2026 (amazon great freedom sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் 4கே ப்ரொஜெக்டர் மாடல்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. அதேபோல் தரமான WZATCO 4கே ப்ரொஜெக்டர் ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

தற்போது அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் WZATCO யுவா ஹொரைசன் (WZATCO Yuva Horizon) மாடலுக்கு 65 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.20,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த மாடலை வாங்கினால் ரூ.1750 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த ப்ரொஜெக்டர் மாடலை கம்மி பட்ஜெட்டில் வாங்கிவிட முடியும்.

அமேசான் சுதந்திர தின விற்பனை 2026.. ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்..

Wzatco யுவா ஹொரைசன் அம்சங்கள் (Wzatco Yuva Horizon Projector Specifications): 1080p ஃபுல் எச்டி நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் 4K ரெசல்யூஷன் கொண்டு வெளிவந்துள்ளது Wzatco யுவா ஹொரைசன் மாடல். மேலும் எச்டிஆர் 10 பிளஸ் (HDR10+) ஆதரவும் இதில் உள்ளது. எனவே இந்த ப்ரொஜெக்டர் மூலம் தெளிவான வீடியோக்களை பார்க்க முடியும்.

அதுவும் 1500 ஏஎன்எஸ்ஐ (1500 ANSI) லுமன்ஸ் பிரைட்னஸ் வசதி Wzatco யுவா ஹொரைசன் மாடலில் உள்ளது. கேமிங், ஓடிடி திரைப்படங்கள் மற்றும் கால்பந்து, கிரிக்கெட் மற்றும் பல விளையாட்டுகளை இந்த ப்ரொஜெக்டர் மூலம் துல்லியமாகப் பார்க்க முடியும். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது Wzatco நிறுவனம்.

குறிப்பாக 270 டிகிரி ரோட்டேட்டிங் ஸ்டாண்டுடன் Wzatco யுவா ஹொரைசன் ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் மற்ற ப்ரொஜெக்டர் மாடலை விட இந்த புதிய ப்ரொஜெக்டர் மாடல் தனித்துவமானது. அதாவது Wzatco யுவா ஹொரைசன் ப்ரொஜெக்டர் முழுமையாக சீல் செய்யப்பட்ட ஆப்டிகல் எஞ்சினைப் பயன்படுத்துகிறது, இது தூசி படிவதைத் தடுக்கவும், வழக்கமான பராமரிப்பின் தேவையைக் குறைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Wzatco யுவா ஹொரைசன் மாடல் மூலம் 150 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே இது ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம். மேலும் வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் கொண்ட ஸ்மார்ட் ரிமோட் கண்ட்ரோல் ஒன்றும் இந்த புதிய ப்ரொஜெக்டர் உடன் கிடைக்கும்.

ஆட்டோ ஸ்கிரீன் ஃபிட் (Auto Screen Fit), ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), ஆட்டோ அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Auto Obstacle Avoidance) உள்ளிட்ட பல வசதிகள் Wzatco யுவா ஹொரைசன் ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன.

Wzatco யுவா ஹொரைசன் மாடல் கூகுள் டிவி இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஜீ5, சோனிலிவ், ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட அனைத்து ஓடிடி ஆப்களையும் இந்த Wzatco யுவா ஹொரைசன் மாடலில் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் சுதந்திர தின விற்பனை 2026.. ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்..

டால்பி சரவுண்ட் சவுண்ட் (Dolby Surround Sound) ஆதரவு கொண்ட பில்ட்-இன் ஸ்பீக்கர்கள் இந்த Wzatco யுவா ஹொரைசன் மாடலில் உள்ளன. எனவே இந்த Wzatco யுவா ஹொரைசன் மாடல் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், புளூடூத், வைஃபை 6 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளும் Wzatco யுவா ஹொரைசன் மாடலில் உள்ளன. இதுதவிர பல சிறப்பான வசதிகள் Wzatco யுவா ஹொரைசன் மாடலில் உள்ளன.

Best Mobiles in India

English summary
WZATCO Yuva Horizon Projector Gets a Price Cut in Amazon Great Freedom Sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X