30 நிமிஷம் போதும்.. ஆளுக்கு 2 வாங்கி போடும் விலை.. உலகின் மிகச்சிறிய 20000mAh Power Bank அறிமுகம்!
நம்மில் பலருக்கும் 20,000எம்ஏஎச் கெப்பாசிட்டி கொண்ட பவர் பேங்கை வாங்க வேண்டும் என்கிற ஆசை உள்ளது. ஆனால் அது மிகவும் பெரிதாக மற்றும் கனமானதாக இருக்கும்; அதை தூக்கிக்கொண்டு அலைய முடியாது என்பதால் சற்றே குறைவான கெப்பாசிட்டி கொண்ட பவர் பேங்க் பக்கமாக திரும்பி விடுவோம்!
இந்த சிக்கலை காணாமல் அடிக்கும் நோக்கத்தின் கீழ், உலகின் மிகச்சிறிய 20000எம்ஏஎச் பவர் பேங்க் (World's Smallest 20000mAh Power Bank) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது நிறுவனத்தின் பவர் பேங்க்? இதன் விலை நிர்ணயம் என்ன? இது என்னென்ன அம்சங்களை மற்றும் திறன்களை பேக் செய்கிறது? இதை நம்பி வாங்கலாமா? இது பாதுகாப்பானதா? இதோ விவரங்கள்:

ஸ்மார்ட்போன்கள், வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், லேப்டாப்கள் மற்றும் டேப்லெட்டுகள் போன்ற டிவைஸ்களின் மீதான தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அவற்றை "எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும்" சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமும் அதிகரித்துள்ளது. இந்த இடத்தில் தான் பவர் பேங்குகளின் முக்கியத்துவம் வெளிப்படுகிறது!
இந்த முக்கியத்துவதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும்படி அர்பன் (Urbn) நிறுவனம் உலகின் மிகச்சிறிய சார்ஜிங் பவர் பேங்க் ஆன நானோவை (Nano) அறிமுகப்படுத்தி உள்ளது. 20000எம்ஏஎச் திறன் மற்றும் 22.5W சார்ஜிங் திறன் உடன் வரும் நானோ பவர் பேங்க் ஆனது அளவு தொடர்பான அனைத்து சிக்கல்களையும் தீர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

அர்பன் நானோ பவர் பேங்க் அம்சங்கள்: சுவாரசியமாக அர்பன் நானோ இந்த பவர் பேங்க் மாடல் ஆண்டு இரண்டு வெவ்வேறு பேட்டரி திறன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது: 20,000mAh மற்றும் 10,000mAh வேரியண்ட். இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இவ்விரு மாடல்களுமே 30 நிமிடங்களில் 0% முதல் 50% வரை ஒரு ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் திறனை கொண்டுள்ளன.
இருப்பினும் நீங்கள் சார்ஜ் செய்யும் ஸ்மார்ட்போனில் உள்ள பேட்டரி கெப்பாசிட்டி மற்றும் வாட்ஸ்-ஐ பொறுத்து உண்மையான சார்ஜிங் நேரம் (Charging Time) மாறுபடலாம். குறிப்பாக அர்பனின் 20000mAh பவர் பேங்க் ஆனது 22.5W சார்ஜிங் ஆதரவை பெற்று தனித்து நிற்கிறது. இது ஒரே நேரத்தில் பல டிவைஸ்களுக்கு இடமளிக்கும் ட்ரிபிள் போர்ட் டிசைனையும் (Triple Port Design) கொண்டுள்ளது.

இதன்கீழ் நீங்கள் ஒரு யூஎஸ்பி-ஏ (USB-A) மற்றும் இரண்டு யூஎஸ்பி-சி (USB-C) போர்ட்களை பெறுவீர்கள். இது ஹெட்ஃபோன்கள் மற்றும் போன்கள் போன்ற டிவைஸ்களை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்வதற்கும், உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவதற்கும் உறுதுணையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
20000mAh பவர் பேங்க்கை வாங்காமல் தவிர்க்க பாதுகாப்பு பற்றி கவலையே காரணம் என்றால், அதற்கும் இங்கே இடமில்லை. அர்பன் நிறுவனம் பிஐஎஸ் சான்றிதழ் (BIS Certificate) மற்றும் 12-அடுக்கு பாதுகாப்பு அமைப்புடன் ( 12-layer protection system) பாதுகாப்பு தொடர்பான கவலையை நிவர்த்தி செய்கிறது. இந்த பவர் பேங்கின் அளாவிய 10.8 * 2.8 * 6.9செமீ ஆகும். மறுகையில் உள்ள 10000mAh மாடல் டூ வே போர்ட் டிசைனை 20W சார்ஜிங்கின் கீழ் வழங்குகிறது.

அர்பன் நானோ பவர் பேங்க் விலை: அர்பன் நானோ 10000mAh மற்றும் 20000mAh பவர் பேங்க் மாடல்கள் முறையே ரூ.2,499 மற்றும் ரூ.1,699 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளன. இரண்டுமே அமேசான் (Amazon), க்ரோமா (Croma) மற்றும் அர்பன் வலைத்தளம் (Urban World Website) வழியாக வாங்க கிடைக்கின்றன. அறியாதோர்க்கு அர்பன் என்பது பவர் பேங்குகள், ஹெட்ஃபோன்கள் மற்றும் கேபிள்கள் போன்ற தயாரிப்புகளுக்காக நன்கு அறியப்பட்ட பிராண்ட் ஆகும்!


Click it and Unblock the Notifications








