Home
Gadgets

வீட்டுக்குள் ஒரு 4K மினி தியேட்டர்.. 200 இன்ச் ஸ்கிரீன்.. ஆட்டோ கீஸ்டோன்.. புதிய ப்ரொஜெக்டர் அறிமுகம்!

Wzatco நிறுவனம் இந்தியாவில் புதிய Wzatco யுவா போல்ட் ப்ரொஜெக்டர் மாடலை அறிமுகம் செய்துள்ளது. தனித்துவமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பல புதிய அம்சங்களுடன் இந்த ப்ரொஜெக்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த சாதனத்தின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

Wzatco யுவா போல்ட் அம்சங்கள் (Wzatco Yuva Bolt projector Specifications): 1080p HD நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் 4K எச்டிஆர் ரெசல்யூஷன் கொண்டுள்ளது இந்த Wzatco யுவா போல்ட் ப்ரொஜெக்டர் மாடல். அதேபோல் இதில் எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவும் உள்ளது. குறிப்பாக இந்த மாடல் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

வீட்டுக்குள் ஒரு 4K மினி தியேட்டர்.. புதிய ப்ரொஜெக்டர் அறிமுகம்!

அதேபோல் 11000 லுமன்ஸ் பிரைட்னஸ் (lumens brightness) வசதி உள்ளது. ஆகவே கேமிங், ஓடிடி திரைப்படங்கள் மற்றும் கால்பந்து, கிரிக்கெட் மற்றும் பல விளையாட்டுகளைப் பார்க்க இந்த ப்ரொஜெக்டர் மிகவும் அருமையாகப் பயன்படும். இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

குறிப்பாக 270 டிகிரி ரோட்டேட்டிங் ஸ்டாண்டுடன் Wzatco யுவா போல்ட் ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. பின்பு இந்த ப்ரொஜெக்டர் முழுமையாக சீல் செய்யப்பட்ட ஆப்டிகல் எஞ்சினைப் பயன்படுத்துகிறது, இது தூசி படிவதைத் தடுக்கவும். வழக்கமான பராமரிப்பின் தேவையைக் குறைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Wzatco யுவா போல்ட் ப்ரொஜெக்டர் மூலம் 200 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே 100 இன்ச் மற்றும் 90 இன்ச் டிவிகளை வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. அதாவது இந்த ப்ரொஜெக்டர் மாடலே பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த ப்ரொஜெக்டர் உடன் வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் கொண்ட ரிமோட் கண்ட்ரோல் ஒன்றும் கிடைக்கும்.

ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), ஆட்டோ அலைன்மெண்ட் (Auto Alignment), ஜூம், டிஜிட்டல் போகஸ் உள்ளிட்ட பல வசதிகள் Wzatco யுவா போல்ட் ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. மிராகாஸ்ட் (Miracast), ஸ்க்ரீன் மிரரிங் (Screen Mirroring) ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளியாகி உள்ளது.

ஆண்ட்ராய்டு 12.0 (Android 12.0) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு Wzatco யுவா போல்ட் ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதில் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் உள்ளிட்ட அனைத்து ஓடிடி தளங்களையும் பயன்படுத்த முடியும். பில்ட் இன் டூயல் 3W ஸ்பீக்கர்கள் இந்த சாதனத்தில் உள்ளன.

வீட்டுக்குள் ஒரு 4K மினி தியேட்டர்.. புதிய ப்ரொஜெக்டர் அறிமுகம்!

எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், புளூடூத் 5.0, டூயல் வைஃபை 6 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த Wzatco யுவா போல்ட் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் ப்ரொஜெக்டர் மாடலில் 50,000 மணி நேர லேம்ப் லைஃப் (Lamp Life) கொடுக்கப்பட்டுள்ளது.

Wzatco யுவா போல்ட் மாடலின் விலை ரூ.10990-அக உள்ளது. தற்போது அமேசான் தளத்தில் இந்த புதிய ப்ரொஜெக்டர் மாடலை வாங்க முடியும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த சாதனம் வெளியாகி உள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும்.

Best Mobiles in India

English summary
Wzatco Yuva Bolt projector launched in india: check specification price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X