8டிபி சேமிப்புத்திறன் கொண்ட உலகின் மிகச்சிறிய யுஎஸ்பி-சி டிரைவ்!

|

எஸ்எஸ்டி எனப்படும் சாலிட் ஸ்டேட் டிரைவ்கள், நாம் கணினிகளைப் பயன்படுத்தும் முறையை உண்மையிலேயே விரைவுபடுத்தியுள்ள. இந்த வேகத்திற்கு நாம் அடிமையாகிவிட்டால், நிலையான இயக்ககங்களை(ஸ்டேன்டேர்டு டிரைவ்) யாரும் பயன்படுத்த விரும்புவதில்லை. தரவு வேகத்திற்கான இந்த தாகத்தை தணிக்க, டிரைவ் தயாரிப்பாளர்கள் அதிக வேகத்தை வழங்குகின்ற போர்ட்டபிள் எஸ்.எஸ்.டி.க்களை அறிமுகப்படுத்தினர்.

சான்டிஸ்க் புதிய வழி

சான்டிஸ்க் புதிய வழி

இருப்பினும் அன்றாடம் டன்கணக்கிலான தரவை நகலெடுக்கும் நபர்களுக்கு, நிலையான சேமிப்பக உள்ளமைவு சில வரம்புகளை கொண்டுள்ளது. ஆனால் இந்த சிக்கலை அகற்ற சான்டிஸ்க் புதிய வழியை கண்டறிந்துள்ளது.

CES 2020 நிகழ்வில் சான்டிஸ்க்

CES 2020 நிகழ்வில் சான்டிஸ்க்

CES 2020 நிகழ்வில் சான்டிஸ்க் நிறுவனம், 8 டெராபைட் திறன்கொண்ட உலகின் முதல் மிகச்சிறிய எஸ்.எஸ்.டி.யின் முன்மாதிரி ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது சிறிய SSD இல் கிடைக்கும் அதிகபட்ச சேமிப்புதிறன் 4TB ஆகும். மேலும் சில டிரைவ் தயாரிப்பாளர்கள் மட்டுமே அந்த உள்ளமைவில் வழங்கும்நிலையில், பெரும்பாலும் 2TB சேமிப்புதிறனே வழங்கப்படுகிறது.

8டிபி சான்டிஸ்கின் எக்ஸ்ட்ரீம் போர்ட்டபிள் எக்ஸ்டர்னல் எஸ்.எஸ்.டி

8டிபி சான்டிஸ்கின் எக்ஸ்ட்ரீம் போர்ட்டபிள் எக்ஸ்டர்னல் எஸ்.எஸ்.டி

சான்டிஸ்கின் எக்ஸ்ட்ரீம் போர்ட்டபிள் எக்ஸ்டர்னல் எஸ்.எஸ்.டி வரிசையின் ஒரு பகுதியான இந்த 8டிபி முன்மாதிரி அதைப்போலே தோற்றம் கொண்டிருந்தாலும், சேமிப்பகத்தை அதிகரிக்க உதவும் அதிக எண்ணிக்கையிலான மின்னணு தொடர்புகள் காரணமாக சற்று பெரியதாக இருக்கிறது .

20 ஜிகாபைட் வரை வேகம்

20 ஜிகாபைட் வரை வேகம்

சான்டிஸ்கின் கூற்றுப்படி, உலகின் மிக உயர்ந்த திறன் கொண்ட பாக்கெட் அளவிலான இந்த எஸ்.எஸ்.டி, வினாடிக்கு 20 ஜிகாபைட் வரை பரிமாற்ற வேகத்தை வழங்க வல்லது. உச்சபட்ச வேகத்தை வழங்க யூ.எஸ்.பி டைப்-சி இணைப்பியைப் பயன்படுத்தவேண்டும்.

மிக அதிக விலையா?

மிக அதிக விலையா?

இந்த எஸ்.எஸ்.டி சாதனம் எப்போது சந்தையில் வெளியாகும் என்ற உண்மையை சான்டிஸ்க் வெளிப்படுத்தவில்லை என்றாலும், அது மிக அதிக விலையில் வரும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

1 டெராபைட் டூ இன் ஒன் தம்ப் டிரைவ்

1 டெராபைட் டூ இன் ஒன் தம்ப் டிரைவ்

இந்த எஸ்.எஸ்.டி உடன், 1 டெராபைட் டூ இன் ஒன் தம்ப் டிரைவ் ஒன்றையும் சான்டிஸ்க் வெளியிட்டுள்ளது. இது ஒரு முனையில் யூ.எஸ்.பி டைப் சி இணைப்பையும் மறுபுறத்தில் யு.எஸ்.பி டைப்-ஏவையும் கொண்டுள்ளது. இந்த இரண்டு போர்ட்களும் ஒரு சுழல் பொறிமுறையுடன் இணைக்கப்பட்டுள்ளதால், அவை பயன்பாட்டில் இல்லாத இணைப்பிற்கான பாதுகாப்பாளராக செயல்பட முடியும்.

விலை என்ன தெரியுமா?

விலை என்ன தெரியுமா?

அல்ட்ரா டூயல் டிரைவ் லக்ஸ் தம்ப் டிரைவ், ஐபாட் புரோ பயனர்கள் அல்லது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்கள் பயணத்தின்போது கோப்புகளை காபி பேஸ்ட் செய்வதற்கு ஏற்றது. இந்த டிரைவ் முற்றிலும் உலோகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளதால், நிச்சயமாக ஒரு பிரீமியம் தோற்றத்தையும் உணர்வையும் சேர்க்கிறது. இந்த டிரைவ் வரும் குளிர்காலத்தின் இறுதியில், 249 அமெரிக்க டாலர் அல்லது சுமார் ரூ .18,000 விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
World's Smallest Portable USB-C Drive With 8TB Storage And 20Gbps Data Speed : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X