Home
Gadgets

எவன் சொன்னது? ரூ.25000 க்கு தான் நல்ல TV கிடைக்கும்னு.. ரூ.15000 போதும்.. அசர வைக்கும் 6 டிவிகள் இதோ!

முழுதாக ரூ.25,000 எடுத்து வைத்தால் தான் ஒரு நல்ல ஸ்மார்ட் டிவியை (Smart TV) வாங்க முடியும் என்று யாராவது உங்களிடம் கூறி இருந்தால்.. அவர்களின் வார்த்தைகளை அப்படியே காற்றில் பறக்க விட்டுவிடுங்கள். ஏனென்றால் அதெல்லாம் பழைய கதை; இப்போது நிலைமையே வேறு!

இப்போதெல்லாம் ரூ.15,000 இருந்தால் போதும்.. ஒன்றல்ல, இரண்டல்ல 20-க்கும் மேற்பட்ட தரமான ஸ்மார்ட் டிவிகளை இந்திய சந்தையில் வாங்க முடியும். அவைகளில் "சிறந்தவைகளுள் சிறந்தது" (The Best of the Best) என்று சில ஸ்மார்ட் டிவிகள் உள்ளன. அப்படியான 6 பெஸ்ட் ஸ்மார்ட் டிவிகளை தான் இங்கே பட்டியலிட்டோம்!

ரூ.15,000 க்குள் வாங்க கிடைக்கும் 6 பெஸ்ட் ஸ்மார்ட் டிவிகள்!

01. ரெட்மி ஸ்மார்ட் ஃபையர் டிவி: இந்த பட்டியலின் முதல் இடத்தில் இருப்பது, சமீபத்தில் 32-இன்ச் டிஸ்பிளேவுடன் இந்தியாவில் அறிமுகமான ரெட்மி ஸ்மார்ட் ஃபையர் டிவி (Redmi Smart Fire TV) தான். பெரும்பாலான பட்ஜெட் வாசிகளின் கவனத்தை ஈர்க்கும்படி உள்ளது. ஏனென்றால் இதன் விலை வெறும் ரூ.13,999 மட்டுமே ஆகும்.

ரெட்மியின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட் டிவியானது அமேசானின் ஃபையர் ஓஎஸ் 7 உடன் வருகிறது. அதாவது இந்த டிவியில் உள்ள ஃபையர் டிவி ஆப் ஸ்டோரின் வழியாக 12000-க்கும் மேற்பட்ட ஆப்களை அணுக முடியும். மேலும் இது அமேசான் ஏஐ அலெக்சாவையும் ஆதரிக்கிறது. அதாவது டிவி வழியாக பல்புகள், ஏசி, ஃபேன் மற்றும் பல ஸ்மார்ட் ஹோம் டிவைஸ்களை கண்ட்ரோல் செய்ய முடியும்.

02. ஒன்பிளஸ் 32 இன்ச் ஒய் சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி: ரூ.14,499 க்கு வாங்க கிடைக்கும் இந்த ஒன்பிளஸ் டிவியானது பெஸல்லெஸ் டிசைனை பெற்றுள்ளது, மேலும் எச்டி டிஸ்ப்ளே, 2 எச்டிஎம்ஐ போர்ட்ஸ், டால்பி அட்மோஸால் ட்யூன் செய்யப்பட்டு 20W ஸ்பீக்கர்ஸ், ஆண்ட்ராய்டு டிவி 11 ஓஎஸ் போன்ற முக்கிய அம்சங்களையும் வழங்குகிறது.

03. ரெட்மி 32 இன்ச் ஆண்ட்ராய்டு 11 சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் டிவி: ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கும் இந்த ரெட்மி டிவியானது 1366x768 பிக்சல் ரெசல்யூஷனை கொண்ட எச்டி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும் இது 2 எச்டிஎம்ஐ போர்ட்ஸ், 20W ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் பில்ட்-இன் க்ரோம்காஸ்ட் (Chromecast), 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் போன்றவைகளை வழங்குகிறது.

04. ஒனிடா 32 இன்ச் HD ரெடி ஸ்மார்ட் ஃபயர் டிவி: ரூ.12,990 க்கு வாங்க கிடைக்கும் இந்த ஒனிடா ஃபையர் டிவியானது (லேட்டஸ்ட்) ரெட்மி ஸ்மார்ட் ஃபையர் டிவி-க்கான நேரடி போட்டியாளராகும். இது எச்டி டிஸ்ப்ளே, 3 எச்டிஎம்ஐ போர்ட்ஸ், அலெக்சா ஆதரவுடன் கூடிய வாய்ஸ் ரிமோட், மியூட்லிகோர் ப்ராசஸர், 1.5 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜை வழங்குகிறது.

05. தோஷிபா 32 இன்ச் வி சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி: ரூ.13,990 க்கு வாங்க கிடைக்கும் இந்த தோஷிபா 32 இன்ச் ஸ்மார்ட் டிவியானது பெஸல்லெஸ் டிஸைனுடன் வருகிறது. மேலும் 2 எச்டிஎம்ஐ போர்ட்ஸ், 16W ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் கூடிய எச்டி டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு டிவி 11 ஓஎஸ் போன்ற அம்சங்களையும் பேக் செய்கிறது.

06. ஏசர் 40 இன்ச் பி சீரிஸ் ஃபுல் எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி: ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கும் இந்த ஏசர் டிவி ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் இல்லையென்றாலும் கூட, இது 40-இன்ச் டிஸ்பிளேவுடன் வருவதால், கூடுதலாக ரூ.2000 செலவு செய்து இந்த டிவியை வாங்குவதையும் நீங்கள் கருத்தில் கொள்ளலாம்.

இது 1.5ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட குவாட்-கோர் ப்ராசஸர், 8ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு டிவி 11 ஓஎஸ், ஃபுல் எச்டி டிஸ்ப்ளே மற்றும் டால்பி ஆடியோ ஆதரவுடனான 24W ஹை ஃபெடிலிட்டி (High Fidelity) ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. வழக்கமான 32 இன்ச் டிவிக்கு பதிலாக சற்றே பெரிய டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட் டிவியை தேடுபவர்களுக்கு இதுவொரு பெஸ்ட் ஆப்ஷன்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Who Told Good Smart TVs Are Very Expensive Check out These 6 Best Smart TV Under Rs 15000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X