Subscribe to Gizbot

தொந்தரவு செய்யாத வயர்லெஸ் ஹெட்போன்கள்..!!

Posted By:

நாள் முழுக்க வேலை செய்பவர்களில் துவங்கி இன்று பள்ளி, கல்லூரி என எங்கு சென்றாலும் இலவச இணைப்பாக வருவது தான் உடல் சோர்வு மற்றும் தலைவலி. இன்றைய இயந்திர உலகில் டென்ஷன் சராசரி பிரச்சனையாகிவிட்ட நிலையில் அனைவரையும் சகஜ நிலைக்கு திரும்பி உற்சாகமூட்ட உதவும் கருவியாக ஹெட்போன்கள் தான் இருக்கின்றன என்றே கூற வேண்டும்.

முன்பு வயர் வைத்த ஹெட்போன்கள் அங்கும் இங்குமாக சிக்காகி சில சமயங்களில் அதனை சரி செய்வதே பெரிய தலைவலியில் போய் முடிந்தது. இதனை சரி செய்ய உருவாக்கப்பட்ட கருவியாக இன்றைய வயர்லெஸ் ஹெட்போன்கள் இருக்கின்றன.

ஹெட்போன்கள் என்றாலே இசை, செய்திகளை கேட்பதே வாடிக்கையாக இருக்கும் நிலையில், ஹெட்போன்கள் உங்களது உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவியாக இருக்கும் என்பதை கடைசி ஸ்லைடரில் புரிந்து கொள்வீர்கள்...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
தி டேஷ்

தி டேஷ்

ஸ்மார்ட்போனில் இருக்கும் இசையை ப்ளூடூத் மூலம் கேட்க உதவுவதோடு தி டேஷ் ஹெட்போன் உங்களது உடல் ஒழுக்கம் சார்ந்த தகவல்களை வழங்கும். ஒரு நாளில் நீங்கள் எத்தனை தூரம் நடந்திருக்கின்றீர்கள், இதய துடிப்பு, மூச்சி என்பனவற்றோடு வெளியில் ஏற்படும் சத்தத்தை முழுமையாக முடக்கி இனிமையான இசையை அனுபவிக்க வழி செய்யும்.

லுமாஃபிட்

லுமாஃபிட்

இது பயனர்களுக்கு வெறும் இசையை மட்டும் வழங்குவதோடு அவர்களின் உடலை சரியாக பராமரிக்க சரியான வழிமுறைகளை பரிந்துரைக்கின்றது. மேலும் இது அவர்களின் உடல் அசைவுகளை கச்சிதமாக ட்ராக் செய்து அதற்கேற்ப பரிந்துரைகளை வழங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மோட்டோ ஹின்ட்

மோட்டோ ஹின்ட்

மோட்டோ ஹின்ட் ஹெட்போன் மூலம் ஸ்மார்ட்போனின் அழைப்புகளை சுமார் 150 அடி வரை தூரத்தில் இருந்தும் ஏற்க முடியும். இதோடு நாய்ஸ் ரெடக்ஷன், எக்கோ கேன்செல்லேஷன் போன்ற அம்சங்கள் இருப்பதால் சிறப்பான இசையை அனுபவிக்க முடியும். இத்தனை அம்சங்களோடு ஆறு வித வடிவமைப்புகளில் இந்த ஹெட்போன்கள் கிடைக்கின்றது.

டப்ஸ்

டப்ஸ்

காதுகளை பாதுகாக்கும் இந்த ஹெட்போன்கள் அக்வஸ்டிக் ஃபில்டர்கள் வெளியில் எவ்வித சத்தங்கள் அனைத்தையும் ப்ளாக் செய்து விடும், இதனால் வாடிக்கையாளர்கள் இனிமையான இசையை எவ்வித தொந்தரவும் இன்றி அனுபவிக்க முடியும்.

எல்பீ

எல்பீ

குரல் மற்றும் தலை அசைவுகளை கொண்டு எல்பீ ஹெட்போனினை இயக்க முடியும். நாய்ல் ஃபில்ட்ரேஷன் அம்சம் இருப்பதோடு இதனை எடுக்காமல் நீங்கள் வெளியில் புறப்பட்டால் இந்த ஹெட்போன் உங்களை நினைவுப்படுத்தும்.

டாட்

டாட்

உலகின் சிறிய ப்ளூடூத் ஹெட்போன் என்ற பெருமை கொண்டிருப்பதோடு சின்க் பிரச்சனைகளை தவிர்த்து அதிக துல்லியமான இசையை வழங்கும், இதோடு அழைப்புகளை ஏற்பது, நிராகரிப்பது மற்றும் ஒரே சமயத்தில் எட்டு கருவிளுடன் இணைந்து கொள்ளும் திறன் கொண்டுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்ய டாட் கருவிக்கு அதிகபட்சம் 30 நிமிடங்களே போதும்.

கொசினஸ் ஒன்

கொசினஸ் ஒன்

தடகள வீரர்கள் மற்றும் தினசரி உடற்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு ஏற்ற ஹெட்போன் தான் கொசினஸ் ஒன். இந்த கருவியானது பயனர்களின் இதய துடிப்பு, நீரேற்ற அளவு மற்றும் உடல் வெப்பநிலை போன்றவற்றை ட்ராக் செய்யும் திறன் கொண்டிருக்கின்றது.

ஃப்ரீ வேவ்ஸ்

ஃப்ரீ வேவ்ஸ்

உடல் ஆரோக்கியத்தை கணக்கிடும் திறன் கொண்ட அதிநவீன ஹெட்போன் தான் ஃப்ரீவேவ்ஸ். பயனாளிகளின் காதுகளில் கச்சிதமாக பொருந்தும் இந்த ஹெட்போன் இதய துடிப்பு, காற்றின் அளவு, ஒர் நாளில் நடந்த தூரம், கடக்க எடுத்து கொண்ட நேரம் மற்றும் உடற்பயிற்சி செய்த நேரம் போன்றவற்றை டிராக் செய்யும்.

ஸ்கூப்

ஸ்கூப்

சரியாக காது கேட்காதவர்கள் மற்றும் அதிக சத்தம் இருக்கும் இடங்களில் பணி செய்வோருக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஹெட்போன் தான் ஸ்கூப். சவுண்டுஹாக் தொழில்நுட்பத்தின் மூலம் இந்த ஹெட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு இதில் மொபைல் ஆப், வயர்லெஸ் மைக் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

ஹியர்

ஹியர்

ஹியர் ஹெட்போன்கள் உங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் தான் கேட்க வைக்கும். இதன் மூலம் டிராபிக், அலுவலக கூச்சல் ன ஒவ்வொரு இடங்களிலும் உங்களுக்கு பிடிக்காத சத்தத்தை ஹியர் ப்ளாக் செய்துவிடும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Wireless Headphones That will Change the Way We Hear. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot