Home
Gadgets

எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. 300 இன்ச்.. ஆட்டோ கீஸ்டோன்.. ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

Wzatco நிறுவனத்தின் Wzatco யுவா கோ மேக்ஸ் (WZATCO Yuva Go Max Projector) மாடல் தற்போது சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் இந்த சாதனம் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது Wzatco யுவா கோ மேக்ஸ் மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

தற்போது அமேசான் தளத்தில் WZATCO யுவா கோ மேக்ஸ் மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.10.990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த மாடலை வாங்கினால் ரூ.549 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த சாதனத்தை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

Wzatco யுவா கோ மேக்ஸ் ப்ரொஜெக்டர் அம்சங்கள் (WZATCO Yuva Go Max Projector Specifications): 1080p HD நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் 4K ரெசல்யூஷன் கொண்டுள்ளது Wzatco யுவா கோ மேக்ஸ் ப்ரொஜெக்டர். மேலும் இதில் எச்டிஆர் ( HDR) வசதி உள்ளது. குறிப்பாக இது சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

Wzatco யுவா கோ மேக்ஸ் சாதனத்தில் 11000 லுமன்ஸ் (11000 Lumens) பிரைட்னஸ் வசதி உள்ளது. அதுவும் கேமிங், ஓடிடி திரைப்படங்கள் மற்றும் கால்பந்து, கிரிக்கெட் மற்றும் பல விளையாட்டுகளைப் பார்க்க இந்த ப்ரொஜெக்டர் மிகவும் அருமையாகப் பயன்படும். மேலும் இதில் 50,000 மணி நேர எல்இடி லேம்ப் லைஃப் (LED Lamp Life) கொடுக்கப்பட்டுள்ளது.

Wzatco யுவா கோ மேக்ஸ் ப்ரொஜெக்டர் மாடல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக இதில் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் உள்ளிட்ட அனைத்து ஓடிடி தளங்களையும் பயன்படுத்த முடியும். 5W பில்ட் இன் ஸ்பீக்கர்கள் இதில் உள்ளன. எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தைத் தரும்.

270 டிகிரி ரோட்டேட்டிங் ஸ்டாண்டுடன் Wzatco யுவா கோ மேக்ஸ் ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது Wzatco நிறுவனம்.

Wzatco யுவா கோ மேக்ஸ் ப்ரொஜெக்டர் மூலம் 300 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே 100 இன்ச் மற்றும் 85 இன்ச் டிவிகளை வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. அதாவது இந்த ப்ரொஜெக்டர் மாடலே பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த ப்ரொஜெக்டர் உடன் கண்ட்ரோல் ஒன்றும் கிடைக்கும்.

எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. ஆஃபரில் 4K ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?

ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), ஜூம் அவுட் உள்ளிட்ட பல வசதிகள் Wzatco யுவா கோ மேக்ஸ் ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. குறிப்பாக ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) சப்போர்ட் கொண்டுள்ளது இந்த சாதனம்.

எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், புளூடூத் 5.0, வைஃபை 6 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த Wzatco யுவா கோ மேக்ஸ ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
WZATCO Yuva Go Max model with Android 13 is available at discounted price on Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X