1 இல்ல 2 இல்ல.. 4TB ஸ்டோரேஜ்.. ஒட்டுமொத்த போர்ட்டபிள் SSD-களையும் தூக்கி சாப்பிடும் Samsung T7 ஷீல்ட்!
இந்திய சந்தையில் நீங்கள் பல வகையான போர்ட்டபிள் எஸ்எஸ்டிகளை (Portable SSD) கடந்து வந்து இருப்பீர்கள். ஆனால் 4டிபி ஸ்டோரேஜுடன் வரும் சாம்சங்கின் டி7 ஷீல்ட் போர்ட்டபிள் எஸ்எஸ்டி-ஐ (Samsung T7 Shield Portable SSD) போன்ற ஒரு எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் டிவைஸை பார்த்து இருக்கவே மாட்டீர்கள்!
கண்களை மூடிக்கொண்டு வாங்கும் அளவிற்கு இதுவொரு பெஸ்ட் போர்ட்டபிள் எஸ்எஸ்டி ஆக உள்ளது. இதில் அப்படி என்ன ஸ்பெஷல்? வாருங்கள் இதன் டிசைன் (Design), இதன் ட்யூரபிலிட்டி (Durability), இதன் செயல்திறன் (Performance), இதன் விலை நிர்ணயம் (Price in India) என ஒவ்வொன்றையும் அக்குவேறு ஆணிவேறாக பிரித்து பார்க்கலாம்.

டிசைன்: இது ஒரு பிளேயிங் கார்டின் (Playing Card) அளவில் உள்ள, வெறும் 98 கிராம் எடையுள்ள மிகவும் இலகுவான வடிவமைப்பை பெற்றுள்ளது. மேலும் இது ஸ்டேட்டஸ் எல்இடி (Status LED) உடன், ஒரு முனையில் யூஎஸ்பி-சி 3.2 (ஜென் 2) போர்ட்டையும் கொண்டுள்ளது. இது ஒரு பெர்மனென்ட் ரப்பரைஸ்டு ஷெல்லால் (Permanent Rubberized Shell) கவர் செய்யப்பட்டுள்ளது. இது கீழே விழுதல் மற்றும் அதிர்ச்சிகளிலிருந்து இதை பாதுகாக்கிறது. மேலும் சாம்சங்கின் டி7 ஷீல்ட் போர்ட்டபிள் எஸ்எஸ்டி-யின் ரிப்டு டிசைன் (Ribbed design) அதை நழுவாமல் பிடிப்பதையும், பிடிப்பில் இருந்து விலகாமல் இருப்பதையும் உறுதி செய்கிறது. ஒட்டுமொத்தமாக டி7 ஷீல்டின் ரப்பரைஸ்டு ஷெல், கடுமையான சூழ்நிலைகளிலும் உங்கள் டேட்டாக்களை பாதுகாப்பாக வைத்திருக்க கூடுதல் டிராப் மற்றும் ஷாக் பாதுகாப்பை சேர்க்கிறது.
ட்யூரபிலிட்டி: 3 மீட்டர் ட்ராப் ரெசிஸ்டன்ஸ் (Drop Resistance) உடன் வரும் டி7 ஷீல்ட் ஆனது ஐபி65 ரேட்டட் நீர் மற்றும் தூசி எதிர்ப்பையும் (Water and dust resistance) வழங்குகிறது. அதற்காக நீச்சலடிக்கும்போது இந்த எஸ்எஸ்டி-ஐ உங்களுடன் எடுத்து செல்ல வேண்டாம். ஆனால் மழை காலத்தில் நம்பி வெளியே எடுத்து செல்ல முடியும். ஒட்டுமொத்தமாக பயணங்களின் போது இதன் ட்ராப் ரெசிஸ்டன்ஸ் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் நிச்சயம் கைகொடுக்கும்.
பெர்ஃபார்மென்ஸ்: பாஸ்வேர்ட் பாதுகாப்புடன் 256-பிட் ஏஇஎஸ் என்கிரிப்ஷனை வழங்கும் இந்த சாம்சங் எஸ்எஸ்டி-க்குள் உள்ள மென்பொருளானது, முதல்முறையாக ஒரு கணினியுடன் கனெக்ட் செய்யும் போது தானாகவே இயங்கும் மென்பொருளை கொண்டுள்ளது. அந்த நேரத்தில் பாஸ்வேர்ட்-ஐ செட் செய்யும்படியும் கேட்கும். அது ஆப்ஷனல் தான்; ஆனால் செட் செய்வது நல்லது. டி7 ஷீல்டில் உள்ள 10ஜிபிபிஎஸ் யூஎஸ்பி-சி 3.2 (ஜென் 2) போர்ட் ஆனது மற்ற சாம்சங் ட்ரைவ்களை போலவே வேகமான செயல்திறனை வழங்குகிறது. அதாவது ரீட் சைடில் (Read side) 1,050MB/s வேகத்திலும், ரைட் சைடில் (Write side) 1,000MB/s வேகத்திலும் செயல்படும். சிறிய கோப்புளாக இருந்தாலும் சரி அல்லது பெரிய கோப்புகளாக இருந்தாலும் சரி நீங்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டி இருக்காது.
இன்னும் குறிப்பிட்டு சொல்லப்போனால் கிட்டத்தட்ட 5,000 தனித்தனி கோப்புகள் மற்றும் கிட்டத்தட்ட 200 சப் ஃபோல்டர்களை கொண்ட மெயின் ஃபோல்டரை ஒரு நிமிடத்திற்குள் டிரான்ஸ்பர் செய்ய முடியும். மேலும் 10 ஜிபி அளவிலான தனிப்பட்ட ஃபைல் ஒன்றை 18 வினாடிகளில் டிரான்ஸ்பர் செய்ய முடியும். மேலும் டிரான்ஸ்பர் செய்யும் போது ஹீட்டிங் (Heating) போன்ற சிக்கலும் இருக்காது!
விலை, கலர் ஆப்ஷன்கள் மற்றும் விற்பனை விவரங்கள்: இது வெவ்வேறு ரசனைகளை கொண்டவர்களை தேவையை பூர்த்தி செய்யும்படி நீலம், சாம்பல் மற்றும் சிவப்பு என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். 4டிபி பிஎஸ்எஸ்டி டி7 ஷீல்டின் விலை இந்திய மதிப்பின்படு ரூ.30,000 முதல் 35,000 வரை இருக்கும். இது அனைத்து சாம்சங் ரீடெய்ல் ஸ்டோர்களிலும், முன்னணி நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் கடைகளிலும், சாம்சங்கின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர் ஆன சாம்சங் ஷாப் வழியாகவும் வாங்க கிடைக்கும்.
சாம்சங் டி7 ஷீல்ட்டை நம்பி வாங்கலாமா? கண்டிப்பாக! ஏனென்றால் சாம்சங் டி7 ஷீல்ட் என்பது தத்தம் துறையில் சிறப்பாக செயல்பட விரும்பும் நிபுணர்களுக்கான ஒரு சரியான தேர்வாகும். அதே சமயம் சாதாரண பயனர்களுக்கும் கூட இது ஒரு சிறந்த தேர்வாகும். இதன் டிசைன், ட்யூரயிலிட்டி, பெர்ஃபார்மென்ஸ் போன்றவைகளை வைத்து பார்க்கும் போது இதை ஒரு லைஃப்-டைம் எஸ்எஸ்டி என்றே கூறலாம்!


Click it and Unblock the Notifications








