100 இன்ச் TV கதை முடிந்தது.. 300 இன்ச்.. ரூ.8490 க்கு 4K ப்ரொஜெக்டர்.. ஆட்டோ கீஸ்டோன்.. 9000 லுமென்ஸ்!
இந்திய மார்கெட்டில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் ப்ரொஜெக்டர்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் வ்சட்கோ (WZATCO) நிறுவனத்தின் யுவா மாடல்கள் ரூ.10,000 பட்ஜெட்டில் கிடைத்து, விற்பனையில் பட்டையை கிளப்பி வருகின்றன. 300 இன்ச் ப்ரொஜெக்சனுடன் வ்சட்கோ யுவா கோ பிளஸ் ப்ரொஜெக்டர் (Wzatco Yuva Go Plus Projector) கிடைக்கிறது.
இப்போது, அமேசான் தளத்தில் 65 சதவீத தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. அதாவது, எம்ஆர்பி விலையானது ரூ.23,990 ஆக இருக்கிறது. இதில் இருந்து 65 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு, ரூ.8,490 விலைக்கு வாங்கி கொள்ள கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.242 தள்ளுபடி கிடைக்கிறது. ரூ.350 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ஆகவே, இந்த வ்சட்கோ யுவா கோ பிளஸ் ப்ரொஜெக்டரை மலிவான விலைக்கு வாங்கி கொள்ளலாம். இது நேட்டிவ் 1080p (Native 1080p) ரெசொலூஷன் கொடுத்துள்ளது. இருப்பினும், 4K சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டிவிக்கு நிகரான அவுட்புட் கிடைக்கும். ஏனென்றால் ஆண்ட்ராய்டு ஓஎஸ் கிடைக்கிறது. ஆனால், குவாலிட்டி பட்ஜெட்டுக்கு ஏற்ப இருக்கும்.
வ்சட்கோ யுவா கோ பிளஸ் ப்ரொஜெக்டர் அம்சங்கள் (Wzatco Yuva Go Plus Projector Specifications): ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone) கொண்ட மாடலாக இந்த வ்சட்கோ யுவா கோ பிளஸ் ப்ரொஜெக்டர் கிடைக்கிறது. நேட்டிவ் 1080p ரெசொலூஷன் மற்றும் 4கே டீகோடிங் கிடைக்கிறது. ஆகவே, 1920 x 1080 பிக்சல்கள் நேட்டிவ் ரெசொலூஷன் கிடைக்கும். 9000 லுமென்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
எல்இடி லைட் சோர்ஸ் (LED Light Source) கிடைக்கிறது. மேலும், 4கே எச்டிஆர் டீகோடிங் (4K HDR Decoding) சப்போர்ட் கொண்ட மாடலாகவும் இந்த வ்சட்கோ யுவா கோ பிளஸ் ப்ரொஜெக்டர் கிடைக்கிறது. என்ஹான்ஸ்டு கலர் அக்கியூரசி (Enhanced Color Accuracy) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, ப்ரொஜெக்சனில் கிளாரிட்டி, கலர் டெப்த் பக்காவாக இருக்கும்.
பில்ட்-இன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் (Built-in Android OS) கிடைக்கிறது. ஆகவே, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Andorid 14 OS) அவுட்புட் கொடுக்கப்படுகிறது. சோனிவில், நெட்பிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த வ்சட்கோ யுவா கோ பிளஸ் ப்ரொஜெக்டர் மாடலில் பயன்படுத்தி கொள்ளலாம். 300 இன்ச் வரையில் ப்ரொஜெக்சன் செய்து கொள்ள முடியும்.
50000 மணி நேரங்களுக்கு லேம்ப்-லைப் கொடுத்து இருக்கிறது. 180 டிகிரியில் இந்த வ்சட்கோ யுவா கோ பிளஸ் ப்ரொஜெக்டர் மாடலை அணுக முடியும். 5000.1 கான்ட்ராஸ்டு ரேசியோ கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) கொடுக்கப்பட்டு இருக்கிறது. டூயல் பேண்ட் வை-பை 6 (Dual-Band Wi-Fi 6) கனெக்டிவிட்டி கொண்ட மாடலாக இருக்கிறது.
ஆகவே, வை-பை கனெக்டிவிட்டியுடன் ஓடிடி ஆப்களை அணுகலாம். மேலும் ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) கனெக்டிவிட்டியை இந்த இந்த வ்சட்கோ யுவா கோ பிளஸ் கொடுத்துள்ளது. இந்த கனெக்டிவிட்டி வழியாக வயர்லெஸ் ஸ்பீக்கர்களை லிங்க் செய்து கொள்ளலாம். அதேபோல ஹெட்போன்கள், சவுண்ட்பார்களையும் லிங்க் செய்து ஆடியோவை பயன்படுத்தி கொள்ள முடியும்.
இதுபோக பில்ட்-இன் ஸ்பீக்கர் கொண்ட மாடலாக இந்த வ்சட்கோ யுவா கோ பிளஸ் ப்ரொஜெக்டர் கிடைக்கிறது. மேலும், எச்டிஎம்ஐ போர்ட், யூஎஸ்பி போர்ட் உள்ளிட்ட கனெக்டிவி பீச்சர்களையும் கொடுத்து இருக்கிறது. 1 வருட வாரண்டியுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. ஒயிட் கலரில் மட்டுமே வாங்கி கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications
