அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்ட்ல இல்லையே.. 240W ஸ்பீக்கர்கள்.. 116.5-இன்ச் டிவியை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்!
பெங்களூருவை சேர்ந்த Indkal டெக்னாலஜிஸ் நிறுவனம் வாப்பிள் மேக்சிமஸ் சீரிஸ் (Wobble Maximus Series) எனும் பெயரில் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. அதுவும் 116.5-இன்ச், 98-இன்ச், 86-இன்ச் என மூன்று அளவுகளில் இந்த புதிய வாப்பிள் மேக்சிமஸ் சீரிஸ் டிவிகள் வாங்க கிடைக்கும். இப்போது இந்த புதிய டிவிகளின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
வாப்பிள் மேக்சிமஸ் சீரிஸ் டிவி அம்சங்கள் (Wobble Maximus Series TV Specifications): 4கே ஆதரவு கொண்ட கியூஎல்இடி மினிஎல்இடி(QLED MiniLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய டிவிகள் வெளிவந்துள்ளன. மேலும் விவிட் குவாண்டம் டாட் கலர் (vivid quantum dot colour), 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர், டால்பி விஷன், உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த புதிய வாப்பிள் மேக்சிமஸ் சீரிஸ் டிவிகளில் உள்ளன. எனவே இந்த டிவிகள் ஒரு தியேட்டர் அனுபவத்தை வழங்கும்.

மினிஎல்இடி பேக்லைட் (MiniLED backlight), டீப் கான்ட்ராஸ்ட் (deep contrast), வைப்ரண்ட் கலர் (vibrant colour) போன்ற அம்சங்களுடன் இந்த டிவிகள் வெளிவந்துள்ளதால் துல்லியமாக வீடியோக்களை பார்க்கலாம். குறிப்பாக சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட் 115 இன்ச் டிசிஎல் டிவியை விட மேம்பட்ட டிஸ்பிளே அம்சங்கள் இந்த வாப்பிள் மேக்சிமஸ் சீரிஸ் டிவி மாடல்களில் உள்ளன.
ஆண்ட்ராய்டு 14 மற்றும் கூகுள் டிவி 5.0 மூலம் இந்த புதிய 116.5-இன்ச், 98-இன்ச், 86-இன்ச் டிவிகள் இயங்குகிறது. எனவே இந்த டிவிகளில் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar), யூடியூப் (Youtube) போன்ற ஓடிடி ஆப்கள் இந்த வாப்பிள் மேக்சிமஸ் சீரிஸ் டிவிகளில் பயன்படுத்த முடியும். பின்பு மேம்பட்ட கேமிங் அம்சங்களும் இந்த டிவிகளில் உள்ளது. அதற்கு தகுந்தபடி 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் இந்த டிவிகள் வெளிவந்துள்ளன.
டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட 240W 6.2.2-சேனல் ஸ்பீக்கர் சிஸ்டம் மற்றும் டூயல் வூஃபர்களும் இந்த புதிய வாப்பிள் மேக்சிமஸ் சீரிஸ் மாடல்களில் உள்ளன. குறிப்பாக இந்த டிவிகள் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். இதுதவிர பல்வேறு ஆடியோ அம்சங்களும் இந்த புதிய வாப்பிள் 4கே டிவிகளில் உள்ளன.

ஆனால் வாப்பிள் மேக்சிமஸ் சீரிஸ் டிவிகளின் விலை மற்றும் விற்பனை விவரங்களை வெளியிடவில்லை அந்நிறுவனம். கூடிய விரைவில் இந்த புதிய டிவிகளின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் வெளியாகும். குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த வாப்பிள் டிவிகள் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் கடந்த வாரம் தான் ஹைசென்ஸ் (hisense) நிறுவனம் இந்தியாவில் 116-இன்ச் மற்றும் 100 இன்ச் டிவிகளை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த புதிய டிவிகள் மேம்பட்ட ஏஐ அம்சங்கள் மற்றும் சிறந்த ஆடியோ வசதியுடன் வெளிவந்தது. அதுவும் ஹைசென்ஸ் யுஎக்ஸ் யுஎல்இடி சீரிஸ் 100 இன்ச் டிவி மாடலின் விலை ரூ.9,99,999-ஆக உள்ளது. பின்பு இதன் 116-இன்ச் மாடலின் விலை ரூ.29,99,999-ஆக உள்ளது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் இந்த டிவிகள் வாங்குவதற்கு கிடைக்கிறது.
image credit: wobble, gadgetbridge


Click it and Unblock the Notifications