ஆஃபரில் 4K ப்ரொஜெக்டரை தட்டி தூக்குறாங்க.. கூகுள் டிவி ஓஎஸ், 200 இன்ச், ஆட்டோ கீஸ்டோன்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் தற்போது Prime Day Early Deal எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல அசத்தலான 4கே ப்ரொஜெக்டர் மாடல்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதேபோல் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Wzatco யுவா கோ அல்ட்ரா (WZATCO Yuva Go Ultra) ப்ரொஜெக்டர் மாடலும் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
அதாவது இந்தியாவில் WZATCO யுவா கோ அல்ட்ரா மாடல் ஆனது ரூ.17,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அமேசான் தளத்தில் தற்போது நடைபெறும் சிறப்பு விற்பனையில் இந்த ப்ரொஜெக்டர் மாடல் ரூ.15,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த மாடலை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

Wzatco யுவா கோ அல்ட்ரா அம்சங்கள் (WZATCO Yuva Go Ultra Projector Specifications) : Wzatco யுவா கோ அல்ட்ரா ப்ரொஜெக்டர் மாடல் 1080p ஃபுல் எச்டி நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் 4K ரெசல்யூஷன் கொண்டுள்ளது. மேலும் இதில் எச்டிஆர் 10 பிளஸ் (HDR10+) வசதி உள்ளது. குறிப்பாக இந்த மாடல் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
Wzatco யுவா கோ அல்ட்ரா சாதனத்தில் 13000 லுமன்ஸ் (13000 Lumens) பிரைட்னஸ் வசதி உள்ளது. அதுவும் கேமிங், ஓடிடி திரைப்படங்கள், கால்பந்து, கிரிக்கெட் மற்றும் பல விளையாட்டுகளைப் பார்க்க இந்த ப்ரொஜெக்டர் மிகவும் அருமையாகப் பயன்படும். மேலும் இதில் 30,000-hour lifespan கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக Wzatco யுவா கோ அல்ட்ரா ப்ரொஜெக்டர் மாடல் கூகுள் டிவி (Google TV) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக இதில் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் உள்ளிட்ட அனைத்து ஓடிடி தளங்களையும் பயன்படுத்த முடியும். 5W பில்ட் இன் ஸ்பீக்கர்கள் இதில் உள்ளன. எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தைத் தரும்.
அதுவும் 270 டிகிரி ரோட்டேட்டிங் ஸ்டாண்டுடன் Wzatco யுவா கோ மேக்ஸ் ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது. 1.2:1 த்ரோ ரேஷியோ (1.2:1 throw ratio) மற்றும் இமேஜ் ஜூம் (image zoom) ஆதரவும் இதில் உள்ளது. பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது Wzatco நிறுவனம்.
அதேபோல் ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), ஆட்டோ அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Auto Obstacle Avoidance) உள்ளிட்ட பல வசதிகள் Wzatco யுவா கோ அல்ட்ரா ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. குறிப்பாக ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) சப்போர்ட் கொண்டுள்ளது இந்த சாதனம்.
எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், புளூடூத் 5.0, வைஃபை 6 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த Wzatco யுவா கோ அல்ட்ரா ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது.

இந்த Wzatco யுவா கோ அல்ட்ரா ப்ரொஜெக்டர் மூலம் 200 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே 100 இன்ச் மற்றும் 85 இன்ச் டிவிகளை வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. அதாவது இந்த ப்ரொஜெக்டர் மாடலே பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த ப்ரொஜெக்டர் உடன் ரிமோட் கண்ட்ரோல் ஒன்றும் கிடைக்கும்.
மேலும் Wzatco யுவா கோ அல்ட்ரா மாடல் முழுமையாகச் சீல் செய்யப்பட்ட ஆப்டிகல் எஞ்சினைப் பயன்படுத்துகிறது. இது தூசி படிவதைத் தடுக்கவும், வழக்கமான பராமரிப்பின் தேவையைக் குறைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மேம்பட்ட ஏஐ அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன. மேலும் கூகுள் வாய்ஸ் அசிஸ்ட்ண்ட் ஆதரவும் இதில் உள்ளது.


Click it and Unblock the Notifications