டைம்கெட்டில் : மொழி மாற்றம் செய்யும் ப்ளூடூத் ஹெட்செட் கண்டுபிடிப்பு.!

Written By:

அனைத்து பகுதிகளிலும் தொழில்நுட்பம் மிக அதிமாக முன்னேரிக் கொண்டிருக்கிறது, அதன் எடுத்துக்காட்டாக சீன நிறுவனம் புதிய ப்ளூடூத் ஒன்றை இறக்குமதி செய்துள்ளது. இந்த ப்ளூடூத் ஹெட்செட் அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

சீன டைம்கெட்டில் நிறுவனம் இந்த ப்ளூடூத் ஹெட்செட் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த ப்ளூடூத் பொறுத்தவரை அனைத்து நாடுகளில் பயன்படும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
டைம்கெட்டில்:

டைம்கெட்டில்:

சீன டைம்கெட்டில் நிறுவனம் அறிமுகப்படுத்திய இந்த ப்ளூடூத் ஹெட்செட் பொறுத்தவரை மொழி மாற்றம் செய்யும் வசதி செய்து தரப்பட்டுள்ளது
எனக் கூறப்படுகிறது.

 மொழி:

மொழி:

இரு வேறு மொழி பேசும் நபர்கள் இந்த டீ டூ(டபள்யுடி2) என்ற ப்ளூடூத்தை காதில் மாட்டிக் கொள்கின்றனர், பின்னர் ஐஒஎஸ் கொண்ட ஆப்பிள் போன் அல்லது ஐ பேட் போன்றவற்றில் டைம்கெட்டிலின் ஆப் பதிவிறக்கம் செய்து இருவரும் உரையாட முடியும், எளிமையாக மொழியை மாற்றி அமைத்து தருகிறது இந்த அட்டகாசமான ப்ளூடூத்.

மூன்று வினாடி:

மூன்று வினாடி:

இரு வேறு மொழி பேசும் நபர்கள் பேசத் தொடங்கிய மூன்று விநாடி இடைவெளியில் உரையாடலை மொழி மாற்றம் செய்து
தருகிறது இந்த டைம்கெட்டில் ப்ளூடூத் , கூடிய விரைவில் மூன்று விநாடியில் இருந்து ஒரு விநாடியாக குறைக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

வெளிநாடு:

வெளிநாடு:

இந்த ப்ளூடூத் அனைத்து நாடுகளிலும் கண்ப்பாக பயன்படும், அதன்பின் சீன,ஆங்கிலம்,ஸ்பானிய, ஜப்பானிய மொழிகளோடு மேலும் பல மொழிகள் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
WT2 Bluetooth headset translates foreign languages in real time ; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot