விங்ஸ் ஸ்விட்ச் ஒயர்லெஸ் நெக்பேண்ட்! நம்பி வாங்கலாமா?
ஸ்மார்ட்போன் உதிரிபாகங்களுக்கு அடுத்து ஆடியோ சம்பந்தப்பட்ட கருவிகள் அதிகம் விரும்பப்படுகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை. குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட இயர்போன்களை ஆதரிக்கும் மொபைல் சாதனங்கள் வந்ததில் இருந்து, சிறிய புளூடூத் ஸ்பீக்கர்கள், நெக் பேண்ட் மற்றும் பிற வயர்லெஸ் ஆடியோ கருவிகள் அதிவேகமாக வளர்ந்துள்ளன.

இந்திய சந்தையை பொருத்தமட்டில், பட்ஜெட் ஆடியோ கருவிகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது.மற்ற பிரபலமான பிராண்டுகளுடன் சோனி, சென்ஹீஸர், ஸ்கல்கேண்டி போன்ற பல நிறுவனங்கள் உள்ள நிலையில் , இந்த பிரிவில் சில வளர்ந்துவரும் பிராண்டுகளும் உள்ளன.
அதற்கேற்ப டிஜிட்டல் உபகரணங்கள் பிராண்டான "விங்ஸ் ஃலைப்ஸ்டைல்" நிறுவனம், ஸ்விட்ச் என்ற மற்றொரு ஒயர்லெஸ் நெக்பேண்ட்-ஐ சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ1,499 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இலகுவான இந்த நெக்பேண்ட், அமேசான் மற்றும் மிந்த்ரா தளங்களில் ஆன்லைனில் கிடைக்கிறது. இதனை சிலகாலம் பயன்படுத்திய எங்களது அனுபவங்களை இங்கு காணலாம்.

தெளிவான வடிவமைப்பு
நெகிழ்வான மற்றும் இலகுரக பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட இந்த விங்ஸ் ஸ்விட்ச் நெக்பேண்ட், தரமான பொருளால் தயாரிக்கப்பட்டதால் அடிப்படை வடிவமைப்புடன் கூட மலிவானதாக தெரியவில்லை. மீடியா கன்ட்ரோல் பொத்தான்கள் வலதுபக்க இயர்போன்களில் உள்ளன. அவற்றிற்கு மத்தியில் பவர் பொத்தான் உள்ளது . மற்ற வயர்லெஸ் நெக்ட்பேண்ட்களை போலவே, இதிலும் பொத்தான்களை உண்மையில் பார்க்காமல் பயன்படுத்த எளிதானது.
காதுகளில் பொருந்தும் வகையில் கச்சிதமாக உள்ளது இயர்பட்ஸ், காந்தசக்தி கொண்டிருப்பதால் கழுத்திலிருந்து எளிதில் கீழே விழாமல் பாதுகாக்கிறது. இலகுவான நெகிழ்வுதன்மை கொண்ட சிக்கல் இல்லாத கேபிள்களை கொண்ட இது, IPX7 சான்றிதழ் கொண்ட தூசு மற்றும் தண்ணீரில் பாதுகாக்கப்பட்டதாகும்.

சமநிலை மற்றும் உயர்தர கேட்கும் அனுபவம்
சிறப்பான செயல்திறனை வழங்கும் இந்த சாதனம், மிகவும் அதிகமான சத்தத்தை வெளிபடுத்தாமல் வெளிப்புற சத்தத்தை தடுக்கும் வகையில் உள்ளது. எச்டி பேஸ் கொண்ட நியோடிமியம் டிரைவர்களை கொண்டிருக்கும் இது, உயர்தர ஆடியோ அனுபவத்தை தருவதுடன் அதிகபட்ச ஒலியின் போது இரைச்சலை தருவதில்லை மற்றும் வெளியில் சத்தம் கசிவதுமில்லை.

எளிதான இணைப்பு
ப்ளூடுத் ஒயர்லெஸ் இணைப்புதிறன் கொண்ட இந்த நெக்பேண்ட்-ஐ ஸ்மார்ட்போன்(ஆண்ராய்டு & ஐஓஎஸ்), டேப்லெட், லேப்டாப் மற்றும் கணினியுடன் எளிதில் இணைக்க முடியும். இதற்கு செய்யவேண்டியதெல்லாம் பவர் பட்டனை சிறிதுநேரம் அழுத்தி பிடித்து இணைப்பை ஏற்படுத்தலாம். அதன் பிறகு ப்ளூடுத் செட்டிங்ஸ் பகுதியில் "விங்ஸ் ஸ்விட்ச்" ஐ தேர்வுசெய்தால் போதும்.
குறிப்பாக இதில் உள்ளார்ந்த மைக்ரோபோன் இருப்பதால், தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வதும் மிகவும் எளிமையானது.

ஒருமுறை சார்ஜ் செய்தால் பலநாட்கள் தாங்கும்
இவை 160mAh பேட்டரியை கொண்டிருப்பதால், 1.5 மணிநேரத்திற்கு சார்ஜ் செய்தால் 10 மணிநேரம் வரை பயன்படுத்தால். பூஜ்ஜியத்தில் இருந்து முழுவதுமாக சார்ஜ் ஆக 1.5 மணிநேரத்திற்கு சற்று அதிகமாக எடுத்துகொள்கிறது. 70-80% ஒலியில் பயன்படுத்தும் போது 6 மணிநேரம் தாக்குபிடிக்கும்.

இறுதி முடிவு
விங்ஸ் ஸ்விட்ச் நீங்கள் இந்தியாவில் வாங்க முடிகின்ற ஒரு நல்ல பட்ஜெட் விலை வயர்லெஸ் நெக்பேண்ட். ரூ. 1,499 என்ற விலையில் இந்த சாதனம் சிறப்பான ஆடியோவை வழங்குவதுடன் அணிவதற்கு வசதியாகவும் உள்ளது.


Click it and Unblock the Notifications








