நியாயமான விலைக்கு உலகின் முதல் 17.3-inch ஃபோல்டபிள் லேப்டாப் அறிமுகம்!

|

ஃபோல்டபிள் டிஸ்பிளே லேப்டாப் (Foldable Display Laptop) என்றதுமே "அடப் போங்கப்பா! சாதாரண லேப்டாப் வாங்கவே பட்ஜெட் இடிக்குது! இதுல எங்க இருந்து மடங்கக்கூடிய டிஸ்பிளேவை கொண்ட லேப்டாப்பை வாங்குவது?" என்று நீங்கள் நினைத்தால்..

இக்கட்டுரையின் முடிவில் அந்த எண்ணத்தில் சிறதளவேனும் மாற்றம் ஏற்படலாம்!

ஏனெனில்?

ஏனெனில்?

நாம் இங்கே பார்க்கப்போவது.. இந்த விலைக்கு இப்படி ஒரு லேப்டாப்-ஆ? என்று நீங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு "மிகவும் நியாயமான விலைக்கு" அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆசஸ் நிறுவனத்தின் முதல் ஃபோல்டபிள் டிஸ்பிளே லேப்டாப்பை பற்றி தான் - அது Zenbook 17 Fold OLED (UX9702) மாடல் ஆகும்.

ஜென்புக் 17 ஃபோல்ட் ஓஎல்இடி லேப்டாப்பின் விலை நிர்ணயம் என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

சைக்கிள் கேப்ல Jio பார்த்த வேலை! வீடியோவை உற்றுப் பார்த்தால் தெரியும்!சைக்கிள் கேப்ல Jio பார்த்த வேலை! வீடியோவை உற்றுப் பார்த்தால் தெரியும்!

இப்படி ஒரு லேப்டாப்.. இதுதான் உலகிலேயே முதல்முறை!

இப்படி ஒரு லேப்டாப்.. இதுதான் உலகிலேயே முதல்முறை!

ஆசஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, அதன் புதிய Foldable Laptop ஆனது, உலகின் முதல் 17.3 இன்ச் மடிக்கக்கூடிய டிஸ்பிளேவை கொண்ட லேப்டாப் ஆகும்.

இந்த லேப்டாப்பை உருவாக்க, இன்டெல் மற்றும் பிற டொமைன் நிபுணர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளதாகவும் ஆசஸ் நிறுவனம் கூறுகிறது.

மாடல் பெயர் குறிப்பிடுவது போலவே, Zenbook 17 Fold ஆனது 17.3-இன்ச் அளவிலான "மடிக்கக்கூடிய" OLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது மற்றும் இது லேட்டஸ்ட் ஜெனரேஷன் இன்டெல் கோர் ப்ராசஸர்களை பேக் செய்கிறது.

ரூல்ஸ் இருந்தா.. அது மீறப்படும்!

ரூல்ஸ் இருந்தா.. அது மீறப்படும்!

ஆசஸ் Zenbook 17 Fold OLED ஆனது "பாரம்பரியமான" லேப்டாப்களின் வடிவமைப்பில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்குகிறது மற்றும் வெவ்வேறு (வேலைகள் தொடர்பான) சூழ்நிலைகளுக்கு ஏற்ப "மாற்றியமைக்கும்" திறனையும் கொண்டுள்ளது.

இந்த லேப்டாப் 12த் ஜெனரேஷன் Intel Core i7 1250U ப்ராசஸர் உடனாக Intel Iris Xe இன்டெக்ரேடட் கிராபிக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் Intel Evo சான்றிதழ்களுடன் வருகிறது. மேலும் 16GB ரேம் மற்றும் 1TB PCIe SSD ஸ்டோரேஜையும் வழங்குகிறது.

மொத்தம் 8 போன்கள்! இதுக்கு மேல விலை குறையாது; சரியான வாய்ப்பு!மொத்தம் 8 போன்கள்! இதுக்கு மேல விலை குறையாது; சரியான வாய்ப்பு!

இரண்டு வெவ்வேறு ஸ்க்ரீன் அளவுகளை வழங்கும்!

இரண்டு வெவ்வேறு ஸ்க்ரீன் அளவுகளை வழங்கும்!

ஆம்! இந்த லேப்டாப் இரண்டு வெவ்வேறு ஸ்க்ரீன் சைஸ்களை வழங்கும். அதாவது இதன் 17.3-இன்ச் 2.5K டச் ஸ்க்ரீனை ஃபோல்ட் செய்தால், அது நடுவில் மடிந்து இரண்டு அளவுகளிலான ஸ்க்ரீன்களை வழங்கும்.

இதை மடிக்கும்போது உங்களுக்கு ஒரு 12.5 இன்ச் டிஸ்பிளேவும் கிடைக்கும். இது "பாரம்பரியமான" 13-இன்ச் லேப்டாப்களை விட ஒப்பீட்டளவில் சிறியது மற்றும் கச்சிதமானதும் கூட!

இதை சாதாரணமான டிஸ்பிளேனு நினைச்சிடாதீங்க!

இதை சாதாரணமான டிஸ்பிளேனு நினைச்சிடாதீங்க!

ஆசஸ் நிறுவனத்தின் இந்த ஃபோல்டபிள் லேப்டாப்பின் டிஸ்பிளேவானது, டால்பி விஷன், 100% DCI-P3 கேமட், துல்லியமான வண்ணத்திற்கான PANTONE, "தீங்கு விளைவிக்கும்" ப்ளூ லைட்டைக் குறைப்பதற்கான TÜV Rheinland-சான்றளிதழ் போன்றவைகளை பேக் செய்கிறது.

இந்த பட்டியலில் தெளிவான வீடியோ கால்களுக்கான ASUS 3D Noise Reduction (3DNR) தொழில்நுட்பத்துடன் கூடிய 5 MP AI வெப்கேமும் அடங்கும்.

கேட்டதும் ஆர்டர் போடும் விலையில் அறிமுகமான NOKIA-வின் புதிய ஃப்ளிப் போன்!கேட்டதும் ஆர்டர் போடும் விலையில் அறிமுகமான NOKIA-வின் புதிய ஃப்ளிப் போன்!

30,000 முறை ஓப்பன் அன்ட் க்ளோஸ் சைக்கிள்!

30,000 முறை ஓப்பன் அன்ட் க்ளோஸ் சைக்கிள்!

இந்த லேப்டாப் 180 டிகிரி கீலுடன் வருகிறது, நிறுவனத்தின் கூற்றுப்படி, இது 30,000 ஓப்பன் அன்ட் க்ளோஸ் சைக்கிளை (திறத்தல் மற்றும் மூடுதல் சுழற்சி) அசால்ட் ஆக தாக்குப்பிடிக்கும்!

இது பல வகையான Working Mode-களையும் வழங்குகிறது - டெஸ்க்டாப், லேப்டாப் (ப்ளூடூத் கீபோர்ட் உடன்), லேப்டாப் (விர்ச்சுவல் கீபோர்ட் உடன்), டேப்லெட், ரீடர் மற்றும் எக்ஸ்டென்டட் - இது முழு அளவிலான ASUS ErgoSense ப்ளூடூத் கீபோர்ட் மற்றும் டச்பேடுடன் இணைந்த Folding design ஆகும்.

TV ஸ்க்ரீனை துடைக்கும் போது செய்யவே கூடாத 8 தவறுகள்! மீறினால் நிரந்தர டேமேஜ்!TV ஸ்க்ரீனை துடைக்கும் போது செய்யவே கூடாத 8 தவறுகள்! மீறினால் நிரந்தர டேமேஜ்!

Asus Zenbook 17 Fold OLED: விலை மற்றும் விற்பனை:

Asus Zenbook 17 Fold OLED: விலை மற்றும் விற்பனை:

தண்டர்போல்ட் 4 ஆதரவுடனான இரண்டு USB Type-C போர்ட்கள் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 75Wh பேட்டரியுடன் வரும் Asus Zenbook 17 Fold OLED லேப்டாப் ஆனது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.2,78,297 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த 2022 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில், இந்த லேப்டாப் உலகளவில் வாங்க கிடைக்கும். இருப்பினும் இந்திய அறிமுகம் மற்றும் விலை பற்றி எந்த அறிவிப்பும் இல்லை!

Best Mobiles in India

English summary
World First Laptop with 17.3-inch Foldable Display Laptop Asus Zenbook 17 Fold OLED, Check Price.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X